சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : ஏப் 15, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement
 'டவுட்' தனபாலு

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி: சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டம் உறுதியாக நிறைவேற்றப்படும்; இதில், முதல்வர், இ.பி.எஸ்., ஆர்வமாக உள்ளார்.

டவுட் தனபாலு: மிகவும் துணிச்சலாக முடிவெடுத்து, பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., 'நீட்' உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்ட, மத்திய அரசு, தேர்தல் பிரசாரத்தில், இந்த விவகாரங்களில் பெருமை தேடாமல் இருக்கு... தமிழக அரசோ, இதில், எட்டு வழி சாலை திட்டத்தையும் சேர்த்திருக்கு... இந்த நிலையில், சேலத்தில், முதல்வரை அருகில் வைத்தபடியே இப்படி பேசுறீங்களே... இதுல ஏதும், உள்குத்து இருக்குமோ என்ற, 'டவுட்' வருதே...!

***

ச.ம.க., தலைவர் சரத்குமார்: எதிர்க்கட்சிகளை குறி வைத்துதான், வருமான வரி சோதனை செய்கிறது என்பது தவறான குற்றச்சாட்டு. தகவலின்படி, அதிகாரிகள் சோதனை செய்கின்றனர். என் வீட்டிலும் சோதனை நடந்துள்ளது.

டவுட் தனபாலு: வெறும் பிரசாரத்துக்கு கூட்டு சேர்ந்ததற்கே, இவ்வளவு முட்டுக் கொடுக்குறீங்களே... உங்க வீட்டில் சோதனை நடந்ததற்கு முதல்நாள், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தினகரனுக்கு ஆதரவு தெரிவித்திருந்தீங்க... இப்போ, அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு தெரிவித்து, பல நாட்கள் ஆச்சு... ஏன் இன்னும் அதிகாரிகளுக்கு தகவல் போகாமல் இருக்கு என்ற, 'டவுட்'டுக்கு, என்ன பதில் சொல்வீங்க...!

***

இ.கம்யூ., கட்சியின் தேசிய செயலர், டி.ராஜா: தேசிய அரசியலிலும், மாநில அரசியலிலும் மாறுபட்டு கட்சிகள் கூட்டணி அமைத்திருப்பதை, பெரிய முரண்பாடாகக் கருதக் கூடாது.

டவுட் தனபாலு: இங்கொரு பேச்சு, அங்கொரு பேச்சுன்னு இருப்பவர்கள், அரசின் எந்த விவகாரத்திலும் ஒருமித்த கருத்துக்கு எப்படி வருவாங்க... மக்களுக்கு நலனா, கட்சிக்கு பலனான்னு வந்தால், நீங்க எந்தப் பக்கம் நிற்பீங்க என்பது தான், 'டவுட்'டே இல்லாமத் தெரிஞ்சிடுச்சே...!

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Abdul Rahman - Madurai,இந்தியா
17-ஏப்-201908:46:12 IST Report Abuse
Abdul Rahman கம்ம்யூனிஸ்ட் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டியவர்கள். கம்யூனிசம் தோன்றிய சீனாவிலேயே அது தோற்றுவிட்டது.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
16-ஏப்-201911:53:56 IST Report Abuse
Bhaskaran மக்களின் விருப்பதுக்குமாறாக சேலம் எட்டுவழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றமாட்டோம் நீதிமனஉத்தரவுக்கு பணிவோம் என்று சொல்லியிருந்தால் பழனியின் இமேஜ் கூடியிருக்கும்
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
16-ஏப்-201911:52:05 IST Report Abuse
Bhaskaran நாட்டாமையை திமுக கண்டுகொண்டிருந்தால் தூத்துக்குடியில் ஒரு மாதம் கேம்ப் அடித்திருப்பார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X