பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : ஏப் 15, 2019
Advertisement
 இதே நாளில் அன்று


2010 ஏப்.,16

சி.கே.பிரகலாத்: சென்னையில், 1941 ஆக., 8ம் தேதி பிறந்தார். லயோலா கல்லுாரியில், இளங்கலையும், குஜராத் மாநிலம், ஆமதாபாதில் மேற்படிப்பும் நிறைவு செய்தார். அமெரிக்காவில் உள்ள, ஹார்வர்டு பல்கலையில், முனைவர் பட்டம் பெற்றார். தான் படித்த, ஆமதாபாத், இந்திய மேலாண்மைக் கழகத்தில், பேராசிரியராக பணியாற்றினார். பின், அமெரிக்காவில் உள்ள, மிச்சிகன் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து, சிறந்த நிர்வாக ஆசிரியர் என, பெயர் பெற்றார்.

சந்தைப் போட்டியில் வீழ்ச்சியடைந்த, பல நிறுவனங்களை, தன் திறமையால் காப்பாற்றினார்.வணிகம் சார்ந்த நிர்வாகவியல் பற்றி, இவர் எழுதிய, 'தி பார்ச்சூன் அட் தி பாட்டம் ஆப் தி பிரமிட்' புத்தகம், பெரும் வரவேற்பை பெற்றது. அமெரிக்க வாழ் இந்தியராக இருந்த இவருக்கு, 2009ல், இந்திய அரசு, பத்மபூஷன் விருது அளித்து, கவுரவித்தது. 'கோர் காம்பிட்டன்ஸ்' என்கிற, 'மைய போட்டித் திறன்' நிர்வாக கருத்தின் தந்தை என்றழைக்கப்பட்ட, சி.கே.பிரகலாத், ௨௦௧௦, ஏப்., ௧௬ல் காலமானார். அவர் இறந்த தினம் இன்று!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X