பொது செய்தி

இந்தியா

வேலூர் தேர்தல் ரத்து இல்லை : தேர்தல் கமிஷன்

Updated : ஏப் 16, 2019 | Added : ஏப் 16, 2019 | கருத்துகள் (12)
Advertisement

புதுடில்லி : வேலூர் தொகுதியில் லோக்சபா தேர்தலை ரத்து செய்ய உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.வேலூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக அந்த தொகுதியில் தேர்தலை ரத்து செய்வது குறித்து தேர்தல் கமிஷன் ஆலோசித்து வருவதாக மீடியாக்களில் செய்தி பரவியது. இதனையடுத்து இது தொடர்பாக தேர்தல் கமிஷன் இன்று (ஏப்.,16) விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக இந்திய தேர்தல் கமிஷனின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் ஷேய்பாலி ஷரன் கூறுகையில், இதுவரை அப்படி எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.

வேலூர் லோக்சபா தொகுதியில் ஏப்.,18 அன்று தேர்தல் நடக்க உள்ளது. இதன் முடிவுகள் மே 23 ல் அறிவிக்கப்பட உள்ளது. கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீட்டின் படி வேலூரில் அதிமுக - திமுக கட்சிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்த தொகுதியில் அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகமும், திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கப்பட்டுள்ளதாக வந்த தகவலின் பேரில் கடந்த மாதம் வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது. கதிர் ஆனந்திற்கு சொந்தமான இன்ஜினியரிங் கல்லூரியிலும் சோதனை செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த தொகுதியில் தேர்தல் ரத்தாக வாய்ப்புள்ளதாக தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KALIRAJ n -  ( Posted via: Dinamalar Android App )
16-ஏப்-201919:21:02 IST Report Abuse
KALIRAJ n 2000.....முடிந்துவிட்டது என்கிற பூரிப்புதான்....
Rate this:
Share this comment
Cancel
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
16-ஏப்-201915:32:56 IST Report Abuse
Poongavoor Raghupathy Our people have got the right to know the status of such cases against Duraimurugan's son. But it is not clear why status of such cases are not coming out to the Public. What is the verdict in such cases and is there any punishment to the guilty or no punishment is not let out by courts WHY IT IS SO We people are not clear.
Rate this:
Share this comment
Cancel
Girija - Chennai,இந்தியா
16-ஏப்-201914:51:24 IST Report Abuse
Girija எதற்கு இந்த மாதிரி ஒரு குழப்பமான அறிவிப்பு?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X