பொது செய்தி

தமிழ்நாடு

திருவாடானை தொகுதிக்கு 34 மண்டல அலுவலர்கள்: ஓட்டுப்பதிவிற்கு தயார்

Added : ஏப் 16, 2019
Advertisement

திருவாடானை:திருவாடானை சட்டசபை தொகுக்கு 34 மண்டல அலுவலர்கள நியமிக்கப்பட்டு, ஓட்டுப் பதிவிற்கான பணிகள் தீவிரமாகநடக்கிறது.
ராமநாதபுரம் லோக்சபா திருவாடானை சட்டசபை தொகுதியில் 346 ஓட்டுசாவடிகள் உள்ளன. இதற்கானஓட்டுபதிவு இயந்திரங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவாடானை தாலுகா அலுவலக அறையில் தயார்நிலையில் வைக்கபட்டது. ஓட்டுபதிவின் போது பழுதானால் உடனே சரி செய்யும் வகையில்10 சதவீதம் கூடுதலாக இயந்திரங்களும் தயார் நிலையில் வைக்கபட்டுள்ளன.தற்போது இத்தொகுதிக்கு 34 மண்டல அலுவலர்கள் நியமிக்கபட்டு, ஓட்டுப்பதிவிற்கான பணிகள்தீவிரமாக நடந்து வருகிறது. இது குறித்து தாசில்தார் சேகர், தேர்தல் துணை தாசில்தார் செந்தில் ஆகியோர் கூறியதாவது: எட்டு முதல் பத்து ஓட்டுச்சாவடிகளுக்கு ஒரு மண்டல அலுவலர் என 34 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஓட்டுச்சாவடிகளுக்கு இயந்திரங்களை கொண்டு செல்வது முதல், ஓட்டுப்பதிவு முடிந்த பின் அதனைதிருப்பி பாதுகாப்பாக ஒப்படைப்பது வரை அப்பணியில் மண்டல அலுவலர்கள் ஈடுபடுவார்கள்.ஓட்டுப்பதிவின் போதுபணிகளில் தொய்வு ஏற்படாமல் ஓட்டுசாவடிகளுக்கு உடனே செல்லும் வகையில் அவர்களுக்கு தனி வாகனம் வழங்கப்பட்டுள்ளது.நாளை (ஏப்.17) காலை முதல் ஓட்டுசாவடிகளுக்கு ஓட்டு இயந்திரம் கொண்டு செல்லும் பணிகள்துவங்கும், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X