பதிவு செய்த நாள் :
'நோட்டீஸ்!'
'ரபேல்' போர் விமான வழக்கில் ராகுலுக்கு...
தீர்ப்பை திரித்து கூறியதற்கு கோர்ட் கண்டனம்

புதுடில்லி: 'ரபேல்' போர் விமான ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் அளித்த தீர்ப்பை திரித்து கூறியதாக, காங்., தலைவர் ராகுலுக்கு, உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, 22க்குள் விளக்கம் அளிக்கும்படி, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

ரபேல்,போர் விமானம்,வழக்கு,ராகுல், சுப்ரீம் கோர்ட்,நோட்டீஸ்,கோர்ட்,கண்டனம்


ஐரோப்பிய நாடான, பிரான்சிடம் இருந்து, ரபேல் ரக போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தன. இந்த ஒப்பந்த நடைமுறையில் மோசடி நடந்துள்ளதாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதை விசாரித்த, உச்ச நீதிமன்றம், 'ரபேல் போர் விமானம் வாங்கும் ஒப்பந்தத்தில், முறைகேடுகள் நடந்ததாக எந்த ஆதாரமும் இல்லை' என, தீர்ப்பு அளித்திருந்தது.

இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அப்போது, இந்த ஒப்பந்தம் தொடர்பாக, பத்திரிகைகளில் வெளியான சில ஆவணங்களும், மனுவில் சேர்த்து, தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. 'இந்த ஆவணங்கள், ராணுவ அமைச்சகத்தில் இருந்து, திருட்டுத்தனமாக நகல் எடுக்கப்பட்டவை; இது, நாட்டின் பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும்' என, மத்திய அரசு கூறியது. இது தொடர்பாக, ஏப்., 10ல் விசாரித்த, உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் வாதத்தை நிராகரித்தது. அந்த ஆவணங்கள், விசாரணைக்கு ஏற்கப்படும் என, கூறியது.

கருத்து:


இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம், அமேதியில் போட்டியிட, ராகுல், வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது, பத்திரிகையாளர்களை சந்தித்த அவர்,

இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது, அவர் கூறியதாவது: நாட்டின் காவல்காரன் என கூறும், பிரதமர் நரேந்திர மோடி, ஒரு திருடன் என்பதை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. நம் விமானப் படையின் பணத்தை, தொழிலதிபர், அனில் அம்பானிக்கு கொடுக்க, மோடி முயற்சிக்கிறார் என்பதை, உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது. இது தொடர்பாக, உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது; இது மகிழ்ச்சி அளிக்கிறது. நீதி வெல்லும். இவ்வாறு, அவர் கூறினார்.

இந்நிலையில், 'ராகுலின் பேச்சு, நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்' என, டில்லியைச் சேர்ந்த, பா.ஜ., - எம்.பி., மீனாட்சி லேகி, உச்ச நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்து உள்ளார். இதை விசாரித்த, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, நேற்று கூறியதாவது: ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான சீராய்வு மனுவை விசாரணைக்கு ஏற்கும் வழக்கில், இந்த நீதிமன்றம் எந்தக் கருத்தையும் கூறவில்லை. ஆனால், தன் சொந்தக் கருத்துகளை, நீதிமன்றம் கூறியதுபோல், ராகுல் திரித்து கூறியுள்ளார்; இது, நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்.

எந்த வழக்கிலும், நீதிமன்றம் கூறும் கருத்துக்களை, தீர்ப்புகளை மட்டுமே, தங்கள் பேட்டியில், அறிக்கையில், அரசியல் தலைவர்கள் கூற வேண்டும். நீதிமன்றம் கூறாததை, நீதிமன்றம் கூறியதுபோல் திரித்து கூறக் கூடாது. இவ்வாறு நீதிமன்றத்துக்கு தவறான பெயரை ஏற்படுத்தும் வகையில், ராகுல் பேசியுள்ளார். இது தொடர்பாக, 22க்குள் பதில் அளிக்கும்படி, அவருக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்படும். வரும், 23ல் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இவ்வாறு, அமர்வு கூறியுள்ளது.

அரசியல் லாபம்:


இது குறித்து, மீனாட்சி லேகி கூறியதாவது: அரசியல் சாசனம் மீதோ, ஜனநாயக மாண்புகள் மீதோ, நம்பிக்கை இல்லாதவர், எப்படி பார்லிமென்ட் உறுப்பினராக இருக்க முடியும்! பொய்யான அரசியல் லாபத்துக்காக, நீதிமன்றம் கூறியதாக, பிரதமர் மீது, பொய்யான தகவல்களை கூறியுள்ளார். தங்கள் ஆட்சியில் நடந்த ஊழல்களை மறைப்பதற்காக, ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக, பொய்யான தகவல்களை, ராகுல் கூறி வருகிறார்.

Advertisement

ராகுல் உட்பட, அவரது குடும்பத்தில், மூன்று பேர், பல்வேறு வழக்குகளில் முன், 'ஜாமினில்' உள்ளனர். ஆனால், இவர்கள் நேர்மை குறித்து பேசுகின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.

நீதிமன்றம் கூறிய கருத்து குறித்து, தெரிவித்துள்ள, காங்., மூத்த தலைவரும், வழக்கறிஞருமான, கபில் சிபல், ''நீதிமன்றத்தின் கேள்விக்கு பதில் அளிக்கப்படும்,'' என்றார். லோக்சபாவுக்கு தேர்தல் நடக்கும் நிலையில், பிரதமர் மீது பொய்யான குற்றச்சாட்டை ராகுல் கூறி வந்துள்ளது, நிரூபணமாகியுள்ளது. தீர்ப்பையே திருத்தி கூறியுள்ளதாக, அவர் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது, காங்கிரசுக்கு, பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

'இஷ்டத்துக்கு திரிக்க வேண்டாம்'

பிரதமர் பற்றி, ராகுல் தெரிவித்த கருத்து குறித்து, மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அருண் ஜெட்லி கூறியதாவது: சுயலாப அரசியல் பிரசாரத்திற்காக, நீதிமன்றத்தின் உத்தரவுகளை, காங்கிரஸ் தலைவர் ராகுல் தயாரிக்க துவங்கி விட்டார். இதன் மூலம், அவர், மிகவும் தரம் தாழ்ந்துவிட்டார். ராகுல், மென்மேலும் தரம் தாழ்ந்து மூழ்க மூழ்க, நாங்கள், மென்மேலும் மேல் எழுந்து வருவோம். பேச்சு உரிமை என்பது, ராகுலின் அரசியல் அரிச்சுவடியில், பொய்களைப் பேசுவதற்கான உரிமையோ என, நினைக்கத் தோன்றுகிறது. ராஜ குடும்பங்களாகவே இருந்தாலும், நம் நாட்டில் அவை, சட்ட திட்டங்களுக்கு உட்பட்டவையே. எனவே, நீதிமன்றம் அளிக்கும் உத்தரவு களை, தங்கள் இஷ்டம்போல, திரித்து, மாற்றி, எழுதிக் கொள்வதற்கு, நம் ஜனநாயகம் அனுமதிப்பதில்லை. உண்மை தான் நிலைத்து நிற்கும். பொய் வீழ்ந்தே தீரும். பொதுவெளியில் எவ்வாறு பேச வேண்டுமென்ற அடிப்படை ஆரம்ப பாடத்தை, ராகுல் கற்க வேண்டியது அவசியம். இவ்வாறு, அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (12+ 68)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
16-ஏப்-201923:13:49 IST Report Abuse

Manianநான் ஒங்க வள்ளுவர் சொன்னதைதானே செய்தேன்- "பொய்மையும் வாய்மை இடத்த புறை தீர் நன்மை பயக்குமெனின் " - தன் குடும்பத்துக்கு நம்மை தரும் என்றால், ஒரு பொய் கூட உண்மையாகிவிடுமே- உங்கள் ஆஸ்தான தமிழ் செம்மல் கருணா சொன்னதைத்தான் செய்தேன். அவர்காலத்திலேயே இதெல்லாம் சகஜம்தானே. இப்போ திருடர்கள் கழகத்தோடு தொடர்பு வைத்திருக்கும் பொது, அதை செய்வதில் என்ன தப்பு? நிங்களும் சுமார் 70 -80 % ஓட்டுக்கு காசு வாங்கிடுதானே ஒட்டு போடுறீங்க. அப்போ, நியாயாத்தை பத்தி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கு? நான் உண்மை பேசினால் இந்தியா மாறிடுமா? 136 கோடி ஜனங்கள் 30 கோடியா குறைவனுகளா? போலி படிப்பு சாமியார்களுக்கு யாரு ஓடியாந்து வேலை கொடுப்பானுக? பச்சை துண்டார் எழுதி கொடுத்ததை படித்தேன்ராகுல் குழு. -

Rate this:
BJPKAARAN - Coimbatore,இந்தியா
16-ஏப்-201918:47:04 IST Report Abuse

BJPKAARANதேர்தல் தோல்விக்குப்பின் இத்தாலியில் சில வருடம் ரெஸ்ட்.

Rate this:
BJPKAARAN - Coimbatore,இந்தியா
16-ஏப்-201918:44:48 IST Report Abuse

BJPKAARANஇவர்கள் ஆவணங்களை (திருட்டு) திருடுவதில் கைதேர்ந்தவர்கள் போலல்லவா தெரிகிறது. இவர்களுக்கு திருடி கொடுத்த அதிகாரி யாரோ? அவருக்கு எவ்வளவு கொடுத்தார்களோ?

Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X