பதட்டமான பூத்களில் துணை ராணுவ வீரர்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதட்டமான பூத்களில் துணை ராணுவ வீரர்கள்

Added : ஏப் 16, 2019
 பதட்டமான பூத்களில் துணை ராணுவ வீரர்கள்

மதுரை:மதுரை நகரில் ஏப்., 18 லோக்சபா தேர்தலன்று பதட்டமான பூத்களில் தலா 4 துணை ராணுவ வீரர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
நாளை மறுநாள் தேர்தல் நடப்பதையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அன்று மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம், கள்ளழகர் எதிர்சேவை நடப்பதால் மாசி வீதிகள், புதுாரில் பக்தர் கூட்டம் அதிகம் இருக்கும். இப்பகுதி பூத்கள் பதட்டமானவையாக கருதப்படுகின்றன. இங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்படுகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சட்டம் ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி., விஜய குமார் ஆய்வு செய்த நிலையில், நேற்றுமுன்தினம் மதுரையில் தேர்தல் டி.ஜி.பி., அசுதோஸ் சுக்லா ஆலோசித்தார். இந்நிலையில் தேர்தல் பாதுகாப்பில் ஈடுபட, நேற்று காலை மகாராஷ்டிராவில் இருந்து இந்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள்(சி.ஐ.எஸ்.எப்.,) 400 பேர் ரயிலில் மதுரை வந்தனர். இவர்கள் பள்ளிகள், திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். தேர்தலன்று பதட்டமான பூத்களில் தலா 4 பேரை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.ஓட்டுகள் எண்ணுமிடமான மருத்துவ கல்லுாரி ஏப்.,18 இரவு முதல் துணை ராணுவ வீரர்கள் கண்காணிப்பில் கொண்டு வரப்படுகிறது. ஏப்.,19 ஆற்றில் அழகர் இறங்கும் விழாவிற்காக கல்லுாரி அமைந்துள்ள காந்தி மியூசியம் ரோடு, பனகல் ரோட்டில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும். இதனால் தகுந்த பாதுகாப்புடன் மெயின் கேட் வழியாக மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை கொண்டு வர ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.பார்வையாளர் உத்தரவுஓட்டு எண்ணிக்கை மையத்தை தேர்தல் பொது பார்வையாளர் வினோத் குமார், போலீஸ் பார்வையாளர் அனர்வாலா ஆய்வு செய்தனர். கலெக்டர் நடராஜன், போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், எஸ்.பி., மணிவண்ணன், ஆர்.டி.ஓ., முருகானந்தம் உடன் சென்றனர். ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சட்டசபை தொகுதிகள் வாரியாக வைக்கப்படும் அறை, ஓட்டு எண்ணிக்கை நடக்குமிடம், அரசியல் கட்சி ஏஜன்ட்களுக்கு செய்ய வேண்டிய வசதிகள் குறித்து பொது பார்வையாளர் விசாரித்தார். இதற்கான முன்னேற்பாடுகளை விரைந்து முடிக்கவும் அதிகரிகளுக்கு பொது பார்வையாளர் உத்தரவிட்டார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X