'மோடி' திரைப்படம் பாருங்கள்! தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு

Updated : ஏப் 16, 2019 | Added : ஏப் 16, 2019 | கருத்துகள் (28)
Advertisement
 'மோடி' திரைப்படம் பாருங்கள்! தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு

புதுடில்லி: பிரதமர் மோடியின் வாழ்க்கையை விவரிக்கும் திரைப்படத்தை பார்த்து, அறிக்கை வழங்கும்படி, தலைமை தேர்தல் ஆணையத்திற்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பாலிவுட் நடிகர், விவேக் ஓபராய் நடிப்பில், ஒமுங் குமார் இயக்கிய, பி.எம்.மோடி திரைப்படம், 11ல் வெளியாக இருந்தது.ஆனால், 'லோக்சபா தேர்தல் முடியும் வரை, இந்த படத்தை வெளியிடக் கூடாது' என, தலைமை தேர்தல் ஆணையம் தடை விதித்தது.





'வேட்பாளரோ அல்லது அரசியல் கட்சியோ, இதுபோன்ற படம் அல்லது கருத்தாக்கம் வழியே, மறைமுகமாக விளம்பரம் தேடுவது, தேர்தல் நடத்தை விதிமீறலாக கருதப்படும்' என, தேர்தல் ஆணையம் காரணம் தெரிவித்தது.இந்த தடையை எதிர்த்து, படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நேற்று, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் அமர்வு முன், விசாரணைக்கு வந்தது.அப்போது, படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர், முகுல் ரோஹத்கி, ''தேர்தல் ஆணையம், மோடி திரைப்படத்தை முழுமையாக பார்க்காமல், 'டிரெய்லர்' மட்டும் பார்த்து, தடை விதித்து உள்ளது. ''அதனால், தேர்தல் ஆணையத்திற்கோ அல்லது அதன் குழுவுக்கோ, திரைப்படத்தை பிரத்யேகமாக திரையிட தயார்,'' என்றார்.இதையடுத்து, 'தேர்தல் ஆணையம், மோடி திரைப்படத்தை பார்த்து, வரும், 19க்குள், அதன் முடிவை, சீலிட்ட உறையில், நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்' என, உத்தரவிட்ட அமர்வு, விசாரணையை, 22ம் தேதிக்கு தள்ளி வைத்தது.இதையடுத்து, படத் தயாரிப்பு நிறுவனம், தேர்தல் ஆணையத்திற்காக, மோடி திரைப்படத்தை பிரத்யேகமாக திரையிடுவதற்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-ஏப்-201918:00:10 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் காங்கிரஸ் சம்பந்தப்பட்ட வழக்கு என்றால் நடுஇரவில் கூட உட்கார்ந்து விசாரிப்பார்கள் , ஜாமீன் கடிதம் வழக்கு விசாரணை வரும்போதே தயாராக இருக்கும், மற்றவர்கள் வழக்கு என்றால் அடுத்த வாரம் பார்க்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
16-ஏப்-201913:08:43 IST Report Abuse
S.Baliah Seer கைப்புண் பார்க்க கண்ணாடி எதற்கு.ட்ரைலராவது புண்ணாக்காவது.தேர்தல் நேரத்தில் வெளியிடுவது மக்களை ஏமாற்றத்தான்.உச்ச நீதி மன்றம் தள்ளுபடி செய்யாமல் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு இடுவது தவறு.
Rate this:
Share this comment
Cancel
16-ஏப்-201911:34:14 IST Report Abuse
ஆப்பு இவ்வளவு நாள் பொறுத்தீங்க...மே 23 வரை பொறுக்க மாட்டீங்களா? சுப்ரீம் கோர்ட்டின் அவசரம் ஒத்துக்கொள்ளும்படி இல்லை. ஒரு வாய்தா குடுத்துற வேண்டியது தானே...இந்த அவசரத்தை வேற கேஸ்களில் காட்டுங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X