ஆப்பரேஷன் ப்ளூ ஸ்டார்: பஞ்சாப் தேர்தலில் சர்ச்சை

Updated : ஏப் 16, 2019 | Added : ஏப் 16, 2019 | கருத்துகள் (24)
Advertisement
ஆப்பரேஷன் ப்ளூ ஸ்டார்: பஞ்சாப் தேர்தலில் சர்ச்சை

சிறப்பு செய்தியாளர்கடந்த, 1984ல், பஞ்சாபின், அமிர்தசரஸ் சீக்கியர் பொற்கோவிலில், ராணுவம் நுழைந்த விவகாரத்தில், முன்னாள் பிரதமர், இந்திரா குடும்பத்தினர் மன்னிப்பு கேட்காதது, இந்த தேர்தல் வரை எதிரொலிக்கிறது.லோக்சபா தேர்தல் பிரசாரம், இங்கு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆளும், காங்கிரஸ் மற்றும் பா.ஜ., -சிரோன்மணி அகாலிதளம் கூட்டணி, பரஸ்பரம் கடும் குற்றச்சாட்டுகளை வீசி வருகின்றன.இதன் ஒரு கட்டமாக, காங்., முதல்வர் அமரீந்தர் சிங், 'டுவிட்டர்' பதிவு ஒன்றில், மத்திய அமைச்சர், ஹர்சிம்ரத் கவுரின் தாத்தாவை விமர்சித்தார்.'

கடந்த, 1919ல், ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த நாளில், அதற்கு உத்தரவிட்ட, ஜெனரல் டயர் என்ற, ஆங்கிலேயனுடன், உங்கள் தாத்தா, சர்தார் சுந்தர் சிங் மஜிதியா, இரவு விருந்தில் பங்கேற்றாரே... அது நினைவில்லையா?' என, கேள்வி எழுப்பினார்.இதனால், கொதிப் படைந்த, பாதல் குடும்பம், அமரிந்தர் சிங் மற்றும் காங்., தலைவர்கள் மீது, கடும் விமர்சனங்களை வைத்துஉள்ளனர். இது குறித்து, மத்திய அமைச்சர், ஹர்சிம்ரத் கவுர், டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.'மறைந்த, இந்திரா பிரதமராக இருந்த போது, சீக்கியர்களின் பொற்கோவிலுக்குள், ராணுவத்தை நுழைய வைத்து, கோவிலின் புனிதத்தை கெடுத்தாரே... இதுகுறித்து, இந்திராவின் குடும்பத்தார் மன்னிப்பு கேட்காதது ஏன், என கேட்பீர்களா...' என, அவர் பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.கடந்த, 1984ல் நடந்த இந்த விவகாரம், பஞ்சாப் தேர்தலில், இப்போதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளதால், இப்போதைய காங்கிரஸ் நிர்வாகிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.- ஸ்மிருதி சர்மா -

Advertisement


வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா
16-ஏப்-201911:00:27 IST Report Abuse
Needhiyin Pakkam Nil இந்திரா இந்தியா தேசம் பிளவு பட்டு காலிஸ்தான் உருவாவதை தடுப்பதற்காக பொற்கோவிலுக்குள் நுழைந்து சீக்கியர்களின் மீது தாக்குதல் நடத்தி தேசத்தை காப்பாற்றினார்,
Rate this:
Share this comment
Cancel
sahayadhas - chennai,இந்தியா
16-ஏப்-201910:42:53 IST Report Abuse
sahayadhas இவர்களின் அடிப்படை எண்ணமே பிரச்சனையை உருவாக்குவது தானா? த.நா. பல இன கலவரமுன் விரோதங்கள் உள்ளன. இப்கேயும் கொஞ்சம் வந்து தொடங்கி வைக்கவும்.
Rate this:
Share this comment
Cancel
Jana - rajapalayam,இந்தியா
16-ஏப்-201910:28:25 IST Report Abuse
Jana மத்திய அமைச்சர், ஹர்சிம்ரத் கவுரின் குற்றசாட்டு மிகவும் தவறானது ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் தேசிய பாதுகாப்பு நான் பி ஜே பி அனுதாபி ஆனால் இந்த விஷயத்தில் இதை வன்மையாக கண்டிக்கிறேன். இன்றும் கனடாவில் காலிகஸ்தான் பற்றாளர்கள் கனடா அரசுக்கு தங்கள் ஒட்டு பலத்தால் இதியாவுக்கு எதிராக அந்த அரசை பணிய வைக்க நினைக்கிறார்கள் ஆகவே இந்த பி ஜே பி இந்த விஷயத்தில் இந்திரா காந்தியை எந்த நிலையிலும் குற்றம் சாட்டுவது நம் தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராகவே உள்ளது
Rate this:
Share this comment
Gsanky - Bangalore,இந்தியா
16-ஏப்-201911:23:25 IST Report Abuse
Gsankyஆபரேஷன் ப்ளூ ஸ்டார் காரணமாக பஞ்சாபில் தீவிரவாதம் மறைந்து அமைதி திரும்பியது உண்மைதான். ஆனால் இந்திரா காந்தி படுகொலைக்கு பின் நடந்த சீக்கியர்கள் படுகொலையை அவ்வளவு எளிதில் அவர்கள் மறந்தார்கள் என்பது புரியாத புதிர்....
Rate this:
Share this comment
Darmavan - Chennai,இந்தியா
16-ஏப்-201912:14:20 IST Report Abuse
Darmavanடெல்லியில் 3000 சீக்கியர்களை கொன்றது எந்த கணக்கில் சேர்ப்பது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X