பதிவு செய்த நாள் :
ஓட்டுக்கேற்ப கிராமங்களுக்கு வசதி;
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய மேனகா

சுல்தான்பூர்: ''எனக்கு எந்த கிராமத்தில் அதிக ஓட்டு கிடைக் கிறதோ, அங்கு முன்னுரிமை அடிப்படையில் வசதிகளை செய்து தருவேன்,'' என, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர், மேனகா தெரிவித்தது, சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஓட்டுக்கேற்ப,கிராமங்களுக்கு,வசதி,சர்ச்சை,மேனகா


உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள சுல்தான்பூர் லோச்சபா தொகுதியில், பா.ஜ., சார்பில், மேனகா போட்டியிடுகிறார். அவர், சமீபத்தில், 'முஸ்லிம்கள் எனக்கு ஓட்டளிக்காவிட்டாலும், வெற்றி பெறுவேன் என்பதால், என் தயவு தேவை என்பதை, அவர்கள் மறக்கக் கூடாது' என, எச்சரித்தார்.

மேலும், 'எனக்கு ஓட்டளிக்காத முஸ்லிம்கள், வேலை உதவி கேட்டு வரவேண்டாம்' என்றும் கூறினார். இதனால் எழுந்த சர்ச்சையை அடுத்து, மேனகாவிடம் விளக்கம் கேட்டு, தேர்தல் ஆணையம், 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.

இந்நிலையில், சுல்தான்பூர் தொகுதியில் நேற்று நடந்த தேர்தல் பிரசாரத்தில், மேனகா கூறியதாவது: என் மகன் வருண் போட்டியிடும், பிலிப்பிட் தொகுதியில், நாங்கள் தொடர்ந்து வென்று வருகிறோம். அங்கு, பா.ஜ.,வுக்கு அதிக ஓட்டளித்த கிராமங்களை, 'ஏ, பி, சி, டி' என, தரம் பிரித்து உள்ளோம். திட்டங்களை செயல்படுத்தும்போது, அதிக அளவில், பா.ஜ.,வுக்கு ஓட்டளித்த, 'ஏ' கிராமங்களுக்கு முதலிடம் அளிக்கப்படுகிறது. அடுத்து தான், 'பி, சி, டி' கிராமங்களுக்கு வசதி கிடைக்கிறது.

இதேபோல, சுல்தான்பூரிலும், எனக்கு அதிக அளவில் ஓட்டு போட்ட, கிராமங்கள், தேர்தலுக்கு பின், 'ஏ, பி, சி, டி' என, பிரிக்கப்பட்டு, அரசு திட்டங்களில் முன்னுரிமை வழங்கப்படும். அனைத்து மக்களுக்கும் நன்மை

Advertisement

செய்யவே, தேர்தலில் போட்டியிடுகிறேன். அதனால், எனக்கு குறைவாக ஓட்டளித்து, 'டி' பிரிவில் யாரும் சேரவேண்டாம் என்பதே, என் வேண்டுகோள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

வெற்றி பெற்ற வேட்பாளர்கள், பதவிப் பிரமாணத்தின்போது, 'அனைத்து மக்களின் நல்வாழ்வுக்காக, விருப்பு, வெறுப்பின்றி பாடுபடுவேன்' என, உறுதிமொழி ஏற்கின்றனர். இந்நிலையில், தனக்கு விழும் ஓட்டுகள் அடிப்படையில், கிராமங்களுக்கு வசதி கிடைக்கும் என, மேனகா தெரிவித்து, மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MATHIYALAGAN - Chennimalai,இந்தியா
16-ஏப்-201918:40:22 IST Report Abuse

MATHIYALAGANமிக கேவலமான பிச்சைக்காரி

Rate this:
ரத்தினம் - Muscat,ஓமன்
16-ஏப்-201916:01:06 IST Report Abuse

ரத்தினம்யார் பொறுக்கி என்பதை ஆராய்ந்து பாருங்கள். எனக்கு ஓட்டு போட்டால் முன்னுரிமையில் வசதிகள் செயது கொடுப்பேன் என்பது தவறு என்றால் இருபது ரூபா அட்வான்ஸ் டோக்கன் கொடுப்பவர்களை , திருமங்கலம் பார்முலா அறிமுகம் செய்தவர்களை , கவர்மெண்டு துட்டில் தான் கொடுத்தது மாதிரி டிவி கொடுத்து மக்களை சீரழித்த கயவர்களை இவர்களது கட்சியை ஆதரிக்கிற ஆட்டு மந்தை முட்டாள் கூட்டத்தையும் என்ன வார்த்தையில் அர்ச்சனை செய்ய வேண்டும்?

Rate this:
Jani Syed Ibrahim - Madurai,இந்தியா
16-ஏப்-201912:42:41 IST Report Abuse

Jani Syed Ibrahimஇவர் என்ன பொம்பளையா பொறுக்கியா இவர் எப்படி பொது வாழ்வுக்கு வந்தார்.

Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X