எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
எப்படி வந்தது?
தகர பெட்டியுடன் வந்த துரைமுருகனுக்கு
கோடிக்கணக்கான ரூபாய்...
தமிழிசை சிறப்பு பேட்டி

வெற்றி வாய்ப்பு எப்படியிருக்கிறது?
நீங்களே பார்த்திருப்பீர்களே. எவ்வளவு மக்கள் கூடுகிறார்கள். இதிலிருந்து என் வெற்றியை தெரிந்து கொள்ளலாம்.

துரைமுருகன்,கோடிக்கணக்கான ரூபாய்,எப்படி வந்தது,பா.ஜ., தமிழிசை


கருத்து கணிப்புகள் தி.மு.க., விற்கு சாதகமாக இருக்கிறதே?
கருத்து கணிப்புகள் வேண்டும் என்றே பரப்பப்படுகிறது. அதுவும் துாத்துக்குடி தொடர்பான கருத்து கணிப்பை நான் நம்ப மாட்டேன். எதை வைத்து கருத்து கணிப்பை கூறுகின்றனர். இப்படி கடுமையாக உழைத்து கொண்டிருக்கும் போது ஒரு விஷயத்தை அசால்டாக கூறுகின்றனர். மக்களுடைய கணிப்பு தான் எனக்கு முக்கியம். எல்லோரும் ஸ்டெர்லைட் பிரச்னை மட்டும் தான் பேசுகின்றனர். இங்கு எவ்வளோ விஷயங்கள் உள்ளன. என் ஒரே குறிக்கோள் துாத்துக்குடி என்றாலே போராட்டம் என்ற நிலையிருப்பதை மாற்றி துாத்துக்குடி என்றாலே வளர்ச்சி என உயர்த்த வேண்டும். இது புனிதமான மண். பாரதியார், வ.உ.சி., அழகுமுத்துகோன், சுந்தரலிங்கனார் பிறந்த மண். ஊழல்வாதிகளை இந்த மண் ஒரு நாளும் ஏற்றுக்கொள்ளாது.

துாத்துக்குடிக்கு ஒரு மத்தியஅமைச்சர் கிடைத்து விடுவாரா?
துாத்துக்குடிக்கு ஒரு நல்ல லோக்சபா எம்.பி., முதலில் கிடைப்பார். அதன் பிறகு அதை பார்க்கலாம்.

உங்களது பலம், எதிர் வேட்பாளரின் பலவீனமாக நீங்கள் கருதுவது?
யாரையும் பலவீனமாக நான் கருதுவதில்லை. என்னை பலமாக நான் கருதுகிறேன். அரசியலில் எனக்கு அசுர பலம் உள்ளது. அதை பார்க்கத்தான் போகிறீர்கள். என்னுடைய கடுமையான உழைப்பால் இந்த நிலையை எட்டியுள்ளேன். இன்னார் மகள், இன்னார் தங்கை என நான் உயரவில்லை. இருபதாண்டுகளாக கட்சியில் அடிப்படை தொண்டனாக பணியாற்றி வந்துள்ளேன். கடந்த நான்காண்டுகளாக நம்பகத்தன்மை வாய்ந்த தலைவராக உள்ளேன். மேலும் எனக்கு பெரிய மனவருத்தம் இருந்தது. இருபதாண்டுகள் அரசியலில் இருந்தும் மக்கள் பிரதிநிதியாகவில்லை என்ற வருத்தம் இருந்தது. தி.மு.க., வேட்பாளர் கனிமொழி கூட, பிறப்பால் எளிதாக 12 ஆண்டுகள் எம்.பி.,யாக இருக்கிறார். இனி அவர் எம்.பி.,யாகி எதுவும் ஆகபோவதில்லை.

என்னை போன்ற ஒருவர் எம்.பி.யானால் மக்கள் நாங்கள் எப்படியிருக்க போகிறோம் என பார்க்க போகிறார்கள். நான் வெளிப்படை தன்மையுடையவள். ஊழலற்ற தன்மையுடையவள். அதனால் மக்கள் எனக்கு இந்த ஒரு முறை வாய்ப்பு தர வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.

கூட்டணி கட்சியினரின் ஒத்துழைப்பு எப்படியிருக்கிறது?
நல்ல முறையில் இருக்கிறது. எனக்காக பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா பிரசாரம் செய்தார். புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி, தே.மு.தி.க., பொருளாளர் பிரேமலதா, கூட்டணி கட்சி தலைவர்கள் ஜான்பாண்டியன், கார்த்திக் வந்தார்கள். முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், த.மா.கா., தலைவர் வாசன் வந்து பிரசாரம் செய்தனர்.

ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்' என்பது போல மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்கிறார். உங்களுக்கு பிரசாரம் செய்ய வரவில்லையே?
நான் மாநில தலைவர். மற்ற வேட்பாளர்களின் தொகுதிகளுக்கு, தலைவர்கள் செல்ல வேண்டும் என்பதால் நான் அவர்களை அழைக்கவில்லை. பிரதமர் மோடியை நான் அழைத்தால் வரமாட்டாரா. கண்டிப்பாக வருவார். ஆனால் கூட்டணி கட்சிகளுக்கு போகட்டும். மற்ற தலைவர்களின் தொகுதிகளுக்கு செல்லட்டும். அப்படி பரந்த மனப்பான்மையுடன், பிரசார வியூகத்தை வகுக்க வேண்டும். எல்லோரையும் நம் தொகுதிக்கு வாருங்கள் என கட்டாயப்படுத்த கூடாது.

மற்ற வேட்பாளர்களை போலின்றி கடும் வெயிலிலும் பிரசாரத்தை தொடருகிறீர்களே?
துாத்துக்குடி பெரிய தொகுதி. பகலில் எந்த வேட்பாளரும் பிரசாரத்திற்கு வருவதில்லை; ஓய்வு எடுக்கின்றனர். மாலை நேரங்களில் மட்டுமே பிரசாரத்திற்கு வருகின்றனர். ஆனால் எல்லோரையும் சந்திக்க வேண்டும் என்பதற்காகவே வெயிலையும் பொருட்படுத்தாமல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளேன்.

சென்னையில் உங்களுக்கு ஒரு தொகுதி கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் இருக்கிறதா?
அப்படி ஒன்றும் இல்லை. சொந்தப்பூமியான துாத்துக்குடியில் நிற்பது மகிழ்ச்சியே.

Advertisement

தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி ஐந்தாண்டு காலத்தில் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை,' என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டுகிறாரே?
பிரதமர் மோடி ஐந்தாண்டு காலத்தில் மேக் இன் இந்தியா, துாய்மை பாரதம், நாடு முழுவதும் நுாற்றுக்கும் மேற்பட்ட ஸ்மார்ட் சிட்டி, அம்ரூட் திட்டத்தில் தமிழகத்தில் மட்டும் 13க்கும் மேற்பட்ட நகரங்கள் மேம்பாடு என எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறார். முத்ரா வங்கி கடனுதவி பெற்று வேலைவாய்ப்பு பெற்றவர்கள் ஏராளம். இதை ஸ்டாலினால் மறுக்க முடியுமா?.

தி.மு.க., பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் கோடிக்கணக்கான ரூபாயை பறிமுதல் செய்துள்ளார்களே?
தகர பெட்டியுடன் சென்னைக்கு வந்ததாக கூறும் துரைமுருகன் குடும்பத்தினருக்கு கோடிக்கணக்கான ரூபாய் எங்கிருந்து வந்தது. இதுகுறித்து மக்களுக்கு அவர்கள் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளனர். இது குறித்து தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வாயை திறக்க மறுப்பது ஏன்?

இந்து கடவுள்களுக்கு எதிராக தொடர்ந்து தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகிக்கும் தி.க., தலைவர் வீரமணி போன்றோர் விமர்சித்து வருகிறார்களே?
அதற்கான பலனை அவர் அனுபவிப்பார். பா.ஜ.,வை பொருத்தவரையில் அனைத்து தரப்பினரையும் சமமாக கருதி திட்டங்களை செயல்படுத்துகிறோம்.

வாக்காளர்களுக்கு சொல்ல விரும்புவது?
இந்த தொகுதி வாக்காளர்களை பொருத்தவரையில் பெரியளவில் வேலைவாய்ப்பு இல்லை. அதை ஏற்படுத்தி தருவேன். சும்மா ஸ்டெர்லைட் போராட்டம் நடந்ததையே கூறிக் கொண்டிருக்க கூடாது. பனை, வாழை இருக்கிறது. கருமேனி ஆறு திட்டம், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், சாலை, ரயில், கப்பல், விமானம் தொடர்புள்ள மாவட்டம். இதை பயன்படுத்தி வேலைவாய்ப்பு வசதிகளை பெருக்க நடவடிக்கை எடுப்பேன். மத்திய அரசு சார்பில் கனரக தொழிற்சாலைகளை கொண்டு வருவேன். திருச்செந்துார் போன்ற புண்ணிய தலங்கள் மேம்படுத்தி சுற்றுலா துறையிலும் இந்த மாவட்டம் சிறந்து விளக்க முயற்சி செய்வேன்.


Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
19-ஏப்-201907:57:26 IST Report Abuse

Bhaskaranஎளிமையான தமிழிசைக்கு தூத்துக்குடி மக்கள் வாக்களித்தால் ஒரு நல்ல அனைவராலும் எளிதிலணுகக்கூடிய எம்.பி.கிடைப்பார் அதிர்ஷ்டம் இருந்தால் மத்திய அமைச்சராக கூட ஆகலாம் எல்லாம் இறைவன் செயல், எதிர்நிற்பவர் மகாபலமுள்ள ( பணமுமுள்ள ) வேட்பாளர் வன்முறையை ஆயுதமாக கொண்டக்கட்சி உறுப்பினர் இவரை எதிர்த்து வெற்றிகாண்பது மிகுந்த சிரமமாக இருக்கும்

Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
17-ஏப்-201904:09:03 IST Report Abuse

J.V. Iyerஜகத் ரட்சகனை எப்படி விட்டு வைத்தார்கள்? அவரையும் அவர் குடும்பத்தையும் அல்லவா முதலில் கைது செய்திருக்கவேண்டும்? இது நியாயமா? தர்மமா? நீதியா?

Rate this:
blocked user - blocked,மயோட்
16-ஏப்-201921:20:52 IST Report Abuse

blocked userகள்ள ரயில் ஏறி வந்து வசனம் எழுதி பல தொலைகாட்சி நிறுவனங்கள், விமான நிறுவனங்கள் வாங்கியது போலத்தான்...

Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X