அரசியல் செய்தி

தமிழ்நாடு

வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து?

Updated : ஏப் 16, 2019 | Added : ஏப் 16, 2019 | கருத்துகள் (56)
Advertisement

சென்னை: துரைமுருகன் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில், வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி, கோடிக்கணக்கான ரூபாயை பறிமுதல் செய்ததைத் தொடர்ந்து, தேர்தல் ரத்து செய்யப்பட உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.


தி.மு.க., பொருளாளர் துரைமுருகனின் மகன், கதிர் ஆனந்த், வேலுார் லோக்சபா தொகுதியில், தி.மு.க., சார்பில் போட்டியிடுகிறார். துரைமுருகன் வீட்டில், தேர்தலுக்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, கிடைத்த தகவல் அடிப்படையில், மார்ச், 30ம் தேதி, வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.

சோதனையில், 10 லட்சம் ரூபாய் பணம் மட்டும் சிக்கியது. மறுநாள் அதிகாலை, துரைமுருகனுக்கு நெருக்கமான சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான, சிமென்ட் கிடங்கில், வருமான வரி அதிகாரிகள், திடீர் சோதனை நடத்தினர். அங்கு மூட்டைகளில் கட்டி வைக்கப்பட்டிருந்த, கோடிக்கனக்கான மதிப்புள்ள, புத்தம் புது ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது குறித்து, வருமான வரித்துறையினர், தேர்தல் ஆணையத்திற்கு, அறிக்கை அளித்தனர். மாவட்ட தேர்தல் அலுவலர், போலீசார் ஆகியோர் தனித்தனியே அறிக்கை அளித்தனர். அவற்றின் அடிப்படையில், தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, தேர்தல் ஆணையத்திற்கு, அறிக்கை அனுப்பினார்.

வேலுார் தொகுதியில், பட்டுவாடா துவங்குவதற்கு முன், பணம் பறிமுதல் செய்யப்பட்டதால், தேர்தலை ரத்து செய்யலாமா, வேண்டாமா என்று, தேர்தல் ஆணையம் சார்பில், டில்லியில் ஆலோசனை நடந்துள்ளது. இந்த சூழ்நிலையில், நேற்று இரவு, தேர்தல் ரத்து செய்யப்பட உள்ளதாக, தகவல் பரவியது. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை.

ஒருவேளை, வேலுார் லோக்சபா தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படுமானால், அதில் அடங்கிய, குடியாத்தம், ஆம்பூர் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் ரத்தாகி விடும் என, தேர்தல் ஆணைய வட்டாரம் தெரிவித்தது.

Advertisement
வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar Rengarajan - Trichy,இந்தியா
16-ஏப்-201914:33:17 IST Report Abuse
Sridhar Rengarajan உலக மகா உத்தமர் தலைமையில் இயங்கும் தூய்மையான கட்சி திமுகவுக்கு பெரிய இழுக்கை ஏற்படுத்திவிட்டார் துரைமுருகன். ஆகவே அவரை பொருளாளர் பதவியில் இருந்து தூக்கிவிட்டு அவருக்கு பதில் சபரிசனை திமுக பொருளாளர் ஆக்கவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Snake Babu - Salem,இந்தியா
16-ஏப்-201914:31:15 IST Report Abuse
Snake Babu இப்படியே பேசுங்கள். என்ன ஒரு ஏளன பேச்சி இப்படியே பேசுங்கள் தமிழர்கள் ஒட்டு கண்டிப்பாக உங்களுக்கு கிடைக்காது, உங்களுடைய ஆணவப்போக்கே உங்களுக்கு வீழ்ச்சி நன்றி
Rate this:
Share this comment
Cancel
Snake Babu - Salem,இந்தியா
16-ஏப்-201914:29:04 IST Report Abuse
Snake Babu வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து?, தேர்தல் நேர்மையாக இருந்தால் ரத்து ஆகவேண்டும். இங்கு நடப்பது தான் போங்கு ஆட்டம் ஆச்சே………………. எதிராளியை கால உடைச்சாச்சு. தங்களுடைய ஆட்கள் பணம் தான் இப்ப விளையாடுது . தேர்தலில் இந்த செய்தியை வச்சிக்கிட்டு ஓட்டை பொறுக்க போகிறது. Back fire ஆகும். அனைத்து கட்சிகளும் பணத்தை வாரி இறைத்து தான் தேர்தலை சந்திக்கிறது. ஒருத்தனை பிடித்து தன்னுடைய ஆளை வைத்து இதே பட்டுவாடா வேலைய செய்கிறது மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இது தமிழ் நாடு மக்களுக்கு தெரியும் யாருக்கு ஓட்டுபோடவேண்டும் என்று நன்றி வாழ்க வளமுடன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X