பதிவு செய்த நாள் :
ஆர்.டி.ஐ., வரம்பில் கட்சிகள்;
உச்ச நீதிமன்றம், 'நோட்டீஸ்'

புதுடில்லி: அரசியல் கட்சிகளை, ஆர்.டி.ஐ., எனப்படும், தகவல் அறியும் உரிமை சட்ட வரம்பில் சேர்க்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்கும்படி, மத்திய அரசு, தேர்தல் ஆணையம் மற்றும் ஆறு தேசிய கட்சிகளுக்கு, உச்ச நீதிமன்றம், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.

Supreme Court,உச்ச நீதிமன்றம்,ஆர்.டி.ஐ., வரம்பில்,கட்சிகள்,நோட்டீஸ்


பா.ஜ.,வைச் சேர்ந்த, வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாயா, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

அரசியல் கட்சிகள், தங்களுக்குள்ள அதிகாரத்தை சட்டசபைக்கும், நிர்வாகத்துக்கும் மற்றும் சொந்த வேட்பாளர்களுக்கும் எதிராக பயன்படுத்துகின்றன. அரசியல் கட்சிகள் பொது மக்களிடம் இருந்து நன்கொடையாக பெறும் தொகைகளுக்கு, உரிய கணக்கை காட்ட வேண்டும். ஒவ்வொரு தேர்தலிலும், கறுப்புப் பணம் மற்றும் நன்கொடையாக பெற்ற தொகைகள், செலவிடப்படுகின்றன.

நாட்டில் உள்ள, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளும் வெளிப்படைத்தன்மையுடனும், பொறுப்பாகவும் இருக்க வேண்டும். எனவே, அரசியல் கட்சி களின் வரவு, செலவு, நன்கொடை, நிதியுதவி மற்றும் நன்கொடையாளர்களின் விபரங்களை தெரிவிக்க வேண்டும். அரசியல் கட்சி களை, ஆர்.டி.ஐ., வரம்பிற்குள் சேர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

இந்த மனுவுடன், ஏற்கனவே, ஜனநாயக சீர்திருத்த சங்கம் மற்றும் ஆர்.டி.ஐ., ஆர்வலர் சுபாஷ் சி.அகர்வால் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை இணைத்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் மற்றும் நீதிபதிகள், தீபக் குப்தா மற்றும் சஞ்சீவ் கன்னா ஆகியோர் விசாரித்தனர். அப்போது, இந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி, மத்திய அரசு, தேர்தல் ஆணையம், தேசிய கட்சிகளான, பா.ஜ., - காங்., என்.சி.பி., - சி.பி.ஐ., - மார்க்சிஸ்ட் மற்றும் பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டனர்.


Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா
16-ஏப்-201911:33:21 IST Report Abuse

Needhiyin Pakkam Nil இதென்னடா இது அநியாயமா இருக்கு, நான் என் கோரிக்கையை நிறைவேற்றி கொள்ள வேண்டும் என்பதற்காக அரசு அதிகாரிகளுக்கு நன்கொடை கொடுக்கிறேன் அதுக்கு பெயர் லஞ்சமாம். அது சட்டப்படி தவறாம, தண்டனை கொடுப்பார்களாம், அரசை பணிய வைத்து தங்களுடைய வியாபாரத்தை திட்டத்தை பெருக்கி கொள்வதற்காக அரசியல் கட்சிகளுக்கு பணமுதலைகள் பல கோடி லஞ்சம் கொடுக்கிறார்கள் அதற்கு பெயர் நன்கொடையாம் .அது சட்டப்படி செல்லுமாம் அதற்கு 100 % வரி விலகும் வழங்கப்படுமாம். ஏனென்றால் சட்டத்தை இயற்றுவதே பணமுதலைகளிடம் நன்கொடை லஞ்சம் வாங்கும் அரசியல்வாதிகள் தானே, உடனடியாக இதனை ஆர்.டி.ஐ. யின் கீழ் கொண்டு வாருங்கள்..........

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
16-ஏப்-201908:45:25 IST Report Abuse

Srinivasan Kannaiyaஅரசியல் கட்சிகளை, ஆர்.டி.ஐ., எனப்படும், தகவல் அறியும் உரிமை சட்ட வரம்பில் அவசியம் சேக்கப்படவேண்டும்...

Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
16-ஏப்-201908:02:04 IST Report Abuse

ஆரூர் ரங்உட்கட்சி ஜனநாயக விதிகள் எல்லாக் கட்சிகளுக்கும் பொதுவாக இருக்கவேண்டும் .இரு ஆண்டுகளுக்கொரு முறை உட்கட்சித்தேர்தல், வேட்பாளர் தேர்வு , நிதி மேலாண்மை அனைத்திலும் கட்டுப்பாடுகள் தேவை . தொடர்ந்து ஒருவரே பலமுறை கட்சிப் பதவிகளை வகிப்பதைத் தடுக்கவேண்டும் .ஆனால் இதையெல்லாம் சட்டமாக்க குடும்பக் கட்சிகள் ஒப்புக்கொள்ளாது

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X