சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போடியில் ஓட்டுக்கு ரூ.1,000 பட்டுவாடா: 'வாட்ஸ்-ஆப்'பில் வைரலாகும் வீடியோ

Added : ஏப் 16, 2019
Advertisement

போடி:தேனி மாவட்டம் போடியில் அ.தி.மு.க., சார்பில் ஓட்டுக்கு ரூபாய் ஆயிரம் வீதம் பட்டுவாடா செய்யப்பட்டதாக 'வாட்ஸ்- ஆப்' வீடியோ வைரலாக பரவி வருகிறது.
தேனி லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளராக துணை முதல்வர் பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்குமார் போட்டியிடுகிறார்.போடி மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி முன்னாள் தலைவர் சவீதா தலைமையில் நேற்று முன்தினம் இரவு அ.தி.மு.க., சார்பில், ஓட்டுக்கு ரூபாய் ஆயிரம் வீதம் பட்டுவாடா செய்யப்பட்டதாக வீடியோ 'வாட்ஸ்- ஆப்' மூலம் வைரலாக பரவி வருகிறது.
மாவட்ட தேர்தல் அலுவலர் பல்லவி பல்தேவ் கூறுகையில், ''போடி தேர்தல் அலுவலர் விசாரித்து சவீதா மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X