டாஸ்மாக்குல விடிய, விடிய குடிச்ச காசு... சோதனையில் பிடிச்சா போடுவாங்க கேசு!

Updated : ஏப் 16, 2019 | Added : ஏப் 16, 2019
Share
Advertisement
'நான் ஆணையிட்டால்...' என, பிரசார வாகனத்தில் எம்.ஜி.ஆர்., பட பாடலை ஒலிபரப்பிக் கொண்டே, அ.தி.மு.க.,வினர், வீதி வீதியாகச் சென்று, தாமரைக்கு ஓட்டு சேகரித்துக் கொண்டிருந்தனர்.அவ்வழியாக ஸ்கூட்டரில் சென்ற மித்ரா, ''இரட்டை இலைக்கு ஓட்டு கேட்டு வந்தவங்களுக்கு, இப்ப, தாமரைக்கு கேக்குறதுக்கு நெருடலா இருக்கறதில்லையா...'' என, நோண்டினாள்.''கேட்டா, கூட்டணி தர்மம்னு சொல்லுவாங்க.
 டாஸ்மாக்குல விடிய, விடிய குடிச்ச காசு... சோதனையில் பிடிச்சா போடுவாங்க கேசு!

'நான் ஆணையிட்டால்...' என, பிரசார வாகனத்தில் எம்.ஜி.ஆர்., பட பாடலை ஒலிபரப்பிக் கொண்டே, அ.தி.மு.க.,வினர், வீதி வீதியாகச் சென்று, தாமரைக்கு ஓட்டு சேகரித்துக் கொண்டிருந்தனர்.அவ்வழியாக ஸ்கூட்டரில் சென்ற மித்ரா, ''இரட்டை இலைக்கு ஓட்டு கேட்டு வந்தவங்களுக்கு, இப்ப, தாமரைக்கு கேக்குறதுக்கு நெருடலா இருக்கறதில்லையா...'' என, நோண்டினாள்.''கேட்டா, கூட்டணி தர்மம்னு சொல்லுவாங்க.

அப்படியில்ல, கொங்கு மண்டலத்தை அ.தி.மு.க., கோட்டைன்னு 'பில்டப்' கொடுத்து வச்சிருக்காங்க. ஏதாவது ஒரு இடத்துல, ஓட்டை விழுந்துருச்சுன்னா, அவ்ளோ தான். அடுத்தடுத்த தேர்தலில் பெரிசாயிடும். அதனால, உசுற கொடுத்து ரத்தத்தின் ரத்தங்கள் வேலை பார்க்குறாங்க. ஒவ்வொரு தொகுதியிலும், காலைல ஒரு வார்டு, சாயாங்காலம் ஒரு வார்டுன்னு, வீதி வீதியா போயி, ஆதரவு திரட்டுறாங்க...'' என்றாள் சித்ரா.
''இதுக்கு முன்னாடி நடந்த தேர்தலில், இந்தளவுக்கு மெனக்கெடலையே...''''இந்த தடவை, கமல் கட்சி களமிறங்கி இருக்கு; தினகரன் கட்சியும் ஓட்டை பிரிக்குமே. ஓட்டு வித்தியாசம் குறைய கூடாதுன்னு நெனைக்கிறாங்க. எப்படியும், ரெண்டு லட்சம் ஓட்டு வித்தியாசத்துல, பா.ஜ., வேட்பாளர ஜெயிக்க வைக்கணும்னு, அ.தி.மு.க.,காரங்க சூளுரைச்சிருக்காங்க...'' என்றாள் சித்ரா.''்மத்த கட்சிகள்ல பணப்பட்டுவாடா ஜோரா நடக்குதாமே...'' என்று கேட்டாள்.அதற்கு சித்ரா, ''ஆமா, நானும் கேள்விப்பட்டேன். ஒரு ஓட்டுக்கு ரெண்டாயிரம் வரைக்கும் சப்ளை செய்றாங்களாம். 'நமக்கேன் வம்பு'ன்னு, தேர்தல் கமிஷன் அதிகாரிங்க கண்டுக்காம இருக்காங்களாம்.

எதிர்க்கட்சி தரப்புல சப்ளை செய்றது தெரியவந்தா, 'அரெஸ்ட்' பண்ணிடுறாங்களாம். தேர்தல் கமிஷனும் ஒருதலைபட்சமா செயல்படுறதா, எதிர்க்கட்சி தரப்புல புகார் கெளம்பியிருக்கு,'' என்றாள்.காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட்டை கடந்து சென்றபோது, மா.கம்யூ.,வினர் வேன் பிரசாரம் செய்ததை பார்த்த மித்ரா, ''பா.ஜ., வேட்பாளருக்கு, ஆதரவா மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும், மா.கம்யூ., வேட்பாளருக்கு ஆதரவா இ.கம்யூ., தேசிய செயலர் ராஜாவும், ஒரே இடத்துல பிரசாரம் செஞ்சாங்களாமே...'' என கேட்டாள்.''ரெண்டு பேருமே பி.என்.புதுார்ல பிரசாரம் செஞ்சாங்க. காலையில, ராஜாவும், நைட்டு, கட்கரியும் பேசுனாங்க. எப்படியாவது ஜெயிக்கணும்னு, கம்யூ., கட்சிக்காரங்க முயற்சி செய்றாங்க. தொழில்துறைக்காரங்கள துாண்டி விடப்பார்த்தாங்க. அவுங்களோ, பா.ஜ., பக்கம் சாய்ஞ்சுட்டாங்க.

தி.மு.க., - காங்., 'சப்போர்ட்' எதிர்பார்க்குற அளவுக்கு இல்லாததால, கம்யூ., கூடாரம் தடுமாறிட்டு இருக்கு. அவுங்க சக்திக்கேற்ப, போராடிட்டு இருக்காங்க,'' என்று பதிலளித்தாள் சித்ரா.''கோவில் திருவிழாவுக்கு யானை கூட, கொடுக்க மாட்டோம்னு சொல்லிட்டாங்களாமே...''''ஆமா, சித்தாபுதுார் ஐயப்பன் கோவில்ல ஒவ்வொரு வருஷமும், ஆறாட்டு விழா விமரிசையா நடக்கும்; யானை ஊர்வலம் நடத்துவாங்க. இந்த வருஷம் கேரளாவுல இருந்து, அஞ்சு யானைகளை அழைச்சுட்டு வர்றதுக்கு போயிருக்காங்க. அனுமதி கொடுக்க, கேரள கவர்மென்ட்
மறுத்துருச்சாம்''''அப்புறம்...?''''கோவில் விழாக்களுக்கு எதுவும் கேட்டு வராதீங்கன்னு சொல்லியிருச்சாம். யானை ஊர்வலம் இல்லாமலே விழாவை நடத்தி முடிச்சிருக்காங்க. இந்த விஷயத்தை கேள்விப்பட்டு, கோவை வாழ் கேரள மக்கள் கொந்தளிப்புல இருக்காங்க. வரப்போற தேர்தல்ல, இந்த பிரச்னை கண்டிப்பா எதிரொலிக்கும்னு பேசிக்கிறாங்க'' என்றாள் சித்ரா.''ஓ... அப்படியா, பிரச்னை பெரிசாயிட்டே இருக்கா...
''ஸ்கூட்டர் கலெக்டர் ஆபீசை கடந்தபோது, ''எலக்ஷன் ஒர்க் செய்றதுக்கு பலரும் ஆர்வம் இல்லாம இருக்காங்களாமே... மெடிக்கல் லீவு போடுறதுக்கு, நெறைய்ய பேரு முயற்சி செய்றதா கேள்விப்பட்டேனே... உண்மையா,'' என, கிளறினாள் மித்ரா.''உண்மைதான், குடியிருக்குற தொகுதியில 'ஒர்க்' கொடுக்கக்கூடாதுன்னு, தேர்தல் கமிஷன் கண்டிப்பா சொல்லிருக்கு. தொகுதி விட்டு தொகுதி போகணும்; ஸ்கூல்ல நைட் தங்கியிருக்கணும். கொசுக்கடி தாங்க முடியாது; 'பிரைவேட்' ஸ்கூலா இருந்தா, பேன் இருக்கும்; கவர்மென்ட் ஸ்கூல்ல பேன் எதிர்பார்க்க முடியாது''''உண்மைதான்''''

அதனால், 'மெடிக்கல் லீவு' போட்டுட்டு, 'எஸ்கேப்' ஆகலாம்னு சில பேரு நெனைக்கிறாங்க. ஆனா, அதுக்கும், தேர்தல் கமிஷன் முட்டுக்கட்டை போட்டுருச்சு. அரசாங்க ஊழியர்கள் யாருக்கும், எந்த காரணத்துக்கும், 'மெடிக்கல் சர்ட்டிபிகேட்' கொடுக்கக் கூடாதுன்னு, அரசு மருத்துவமனை டீனுக்கு உத்தரவு போட்டுருக்கு. எம்.எல்.ஏ., ரெக்கமென்டேஷன் செஞ்சும் கூட, சர்ட்டிபிகேட் கொடுக்க மாட்டோம்னு சொல்லிட்டாங்களாம்,'' என்றாள் சித்ரா.''இதே மாதிரி, தேர்தலையும் முறைகேடு இல்லாம கரெக்டா நடத்துனாங்கன்னா... நல்லாயிருக்கும்'' என்றவாறு, டவுன்ஹால் அருகே, பேக்கரி முன் வண்டியை ஓரங்கட்டினாள் மித்ரா.கல்வித்துறை அலுவலகத்தை பார்த்ததும், ''புதுசா வந்திருக்கிற சி.இ.ஓ., ரொம்ப ஸ்ட்ரிக்ட்டாமே.
வேலைய ஒழுங்கா செய்யலைன்னா, திட்டு பலமா விழுதுன்னு பேசிக்கிறாங்க,'' என, கேட்டாள் மித்ரா.''ஆமாப்பா, வேலை செய்யலைன்னா திட்டத்தானே செய்வாங்க. அவருக்கு கீழே வேலை பார்க்க பயந்துக்கிட்டு, சில அலுவலர்கள் ஸ்கூல் வேலை கேட்டு போயிட்டாங்க. இன்னும் சில பேரு, 'டிரான்ஸ்பர்' கேட்டு அப்ளை செஞ்சிருக்காங்களாம்,'' என்ற சித்ரா, பேக்கரிக்குள் நுழைந்து, இரண்டு இஞ்சி டீ ஆர்டர் செய்தாள்.
சற்று நேரத்தில் டீ வந்தது. அதை எடுத்து உறிஞ்சிய மித்ரா, ''இன்னைக்கு சாயங்காலம் அஞ்சு மணிக்கு, தேர்தல் பிரசாரம் முடிஞ்சிரும். பிரசாரம் முடிஞ்சதும், அரசியல்வாதிகளுக்கு வேலை இருக்காது. இனி, ராத்திரியோட ராத்திரியா 'சப்ளை' நடக்கும்னு சொல்றாங்க,'' என்றாள்.''இன்னைல இருந்து, மூணு நாளைக்கு மதுக்கடையை திறக்கக்கூடாதுன்னு, உத்தரவு போட்டுருக்காங்க... தெரியுமா,'' என்றாள் சித்ரா.
அதற்கு மித்ரா, ''ஆமா...கட்சிக்காரங்க, பெட்டி பெட்டியா மதுபாட்டில் வாங்கி, பதுக்கி வச்சிருக்காங்க. எக்குத்தப்பா சேல்ஸ் ஆகியிருக்கு. வியாபாரம் செஞ்ச பணத்தை, கரெக்டா பேங்குல கட்டணும்னு, 'டாஸ்மாக்' அதிகாரிங்க உத்தரவு போட்டிருக்காங்க.பணம் திருடு போனாலோ, தேர்தல் பறக்கும்படையில சிக்குனாலோ, நிர்வாகம் பொறுப்பில்லைன்னு சொல்லியிருக்காங்களாம். அதனால, 'டாஸ்மாக்' ஊழியர்கள், பணத்தை எப்படி எடுத்துட்டு போறதுன்னு, யோசிச்சிட்டு இருக்காங்க,'' என்றாள் மித்ரா.பின், இருவரும் மீண்டும் வீட்டை நோக்கி புறப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X