அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
இருளில் மிளிரும் பணநாயகம்!
வரப் போகுது மின் தடை;
தரப் போகுது பண மழை

தி.மு.க., ஆட்சியில், மின்துறை அமைச்சராக இருந்த, ஆற்காடு வீராசாமி, அறிமுகப்படுத்திய மின் தடை, பொது மக்களுக்கு தொந்தரவை தந்தாலும், தேர்தலுக்கு தேர்தல், கட்சிகளுக்கு பெரிதும் கைக்கொடுக்கிறது. இரவில், மின் தடையை ஏற்படுத்தி, வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்ய, முக்கிய அரசியல் கட்சியினர் தயாராக உள்ளனர்.

வரப் போகுது,மின் தடை,தரப் போகுது,பண மழை,இருளில்,மிளிரும்,பணநாயகம்


தமிழகத்தில், 2009 லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு, முந்தைய நாள், சென்னை உட்பட, பல பகுதிகளில், திடீரென மின் தடை ஏற்பட்டது. அந்த இருட்டை பயன்படுத்தி, முக்கிய கட்சிகள், ஓட்டுக்காக, வாக்காளர்களுக்கு, பணம் பட்டுவாடா செய்தன. இதேபோல், அதற்கு அடுத்து வந்த தேர்தல்களிலும், கட்சியினர், பணப் பட்டுவாடா செய்ய, தங்கள் பகுதியில் வேண்டுமென்றே, மின் தடையை ஏற்படுத்தினர்.

கட்டாயம்:


கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத, முதல் லோக்சபா தேர்தலை, தமிழக மக்கள் சந்திக்கின்றனர். இந்த தேர்தலுடன், தமிழக அரசின் தலையெழுத்தை நிர்ணயிக்கும், 22 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது. இரு தேர்தலிகளிலும் வென்று, தங்களின் ஆளுமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம், அ.தி.மு.க.,வுக்கு தலைமை ஏற்றுள்ள, முதல்வர், இ.பி.எஸ்., துணை முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு உள்ளது.

இதே மனநிலையில், தி.மு.க., தலைவர் ஸ்டாலினும் உள்ளார். 22 சட்டசபை தொகுதிகளையும் கைப்பற்றி, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த, அவர் நினைக்கிறார். இதற்காக, இதுவரை இல்லாத, பெரிய தொகையை, வாக்காளர்களுக்கு வழங்க, முக்கிய கட்சிகள் திட்டமிட்டுள்ளன. கடைசி நேர நெருக்கடிக்கு இடம் தராமல், தேர்தல் பிரசாரம் துவங்கிய போதே, பணப் பட்டுவாடா செய்ய வசதியாக, ஓட்டுச்சாவாடி வாரியாக, வாக்காளர்களின் விபரங்களை, முக்கிய கட்சிகள் கணக்கெடுத்தன. அதற்கு ஏற்ப, தொகுதிகளில் உள்ள, கட்சிகளின் முக்கிய பிரமுகர்களின் வீடுகளுக்கு, பணம் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சூழலில், தி.மு.க., பொருளாளர் துரைமுருகன் வீடு மற்றும் அவரின் நண்பர்கள், நெருக்கமானவர்களின் வீடுகளில், வருமான வரித் துறையினர், சமீபத்தில் சோதனை நடத்தினர்.

அப்போது, வாக்காளர்களுக்கு தருவதற்காக வைக்கப்பட்டு இருந்த, 33 கோடி ரூபாய் பணத்தை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதேபோல், புகாருக்கு ஆளான வேட்பாளர்கள், கட்சி நிர்வாகிகளின் வீடுகள், அவர்களுக்கு சொந்தமான இடங்களில், தேர்தல் பறக்கும் படையினரும், வருமான வரித் துறை அதிகாரிகளும், தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதனால், அரசியல் கட்சியினர், திட்டமிட்டபடி, பிரசார துவக்கத்தில், வாக்காளர்களுக்கு, பணப் பட்டுவாடா செய்ய முடியவில்லை.

இந்நிலையில், ஓட்டுப்பதிவுக்கு, ஒருநாள் மட்டுமே உள்ளது. இதனால், பணப் பட்டுவாடாவை, எப்படியும் முடிக்க வேண்டிய கட்டாயத்தில், கட்சியினர் உள்ளனர். எனவே, இரவில் வேண்டுமென்றே, மின் தடையை ஏற்படுத்தி, வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யும் முற்சியில், அவர்கள் இறங்கியுள்ளனர்.

இதுகுறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: தமிழகத்தில், 2008ல், மின் பற்றாக்குறை ஏற்பட்டதால், அறிவித்தபடி, வீடுகளுக்கு மின் தடை செய்யப்பட்டது. அதேசமயம், 2009 லோக்சபா தேர்தல் சமயத்தில், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில், தடையில்லாமல், மின் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஓட்டுப்பதிவுக்கு முந்தைய நாளில், சென்னை உட்பட, பல்வேறு இடங்களில், மின் தடை ஏற்பட்டது. மாலை துவங்கிய மின் தடை, நள்ளிரவை தாண்டியும் சீராகவில்லை. அந்த வாய்ப்பை பயன்படுத்தி, அரசியல் கட்சியினர், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தனர்.

வேண்டுமென்றே தடை:


பின், பணப் பட்டுவாடா செய்ய வசதியாக, வேண்டுமென்றே, மின் தடை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதேபோல், தேர்தல் சமயங்களில், ஓட்டுப்பதிவுக்கு முன், மின் தடை ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது. தற்போது, மின் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு, மின்சாரம் கிடைத்தாலும், மின் சாதன பழுது காரணமாக, மின் தடை தொடர்கிறது. மின் கம்பம் மேல் செல்லும் மின் கம்பி மீது, 'சைக்கிள் செயினை' போட்டால், இரு மின் கம்பிகள் உரசி, பழுது ஏற்பட்டு, மின் தடை ஏற்படும்.

பள்ளம் தோண்டினால், மின்சாரம் செல்லும், 'கேபிள்' பழுதாகி, மின் தடை ஏற்படும். திறந்தவெளியில் உள்ள, 'டிரான்ஸ்பார்மர்' கட்டமைப்பில், மின்சாரம் செல்லும், 'ஏ.பி.சுவிட்சை' அணைத்து விட்டால், மின் வினியோகம் பாதிக்கும். இந்த விபரங்களை, தங்களுக்கு தெரிந்த மின் ஊழியர்கள் வாயிலாக, அரசியல் கட்சியினர் தெரிந்து வைத்துள்ளனர். இதனால், இன்று, நாளைக்குள், வாக்காளர்களுக்கு

Advertisement

பணப் பட்டுவாடா செய்வதற்காக, கட்சியினர், தங்கள் பகுதியில் உள்ள, மின் சாதனங்களில் வேண்டுமென்றே, பழுதை ஏற்படுத்தி, மின் சப்ளையை நிறுத்த திட்டமிட்டுள்ளனர்.

இருட்டை பயன்படுத்தி, மொபைல் போனில் உள்ள, 'டார்ச் லைட்' வெளிச்சத்தில், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க உள்ளனர். பணப் பட்டுவாடா முடியும் வரை, மின் ஊழியர்களை, மின் சாதன பழுதுகளை சரிசெய்ய விடாமலும், தடுக்க திட்டமிட்டுள்ளனர். இவ்வாறு, அந்த வட்டாரங்கள் கூறின.

பணம் பறிமுதல் இம்முறை அதிகபட்சம்!

தமிழகத்தில், இதுவரை இல்லாத அளவிற்கு, அதிகபட்சமாக, 188 கோடி ரூபாய், ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் செயல், தேர்தலுக்கு தேர்தல் அதிகரித்து வருகிறது. அதேபோல், வாகன சோதனையில் பிடிபடும், பணத்தின் அளவும் அதிகரித்தபடி உள்ளது. கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், 25.05 கோடி ரூபாய்; 2016 சட்டசபை தேர்தலில், 113 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதுவரை இல்லாத அளவிற்கு, இந்த தேர்தலில், 188 கோடி ரூபாய், ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில், 42.37 கோடி ரூபாய், வருமான வரித் துறை சோதனையில் சிக்கியது. மேலும், 998 கிலோ தங்கம், 642 கிலோ வெள்ளி பொருட்கள், பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு, 286 கோடி ரூபாய். இது தவிர, 37 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபானம்; 38 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள்; 8.15 கோடி ரூபாய் மதிப்புள்ள, இதர பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


தேர்தல் விதி மீறலில் தி.மு.க.,தான், 'டாப்'

தமிழகத்தில், தேர்தல் விதிகளை மீறியதாக, அதிகபட்சமாக, தி.மு.க., மீது, 1,410 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் தேர்தல் விதிகளை மீறும், அரசியல் கட்சிகள் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். தமிழகத்தில், மொத்தம், 4,466 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக, தி.மு.க., மீது, 1,410 வழக்குகளும், அ.தி.மு.க., மீது, 1,119 வழக்குகளும், பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்திய தண்டனை சட்டத்தின் கீழ், 261 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில், அ.தி.மு.க., மீது, 68; தி.மு.க., மீது, 46; அ.ம.மு.க., மீது, 55; பா.ஜ., மீது, 15; காங்., மீது, 10; நாம் தமிழர் கட்சி மீது, எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dandy - vienna,ஆஸ்திரியா
17-ஏப்-201900:47:51 IST Report Abuse

dandyஹி ஹி ஹி இந்தியாவுக்கு தேர்தல் தேவை இல்லை ...ஒவ்வொரு ஜாதிக்கும் ஏலம் விடலாம்.. ஜனநாயகம் என்ற சொல்லையே இந்தியர்கள் கேவலப்படுத்தி விட்டார்கள் ....உலகின் படிப்பறிவில்லா பிறவிகள்

Rate this:
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
16-ஏப்-201911:00:21 IST Report Abuse

அசோக்ராஜ் பட்டுவாடா தடை செய்யப்பட்டால் வோட்டு சதவீதம் குறையும்.

Rate this:
venkatan - Puducherry,இந்தியா
16-ஏப்-201910:11:20 IST Report Abuse

venkatanAlastamil people you are the ones in the world to receive bribe to your right.If it is you people should give bribe and hold corrupt practises for your spontaneous work done.u are liable to pay hefty bribes at Land registration,electricity,RTO,police,et.all...what not?Long live our money infested political democracy..the countries in the world seeing tamil people as culprits...

Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X