மீனாட்சி அம்மன் கோவில் தீவிபத்து வழக்கு தள்ளுபடி| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மீனாட்சி அம்மன் கோவில் தீவிபத்து வழக்கு தள்ளுபடி

Added : ஏப் 15, 2019 | கருத்துகள் (5)
வழக்கு  , மதுரை , மீனாட்சி கோவில் ,தீவிபத்து, தள்ளுபடி

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த ஆண்டு ஏற்பட்ட தீவிபத்து எதிர்பாராத ஒன்று எனக் கூறிய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழக்கை தள்ளுபடி செய்தது.

மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில் அமைந்துள்ள 30க்கும் மேற்பட்ட கடைகளில் கடந்த 2018 ஆம் ஆண்டு தீவிபத்து ஏற்பட்டது. இந்த வழக்கு இன்று (ஏப்.15) விசாரணைக்கு வந்தது. இதனை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் கிருபாகரன் மற்றும் சுந்தர் அடங்கிய நீதிபதிகள் குழு விசாரித்தது.

அப்போது அவர்கள் கூறியதாவது : மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீவிபத்துக்கு தனிநபரை குற்றம் சொல்ல முடியாது. 2018 ஆம் ஆண்டில் பிப்ரவரி 2ஆம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மிகப்பெரும் தீவிபத்து ஏற்பட்டதற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம். கோவில் செயல் அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து எதிர்பாராத ஒன்று எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X