சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தபால் ஓட்டுக்கு பணம் தி.மு.க., பிரமுகர் கைது

Added : ஏப் 16, 2019
Advertisement

திருநெல்வேலி:நெல்லை அருகே, தபால் ஓட்டுக்கு பணம் அளிக்க முயன்ற, தி.மு.க., பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் சட்டசபை தொகுதி, தேர்தல் பறக்கும் படையினர், நேற்று முன்தினம் இரவு, சோதனையில் ஈடுபட்டனர். திசையன்விளை மெயின் ரோட்டில், நிற்காமல் சென்ற, டூ - வீலரை மறித்தனர்.அதில் சென்ற, திசையன்விளை நகர, தி.மு.க., முன்னாள் செயலர், ஜெயராஜிடம் விசாரித்ததில், அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார்.
தொடர் விசாரணையில், அவரிடம் இருந்த, தபால் ஓட்டு கவரை வாங்கி பார்த்தனர்.அதில், உவரி போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் காவலர், அந்தோணி சேகரின் ஓட்டுரிமை கவர் இருந்தது. மேலும், ஜெயராஜிடம், 7,500 ரூபாய் இருந்தது.இதையடுத்து, ஓட்டுக்கு பணம் கொடுக்க முயன்றதாக, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, பணம் பறிமுதல் செய்யப் பட்டது. திசையன் விளை போலீசார், ஜெயராஜை கைது செய்தனர். காவலர் அந்தோணி சேகர், 'சஸ்பெண்ட்' செய்யப் பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X