மனைவியை எரித்தவர் தப்பி ஓட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவியை எரித்தவர் தப்பி ஓட்டம்

Added : ஏப் 16, 2019

ராமநாதபுரம்:மனைவியை உயிரோடு எரித்தவர் தப்பி ஓடினார். மனைவி ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் உயிருக்கு போராடுகிறார்.ராமநாதபுரம் அருகே ஈசுபுலிவலசை கிராமத்தை சேர்ந்தவர் குமார் 35. மீன் பிடி தொழில் செய்கிறார். இவரது மனைவி கனகா 27. இரு பெண்குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது.நேற்று முன் தினம் மாலை தகராறு நடந்தது. இதில் குமார் கனகா மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி ஓடினார். உயிருக்கு ஆபத்தான நிலையில் கனகா ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கனகா புகாரில் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து குமாரை தேடி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X