மோடிக்கு ஓட்டளியுங்க: தமிழக பத்திரிகையாளர்கள் வேண்டுகோள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மோடிக்கு ஓட்டளியுங்க: தமிழக பத்திரிகையாளர்கள் வேண்டுகோள்

Updated : ஏப் 16, 2019 | Added : ஏப் 15, 2019 | கருத்துகள் (122)

சென்னை: 5 ஆண்டுகளில் பல துறைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்திய மோடியே மீண்டும் பிரதமராக மக்கள் ஓட்டளிக்க வேண்டும் என தமிழக மூத்த பத்திரிகையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சென்னையில் பிரபல பத்திரிகையாளர்கள், தமிழறிஞர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்ற முக்கிய கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் மேஜர் ஜெனரல் பத்மநாபன், முன்னாள் டிஜிபி பாலச்சந்தர், எழுத்தாளர் மாலன், டாக்டர்.சரஸ்வதி ராமநாதன், பதிப்பாளர் பத்ரிசேஷாத்திரி, தமிழ்நாடு மருத்துவ சங்க தலைவர் சிவிரிரெட்டி, தமிழ்நாடு இஸ்லாமிய ஜமாத் தலைவர் முகம்மது பெரோஸ்கான், டாக்டர் ஆண்டாள் சொக்கலிங்கம், சுப்பு, டாக்டர் நாகசாமி, விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், மீனவர் பேரவை தலைவர் அன்பழகன் மற்றும் பலர் பங்கேற்றனர்.


கூட்டத்தில் பங்கேற்றவர்கள் விவரம் வருமாறு:


விஞ்ஞானிகள்


கிருஷ்ணன்(இஸ்ரோ), துரைராஜ்(இஸ்ரோ), ராமநாதன்(டிஆர்டிஓ)நீதித்துறையை சேர்ந்த நீதிபதி ஆறுமுகம், சதீஸ்குமார், விஸ்வநாதன், தமிழறிஞர்கள்: ராமச்சந்திரன், பசுபதி, தியாராசன், பழநியப்பன், ராமமூர்த்தி, ராமச்சந்திரன், ராஜகுமார், தில்லை கார்த்திகேயம் சிவம், ராமசாமி, ஜெகன்னாதன், தியாகராஜன், சம்பத், சந்திரகுமார், மாது.கல்வியாளர்கள்: சுப்பிரமணியன், பாலசுப்ரமணியன், சுந்தர், ராமச்சந்திரன், உஷா மகாதேவன், திருமாமகள் கண்ணன், சுப்பராயலு.


சமூக ஆர்வலர்கள்


சமூக ஆர்வலர்கள் முத்துராமன், ராஜாராம், தியாகராஜன் வேணுகோபால், வக்கீல் விஜயஸ்ரீரமேஷ், கர்நாடக இசைகலைஞர்கள், சேஷகோபாலன், சந்தானகிருஷ்ணன், காயத்திரி வெங்கட்ரமான், கீபோர்டு சத்யா, திரைத்துறையை சேர்ந்த கிஷிசி, மதுவந்தி அருண் .ஊடகவியலாளர்கள்: சங்கர சுப்பிரமணியன், நடராசன், கோலாகல சீனிவாஸ், ஸ்ரீராம், கிருஷ்ணன், ஜெயகிருஷ்ணன், ஸ்ரீனிவெங்கடேஷ்.


கவிஞர்கள்:


சேது கோபிநாத், நந்தலாலா, வீரராகவன்,


அரசியல் விமர்சர்கள்:


பானு கோம்ஸ், சூரியத்தமிழன், ரங்கநாதன்.


தொல்லியல் அறிஞர்கள்

ராமச்சந்திரன், சத்தியமூர்த்தி.


எழுத்தாளர்கள்


சிவசங்கரி, மகாதேவன், சூரியகுமார், காசிவேலு, சிவசக்தி பாலன். உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


மோடிக்கு ஏன் ஓட்டு ?


கூட்டத்தின் முடிவில் பிரதமர் மோடி அவர்கள் மீண்டும் பிரதமராக, மக்கள் வாக்களிக்க வேண்டுமென, பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். அறிக்கையில் உள்ள விவரம் வருமாறு:


பெண்களின் வாழ்க்கை தரம் உயர்வு


பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. பா.ஜ., தலைமையிலான ஆட்சியில், நாட்டில், பல துறைகள் முன்னேற்றம் அடைந்துள்ளன. சாமானிய மக்கள், குறிப்பாக பெண்களின் வாழ்க்கை தரம் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.


பொருளாதார முன்னேற்றம்


ஊழலை ஒழிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் நல்ல பலனை அளித்துள்ளன. ஆயுஷ்மான் பாரத் திட்டம், உலகின் மிகப்பெரிய பாதுகாப்புத்திட்டமாக திகழ்கிறது. பொருளாதார முன்னேற்றத்தில், உலகின் ஆறாவது இடத்தில் இந்தியா உள்ளது. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை துவங்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. தமிழக நகரங்களான காஞ்சி, வேளாங்கண்ணி, புனித நகரங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. உள்நாட்டு, வெளிநாட்டு பாதுகாப்பு மிகச்சிறப்பாக உள்ளது.


நல்லாட்சி தொடர வேண்டும்


2022க்குள் அனைவருக்கும் வீடு கிடைப்பதற்கான நடவடிக்கை துரிதமாக்கப்பட்டுள்ளது. நல்லாட்சி நடத்திய பிரதமர் மோடியின் ஆட்சி மீண்டும் தொடர வேண்டும். நாட்டு மக்கள் மீது அக்கறை கொண்டவரும், எவ்வித குற்றச்சாட்டுக்கும் ஆளாகாதவருமான மோடி, மீண்டும் இந்திய பிரதமராக வருவதற்கு, தமிழக மக்கள் ஓட்டளிக்க வேண்டும் என தமிழக வாக்காளர்களை கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X