கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மீனாட்சி அம்மன் கோவில் தீவிபத்து வழக்கு தள்ளுபடி

Added : ஏப் 15, 2019 | கருத்துகள் (5)
Advertisement
வழக்கு  , மதுரை , மீனாட்சி கோவில் ,தீவிபத்து, தள்ளுபடி

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த ஆண்டு ஏற்பட்ட தீவிபத்து எதிர்பாராத ஒன்று எனக் கூறிய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழக்கை தள்ளுபடி செய்தது.

மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில் அமைந்துள்ள 30க்கும் மேற்பட்ட கடைகளில் கடந்த 2018 ஆம் ஆண்டு தீவிபத்து ஏற்பட்டது. இந்த வழக்கு இன்று (ஏப்.15) விசாரணைக்கு வந்தது. இதனை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் கிருபாகரன் மற்றும் சுந்தர் அடங்கிய நீதிபதிகள் குழு விசாரித்தது.

அப்போது அவர்கள் கூறியதாவது : மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீவிபத்துக்கு தனிநபரை குற்றம் சொல்ல முடியாது. 2018 ஆம் ஆண்டில் பிப்ரவரி 2ஆம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மிகப்பெரும் தீவிபத்து ஏற்பட்டதற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம். கோவில் செயல் அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து எதிர்பாராத ஒன்று எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
16-ஏப்-201909:05:16 IST Report Abuse
Bhaskaran அவர்களுக்கு சிறப்புதரிசனம் பரிவட்டம் உண்டு ,இனி கோவிலின் மற்றபகுதியில்வைத்திருக்கும் தீத்தடுப்பு பொருட்களை பராமரிக்கமாட்டார்கள் சுவமிசன்னதி படி சுவற்றில் பூச்சு விழுந்து பலநூற்றாண்டுகளுக்குமுன் கட்டப்பட்ட செங்கல் தெரிகிறது அதனை பூச்சு பூசவக்கில்லாத அறநிலையத்துறை நிர்வாகம் வசூலில் மட்டும் குறியாக இருக்கின்றனர்
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
16-ஏப்-201905:56:40 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் தண்ணி ஊத்தி அணைச்சிட்டாங்க..
Rate this:
Share this comment
Cancel
Darmavan - Chennai,இந்தியா
15-ஏப்-201921:29:16 IST Report Abuse
Darmavan எப்போதும் உயர் நீதிகள் உச்ச நீதி என்ன நிலையில் உள்ளனர் என்று பார்க்கும் .அது கொடுக்கும் சிக்கனலுக்கு ஏற்றாற்போல் இதுவும் தீர்ப்பு கொடுக்கும் எனவே இந்த தள்ளுபடி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X