பதிவு செய்த நாள் :
தடை!
பிரசாரம் செய்ய யோகி, மாயாவதிக்கு...
தேர்தல் ஆணையம் நடவடிக்கை

புதுடில்லி: மத ரீதியில் பேசியதாக, உத்தர பிரதேச முதல்வரான, பா.ஜ.,வைச் சேர்ந்த, யோகி ஆதித்யநாத் மற்றும் முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் தலைவருமான, மாயாவதி ஆகியோர் பிரசாரம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது.

பிரசாரம்,யோகி,மாயாவதி,தடை


சமீபத்தில் உத்தர பிரதேசத்தின் தியோபபந்தில் நடந்த கூட்டத்தில் பேசிய பகுஜன் சமாஜ் தலைவரும், உ.பி., முன்னாள் முதல்வருமான மாயாவதி 'இந்தத் தேர்தலில் முஸ்லிம்கள், காங்கிரசுக்கு ஓட்டுப் போடக் கூடாது' என்றார். பா.ஜ.,வைச் சேர்ந்த, உ.பி., முதல்வர், யோகி ஆதித்யநாத், மீரட்டில் நடந்த பிரசாரத்தின்போது, 'இந்தத் தேர்தல், அலிக்கும், பஜ்ரங் பலிக்கும் இடையேயான தேர்தல்' என, குறிப்பிட்டார்.

முஸ்லிம் மதத்தினரின் மதிக்கும் முகமது நபியின் மருமகனான, அலி மற்றும் ஹிந்துக் கடவுள், ஹனுமானின் மற்றொரு பெயரான, பஜ்ரங்பலியை குறிப்பிட்டு, இவ்வாறு அவர் பேசியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, தேர்தல் ஆணையத்தில் புகார்கள் கொடுக்கப்பட்டன. இது குறித்து தேர்தல் ஆணையம் விசாரித்து வந்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் நேற்று நடந்த ஒரு வழக்கின்போது, இந்தப் பிரச்னை எழுந்தது.

என்ன நடவடிக்கை:


'மத ரீதியில் வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் பேசிய, இவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?' என, உச்ச நீதிமன்றம், கடுமையுடன் குறிப்பிட்டது. உச்ச நீதிமன்றத்தில் விவாதம் நடந்த சில மணி நேரத்தில், மாயாவதி மற்றும் யோகி ஆதித்யநாத் மீது நடவடிக்கை எடுத்து, தேர்தல் ஆணையம், தனித்தனியாக உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

அந்த உத்தரவுகளில் கூறப்பட்டுள்ளதாவது: தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி,

மத ரீதியில் பேசியுள்ளது கண்டிக்கத்தக்கது. இதனால், யோகி ஆதித்யநாத், ஏப்., 16 காலை, 6:00 மணியில் இருந்து, 72 மணி நேரத்துக்கு, நாட்டின் எந்தப் பகுதியிலும் பிரசாரம் செய்யக் கூடாது.

பேட்டி அளிக்க கூடாது:


பத்திரிகைகள் உட்பட, ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக் கூடாது. தேர்தல் தொடர்பான, பிரசார கூட்டங்களிலோ, பொது நிகழ்ச்சிகளோ, பேரணிகளிலோ, அவர் பங்கேற்கக் கூடாது. அதேபோல், ஒரு குறிப்பிட்ட மதத்தினரை துாண்டிவிடும் வகையில், மாயாவதி பேசியுள்ளார். இது தேர்தல் நடத்தை விதிமீறலாகும். இந்தக் குற்றத்துக்காக, அவர், ஏப்., 16 காலை, 6:00 மணியில் இருந்து, 42 மணி நேரத்துக்கு பிரசாரம் செய்யக் கூடாது. பேரணி, பொதுக் கூட்டங்களில் பங்கேற்கக் கூடாது. பேட்டி அளிக்கக் கூடாது.

இந்த உத்தரவுகளை முழுமையாக செயல்படுத்தும்படி, அனைத்து மாநில, தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு, உத்தரவுகளில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியதாவது: யோகி ஆதித்யநாத்துக்கு, மற்றொரு விவகாரத்தில் ஏற்கனவே, தேர்தல் கமிஷன், எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது மீண்டும் புகார் எழுந்துள்ளதால், அவருக்கு, 72 மணி நேரம் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மாநில முதல்வராக உள்ள அவர், அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு, மதச் சார்பற்ற முறையில் நடந்து கொள்ள வேண்டும்.

அதை மீறியதுடன், தேர்தல் நடத்தை விதிமுறைகளையும் அவர் மீறியுள்ளார். அதனால் தான், இந்த நடவடிக்கை. மாயாவதியைப் பொறுத்தவரை, முதல் முறையாக புகார் வந்துள்ளது. அதே நேரத்தில், மூத்த அரசியல் தலைவரான அவர், கவனத்துடன் பேசியிருக்க வேண்டும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

தடை நீட்டிப்பு:


கடந்த, 2014 லோக்சபா தேர்தலின்போது, பா.ஜ.,வின் தற்போதைய தேசிய தலைவர், அமித் ஷா மற்றும் சமாஜ்வாதி கட்சியின்

Advertisement

மூத்த தலைவர், ஆசம் கான் ஆகியோருக்கு, இதுபோன்று தடை விதிக்கப்பட்டது. மன்னிப்பு கேட்டதால், அமித் ஷா மீதான தடை, சில நாட்களில் நீக்கப்பட்டது. ஆனால், அசம் கான் மன்னிப்பு கேட்காததால், அவருக்கு தடை நீடித்தது.

'அதிகாரம் இல்லையா'

தேர்தலில் மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் பிரசாரம் செய்யும் அரசியல் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வளைகுடா நாடான யு.ஏ. எனப்படும் ஐக்கிய அரசு எமிரேட்சை சேர்ந்த வெளிநாட்டு வாழ் இந்தியரான யோகா ஆசிரியர் ஹர்பிரீத் மன்சுகானி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வு கூறியதாவது: மதம் மொழி இனம் பிராந்தியத்தின் அடிப்படையில் மக்களிடையே வெறுப்புணர்வு பிரிவினை ஏற்படுத்தும் வகையில் பிரசாரம் செய்யப்பட்டால் அவர் சார்ந்த அரசியல் கட்சியின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. குறிப்பாக மாயாவதி மற்றும் யோகி ஆதித்யநாத் மீது கூறப்பட்ட புகார்கள் மீது நோட்டீஸ் அனுப்பப்பட்டதா? அவர்கள் அதற்கு பதில் அளித்துள்ளனரா; அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏப். 16 காலையில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரில் ஆஜராகி பதில் அளிக்க வேண்டும். 'தங்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் குறைந்தபட்ச அதிகாரமே உள்ளது. ஒரு வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யவோ கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்யவோ அதிகாரம் இல்லை' என தேர்தல் கமிஷன் கூறுவதை ஏற்க முடியாது. பல் இல்லாமல் பலகாரம் சாப்பிட முடியுமா? அப்படியானால் தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்கள் குறித்து முதலில் விசாரிப்போம். தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்பட்டால் நீங்கள் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்தும் விரிவாக விவாதிக்கப்படும். இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
16-ஏப்-201911:26:34 IST Report Abuse

Malick Rajaஇவர்கள் எல்லாம் மனிதப்பிறவிகளா ? ஈனப்பிறவிகள் .. இப்படியெல்லாம் பேசி அந்த பதவியை அடைவதற்கு உயிர்துறப்பதே மேல் என்று மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் நினைப்பது இயல்பு . கயவர்களுக்கு விதிவிலக்கு என்பதே சரி . காலம் கனியும் அவனவன் செய்வான் ..

Rate this:
sahayadhas - chennai,இந்தியா
16-ஏப்-201911:00:47 IST Report Abuse

sahayadhasகட்சி தலைவர்களை தடை செய்தது இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறை அவ்வளவு மோசா மானவர்கள்.

Rate this:
King of kindness - muscat,ஓமன்
16-ஏப்-201909:22:20 IST Report Abuse

King of kindnessஅப்படி பார்த்தால் இதை விட இந்து மதத்தை இகழ்ந்து பேசியுள்ள - (தமிழகத்தில் இந்து மதத்தை இகழ்வது என்பது தான் திராவிட பாரம்பரியம்) ஸ்டாலின் கனிமொழி வீரமணி இவர்களுக்கெல்லாம் என்ன தண்டனை. வாயை திறந்தாலே இந்து மதத்தை வசை படும் இவர்களுக்கு வாழ்நாள் தடை அல்லவா விதித்து இருக்க வேண்டும்

Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X