அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ராஜ தந்திரம்,ஆட்சி,தக்க வைக்க,முதல்வர்,பழனிசாமி

சென்னை: ஆட்சியை தக்கவைப்பதற்கான ராஜ தந்திரமாக கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் அ.தி.மு.க., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களின் பதவியை பறிக்க முதல்வர் பழனிசாமி முடிவு செய்துள்ளார். இதன் காரணமாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் மூவர் உள்ளிட்ட ஐந்து எம்.எல்.ஏ.,க்களின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது. எனவே சட்டசபை இடைத்தேர்தல் முடிந்தாலும் மீண்டும் ஐந்து தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது. இதனால் தி.மு.க.,வின் ஆட்சி கனவு தவிடுபொடியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து சென்னை - ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் சுயேச்சையாக போட்டியிட்ட தினகரன் வெற்றி பெற்றார். அவருக்கு ஆதரவு தெரிவித்த 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி, அ.தி.மு.க. - எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.போஸ், கனகராஜ் ஆகியோர் மறைவு காரணமாக திருவாரூர், திருப்பரங்குன்றம், சூலுார் சட்டசபை தொகுதிகள் காலியாகின. அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டி குற்ற வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் பதவி இழந்தார். இதன் காரணமாக ஓசூர் தொகுதியும் காலியானது.

இவற்றில் ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலுார் தொகுதிகள் தவிர மீதமுள்ள 18 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 18ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. விடுபட்ட நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு மே 19ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. தற்போதைய நிலவரப்படி அ.தி.மு.க.விற்கு 114 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். காங்கிரஸ் முஸ்லிம் லீக்

உள்ளிட்ட தி.மு.க. கூட்டணிக்கு 97 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அ.தி.மு.க. - எம்.எல்.ஏ.க்களில் அறந்தாங்கி - ரத்தினசபாபதி விருத்தாசலம் - கலைச்செல்வன் கள்ளக்குறிச்சி - பிரபு ஆகியோர் தினகரன் ஆதரவாளர்களாக உள்ளனர்.

அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலர் தமிமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் ஆகியோர் அ.தி.மு.க. மீது அதிருப்தியில் உள்ளனர். சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.விற்கு எதிரான நிலையை எடுத்தனர். இவர்கள் ஐந்து பேரும் அ.தி.மு.க. தலைமையின் கட்டுப்பாட்டில் இல்லை. இரட்டை இலையில் வெற்றி பெற்ற கொங்கு இளைஞர் பேரவை அமைப்பாளர் தனியரசு மட்டும் தற்போது அ.தி.மு.க. தலைமையுடன் இணக்கமாக உள்ளார்.

அதிருப்தி எம்.எல்.ஏ.க் களை தவிர்த்தால் 109 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே ஆளும் கட்சிக்கு ஆதரவாக உள்ளனர். ஆட்சியை தக்கவைக்க தற்போது நடக்கும் இடைத்தேர்தலில் குறைந்தது ஒன்பது

இடங்களில் வெற்றி பெற்றாக வேண்டும். தேர்தல் முடிவுகள் எப்படி அமைந்தாலும் அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்க அ.தி.மு.க. தலைமை முடிவு செய்துள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்.ஏ.க்கள் கிடைத்து விட்டால் அவர்கள் தயவு தேவை இல்லை. பெரும்பான்மை கிடைக்காவிட்டால் அவர்கள் எதிர்க்கட்சிக்கு வேலை செய்த ஆதாரங்கள் அடிப்படையில் ஐந்து எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்ய அ.தி.மு.க. தலைமை முடிவு செய்துள்ளது.

அவ்வாறு ஐந்து பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் சட்டசபையில் மொத்த எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 229 ஆக குறையும். அப்போது ஆட்சியை தக்கவைக்க அ.தி.மு.க.வுக்கு 115 எம்.எல்.ஏ.க்கள் இருந்தால் போதும். அப்படி பார்த்தால் 22 தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. குறைந்தது ஆறு இடங்களில் வென்றாலே போதும். தற்போதைய சூழ்நிலையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் எளிதாக வென்று விடலாம் என அ.தி.மு.க. தலைமை கணக்கிட்டுள்ளது.

எனவே தேர்தல் முடிவுக்கு பின் அ.தி.மு.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஐந்து பேரின் பதவிக்கு சிக்கல் ஏற்படுவது உறுதி. அவர்கள் அ.தி.மு.க. தலைமையுடன் இணக்கமாகப் போனால் அவர்கள் பதவி நீடிக்க வாய்ப்புள்ளது. அத்தகைய நிலை ஏற்பட்டால் அ.தி.மு.க.விற்கு இடைத்தேர்தலில் நான்கு இடங்கள் கிடைத்தாலே போதுமானது.

இதை உணர்ந்துள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பதவியை இழக்க விரும்பாமல் அ.தி.மு.க. தலைமையுடன் இணக்கமாகச் செல்லவே வாய்ப்பு அதிகம். இல்லையெனில் மீண்டும் ஐந்து தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும். அதேநேரத்தில் தற்போது இடைத்தேர்தலை சந்திக்கும் 22 சட்டசபை தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற்று விட்டால் அதன் தலைமையிலான கூட்டணிக்கு ஆட்சி அமைக்க போதுமான 119 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கிடைத்து விடும். அப்படியொரு நிலைமை ஏற்படுமா என்பது கேள்விக்குறி என்பதால் தி.மு.க. வின் ஆட்சி கனவு பலிப்பதற்கு உடனடி வாய்ப்புகள் எதுவும் இல்லை.

கட்சி தாவல் தடை சட்டத்தில் நடவடிக்கை:

அ.தி.மு.க. - எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோர் தினகரன் ஆதரவாளர்களாக உள்ளனர். அவர்கள் தினகரன் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றி வருகின்றனர். அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற தமிமுன் அன்சாரி, கருணாஸ் அ.தி.மு.க. கூட்டணிக்கு எதிராக உள்ளனர். அவர்களின் செயல்பாடு குறித்து சபாநாயகரிடம் யார் புகார் அளித்தாலும் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் அவர்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு அதிகாரம் உள்ளது. இதை உச்ச நீதிமன்ற தீர்ப்பும் உறுதிப்படுத்தி உள்ளது என சட்டசபை செயலக அதிகாரிகள் தெரிவித்தனர்.Advertisement

வாசகர் கருத்து (101)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Milirvan - AKL,நியூ சிலாந்து
19-ஏப்-201901:21:07 IST Report Abuse

Milirvanஅப்போ.. டீம்கா கண்ட கனா மறுபடி புட்டுக்கிச்சா..?.. ஓபிஸ்ஸும், இபிஎஸ்ஸும், சைலெண்டான ஜகஜால கில்லாடிங்கதான்.. மொக்க(முக) இருந்திருந்தா கூட இவங்க கிட்ட பப்பு வெந்துருக்காது போல.. ஹி.. ஹி..

Rate this:
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
18-ஏப்-201906:25:46 IST Report Abuse

D.Ambujavalliதேர்தலுக்கு முன்பே ஜனாதிபதி ஆட்சி கொண்டு வந்திருக்க வேண்டும். ஆளும் கட்சி ஆட்சியிலிருப்பதால் தான் பணம் கடத்தல், பட்டுவாடா எல்லாவற்றிற்கும் அரசு யந்திரங்கள் உபயோகிக்கப்படுகின்றன இவர்கள் களவாணித்தனத்திற்கெல்லாம் போலீஸ், , வ.வ.துறை, தேர்தல் ஆணையம் கூட்டணியாக பாதுகாப்பு வளையம் அளிக்கின்றனர்

Rate this:
Sankare Eswar - tuas,சிங்கப்பூர்
17-ஏப்-201906:47:58 IST Report Abuse

Sankare Eswarசவுக்கிதார் விஜய் - உன்கிட்ட இன்னைக்கு கஞ்சி குடிக்க காசு இருக்கா? இல்லேன்னா சொல்லு... அனுப்பி வைக்கிறேன்.

Rate this:
மேலும் 98 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X