அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
எடுபடாது!
எதிர்க்கட்சிகளின் வாய் ஜாலம்...
முதல்வர் இ.பி.எஸ்., திட்டவட்டம்

இதுவரை சாதாரண வேட்பாளராக, மக்களை சந்தித்து, ஓட்டு கேட்டு வந்த நீங்கள், தற்போது, முதல்வராக, ஓட்டு கேட்டு சென்ற போது, எப்படி உணர்ந்தீர்கள்?
முதல்வர், வேட்பாளர் என்றெல்லாம், பொது வாழ்வில் இருக்கும் ஒருவர், தன் வாழ்க்கையை பிரித்து பார்க்க முடியாது. அ.தி.மு.க., தொண்டனாக, கட்சியை வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்ல வேண்டிய, மகத்தான கடமை, எனக்கு உள்ளது.

எதிர்க்கட்சிகள்,வாய் ஜாலம்,எடுபடாது,முதல்வர்,இ.பி.எஸ்., திட்டவட்டம்


உங்கள் பிரசாரத்திற்கு, மக்களிடம் வரவேற்பு எப்படி உள்ளது?
தமிழகம் முழுவதும், 8,000 கிலோ மீட்டருக்கு மேல், தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் செய்து, மக்களை சந்தித்து வருகிறேன். நான் செல்லும் இடமெல்லாம், மக்கள் எழுச்சியுடன், திரண்டிருப்பதை பார்க்கிறேன். எதிர்க்கட்சியாக இருக்கும் போதே, தி.மு.க.,வின் அராஜகமான, பஜ்ஜி கடை தகராறு, பிரியாணி கடை தகராறு, அழகு நிலைய பெண்ணை கால்களால் எட்டி உதைப்பது போன்ற நிகழ்வுகளை கண்டு, மக்கள் அச்சப்படுகின்றனர்.

'முதல்வர் ஆவோம்; அரசியல் கட்சி தலைவராக, மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்வோம்' என்று, என்றாவது நினைத்து பார்த்ததுண்டா?
பொது வாழ்வு என்று வந்த பின், பதவியை குறிவைத்து, யாரும் பயணம் செய்யக் கூடாது. கடந்த காலங்களில், எத்தனையோ தேர்தல்களில், தமிழகம் முழுவதும், கட்சி கட்டளையை ஏற்று, பிரசார பணிகளை செய்திருக்கிறேன்; எனவே, இது புதிதல்ல.

உங்களை முதல்வராக்கிய, சசிகலாவை மறந்து விட்டதாக, அ.ம.மு.க.,வினர் குற்றம் சாட்டுகின்றனரே?
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஒருமனதாக, என்னை தேர்ந்தெடுத்து, முதல்வர் பதவியில் அமர்த்தி உள்ளனர். என் மீது, கட்சியினர் வைத்துள்ள நம்பிக்கையை, காப்பாற்றும் வகையில், கட்சி நலனுக்காக உழைப்பது தான், என் முழு முதற்கடமை. ஜெ., வழியில், இந்த அரசை நடத்துவதே, என் குறிக்கோள்; தொண்டர்களின் கருத்தும் அதுவே.

துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை, நீங்கள் ஓரம்கட்டி வருவதாக, அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனரே; அது உண்மையா?
நிச்சயமாக இல்லை. நாங்கள் இருவரும், 25 ஆண்டுகளுக்கும் மேலாக, ஒருவரை ஒருவர் நன்கு அறிந்தவர்கள். நாங்கள் ஒருவரை ஒருவர், 'அண்ணா' என்று, அன்புடன் அழைத்துக் கொள்வோம். எங்களுடைய பணிகளையும், பொறுப்புகளையும், நன்கு அறிந்து, இருவரும் இணைந்து செயல்பட்டு வருகிறோம்.

மக்களுக்கு, இன்னும் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளை பொருட்களுக்கு, தகுந்த விலை கிடைக்க, வழிவகை செய்ய வேண்டும். தொழில் துறையில், அதிக வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். மக்களுடைய தேவைகளை, உடனுக்குடன் நிறைவேற்றுவது தான், இந்த அரசின் தலையாய கடமை. எனவே, இன்னும் ஏராளமான பணிகளை, நீங்கள் எதிர்பார்க்கலாம்.

அரசு செயல்பாடு மந்தமாக உள்ளது; ஊழல் அதிகரித்துள்ளது என, எதிர்க்கட்சிகள் புகார் கூறுகின்றனவே?
இது, திட்டமிட்டு பரப்பப்படும், பொய் பிரசாரம். கோப்புகள் மீது, உடனுக்குடன் முடிவெடுத்து, நல திட்டங்களை, செம்மையாக செயல்படுத்தி வருகிறோம். அவை சம்பந்தப்பட்டவர்களை சென்றடைகிறதா என்பதை ஆய்வு செய்து, உறுதி செய்கிறேன். குறை சொல்வதையே, வாடிக்கையாக கொண்ட, எதிர்க்கட்சிகளின் வாய் ஜாலங்கள், மக்களிடம் எடுபடாது. எங்களின், இரண்டு ஆண்டு சாதனை விளம்பரத்தை, அவர்கள் பார்க்கவில்லை என்றே நினைக்கிறேன்.

எந்த தேர்தலிலும் இல்லாத அளவு, இம்முறை நீங்களும், ஸ்டாலினும் தனிப்பட்ட முறையில் தாக்கி பேசியது சரியா?
எனக்கு வருத்தம் தான். என்னைப் பற்றியும், எங்கள் கட்சியினர் மற்றும் கூட்டணி தலைவர்கள் பற்றியும், தரக்குறைவாக விமர்சிக்கும் வார்த்தைகளை கேட்டு, நான் பெரிதும் வருந்தினேன். நான், அவரைப் பற்றி தனிப்பட்ட முறையிலோ, அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றியோ பேசுவதில்லை.

கட்சியில் அனைத்து முடிவுகளையும், நீங்களும், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோருமே எடுப்பதாக கூறப்படுகிறதே?
தவறான தகவல். எங்கள் கட்சியில், ஒவ்வொரு பணிக்கும், ஒரு குழு இருக்கிறது. அந்த குழுக்கள், தீவிர ஆலோசனைக்கு பின், தங்களின் பரிந்துரையை அளிக்கின்றன. கட்சித் தலைமை, அவற்றை செயல்படுத்துகிறது.

பா.ஜ., மிரட்டலுக்கு பயந்து தான் கூட்டணி அமைத்தீர்களா?
எங்களை யாரும் மிரட்டி பணிய வைக்க முடியாது. இந்தியாவின் பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் மாநில நலனை கருதி தான், இக்கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

ஜெ.,வை வசைபாடிய ராமதாஸ், விஜயகாந்த் கட்சியுடன், கூட்டணி வைத்ததாக, விமர்சனம் எழுந்துள்ளதே?
பொதுவான குறிக்கோள்களுடன், கூட்டணி அமைப்பது, அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும். அரசியல் ரீதியாக, ஒருவர் மற்றவரை விமர்சிப்பது என்பது, இந்திய அரசியலில், புதிது அல்ல.

தி.மு.க., கூட்டணியை, எப்படி பார்க்கிறீர்கள்?

Advertisement

வினோதமான கூட்டணி. ராகுலை பிரதமர் என்று, ஸ்டாலின் அறிவிக்கிறார். அவருடைய கூட்டணியில் இருக்கும், கம்யூனிஸ்ட் கட்சிகள், கேரளாவில், 'ராகுலை தோற்கடித்தே தீருவோம்' என, கங்கணம் கட்டி செயல்படுகின்றன. 'காங்கிரசுடன் கூட்டணி கிடையாது' என, ஈழப் படுகொலைக்கு பின், முழங்கி வந்த வைகோ, இன்று அதைப் பற்றி வாய் திறப்பதே இல்லை. திருமாவளவன், எந்த கொள்கைகளின் அடிப்படையில், காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து பணியாற்றுகிறார் என்பதை, அவர் தான் விளக்க வேண்டும். இப்படி முரண்பாடுகளின் மொத்த உருவமாக, ஒரு வினோத கூட்டணியை, தி.மு.க., தலைமையில் அமைத்திருக்கின்றனர்.

உங்கள் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது; இடைத்தேர்தலில், எதிர்பார்த்த வெற்றி கிடைக்குமா?
எங்கள் கூட்டணிக்கு, வெற்றி வாய்ப்புகள், மிகவும் பிரகாசமாக இருக்கிறது. இடைத்தேர்தலில், மகத்தான வெற்றி பெறுவோம்.

கட்சியில், வாரிசுகளுக்கு அதிக, 'சீட்' வழங்கி உள்ளீர்களே... தி.மு.க.,வை பின்பற்றுகிறீர்களா?
கட்சியில் சிறப்பாக பணியாற்றி வந்த, துடிப்பான, படித்த இளைஞர்கள் முன்னிலைக்கு வரும் வகையில், ஆட்சிமன்றக் குழு, பல மணி நேரம் விவாதித்து, வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளது. எனவே, நாங்கள் வாரிசு அரசியல் என்ற, வலையில் சிக்க மாட்டோம்.

அ.ம.மு.க.,வால், உங்கள் வெற்றி பாதிக்கப்படுமா?
நிச்சயமாக இல்லை.

தற்போதைய கூட்டணி, உள்ளாட்சி தேர்தலில் தொடருமா?
தொடரும்.

உங்கள் மனைவி, அடிக்கடி சசிகலாவை சந்திப்பதன் பின்னணி என்ன?
தவறான தகவல். எந்த பொதுவாழ்வு நடவடிக்கையிலும், என் மனைவி ஈடுபட்டதே இல்லை.

மீண்டும் சசிகலா குடும்பத்தினரை, கட்சியில் இணைக்க வாய்ப்புண்டா?
வாய்ப்பில்லை.

மத்தியில், பா.ஜ., ஆட்சி அமைத்தால், அமைச்சரவையில் இடம் பெறுவீர்களா?
தேர்தல் முடிவுகள் வெளியாகட்டும். தமிழகத்தின் நலனுக்காக, என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்வோம்.

- இ.பி.எஸ்., முதல்வர், அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர்


Advertisement

வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - tokyo,ஜப்பான்
16-ஏப்-201919:20:32 IST Report Abuse

oceஒருவர் காலில் விழுந்தால் விழுபவர் மட்டமானவரா. காலில் விழுவது தன் பெருந்தன்மையை காட்டுவதாக ஏன் இருக்க்ககூடாது.

Rate this:
oce - tokyo,ஜப்பான்
16-ஏப்-201919:17:50 IST Report Abuse

oceஅரசியலில் ஒவ்வருவருக்கும் சில நேரஙெகளில் அதிகாரம் கிடைக்கும். சில நேரஙெகளில் அது மறைந்து விடும். நெய் பிரசாதத்தில் தொன்னை மணத்ததது. பிரசாதம் காலி நொன்னை குப்பைக்கு சென்றது. ச்சிகலா தன் சுயலாபம் கருதி எடப்பாடியை சிபாரிசு செய்திருக்கலாம். எடப்பாடிக்கு உதவி செய்த்தாக கருதக் கூடாது.

Rate this:
INDIAN Kumar - chennai,இந்தியா
16-ஏப்-201914:48:54 IST Report Abuse

INDIAN Kumarகொங்கு மண்ணில் பெரும்பான்மை இடங்கள் வெற்றி பெறலாம் மக்கள் தீர்ப்பில் தான் தெரிய வரும் அவர் பலம் என்ன என்று.

Rate this:
மேலும் 18 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X