பொது செய்தி

தமிழ்நாடு

தி.மலையில் சித்ரா பவுர்ணமி திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

Added : ஏப் 16, 2019 | கருத்துகள் (1)
Advertisement

சென்னை:திருவண்ணாமலை, அருணாச்சலேஸ்வரர் கோவிலில், சித்ரா பவுர்ணமி திருவிழாவையொட்டி, பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை, அருணாச்சலேஸ்வரர் கோவிலில், இந்த ஆண்டுக்கான, சித்ரா பவுர்ணமி திருவிழா, நாளை மறுநாள் துவங்குகிறது. அன்று மாலை, 7:05ல் இருந்து, மறுநாள் மாலை, 5:35 வரை, கிரிவலம் செல்ல உகந்த நேரம் என்பதால், பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

அன்று, ஓட்டுப்பதிவு நடப்பதால், கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்த, 1,700 போலீசாரும், நாட்டு நலப்பணி மாணவர்கள், ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.கூட்ட நெரிசலில் தொலைந்துவிடும் குழந்தைகளை மீட்க, திருவண்ணா மலை நகரம், கிரிவல பாதை மற்றும் பஸ் நிறுத்தங்கள் என, 21 இடங்களில், தற்காலிக, போலீஸ் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பக்தர்களின் வசதிக்காக, வேலுார் சாலை - அண்ணா நுழைவு வாயில், அவலுார்பேட்டை சாலையில், எஸ்.ஆர்.ஜி.டி.எஸ்., பள்ளி, திண்டிவனம் சாலை - ஆறுமுகனார் நகர், வேட்டவலம் சாலை - ஏந்தல் பை - பாஸ் சாலையில், தற்காலிக பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை நகருக்குள், 18ம் தேதி மதியம், 1:00 மணியில் இருந்து, கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. பக்தர்கள், ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்து, தாலுகா அலுவலக மைதானம் உள்ளிட்ட ஆறு இடங்களில், 770 கார்களை நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pannadai Pandian - wuxi,சீனா
16-ஏப்-201909:36:13 IST Report Abuse
Pannadai Pandian அந்த அருணாச்சலேஸ்வர் திமுக-காங்கிரஸ் கூட்டணியை தமிழ்நாட்டில் தோற்கடிப்பார் மோடியை அரியணையில் உக்கார வைப்பார்….
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X