பொது செய்தி

தமிழ்நாடு

ஹீமோபிலியா நோய்க்கு மருந்து உண்டு: கரூர் மருத்துவ கல்லூரி டீன் தகவல்

Added : ஏப் 16, 2019
Advertisement

கரூர்: ''கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், ஹீமோபிலியா நோய்க்கு மருந்து உண்டு,'' என, டீன் ரோஸி வெண்ணிலா தெரிவித்தார். ஹீமோபிலியா நோய் குறித்த விழிப்புணர்வு முகாம், கரூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் நடந்தது. முகாமை துவக்கி வைத்து, டீன் ரோஸி வெண்ணிலா கூறியதாவது: ஹீமோபிலியா என்பது, ரத்தம் உறையாத் தன்மையாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, அடிபட்டால் ரத்தம் உறையாமல் வழிந்து கொண்டே இருக்கும். இந்த நோய்க்கு, அரசு மருத்துவமனைகளில் மட்டுமே மருந்து உள்ளது. கடந்த ஆண்டு முதல், கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், ஹீமோபிலியா நோய்க்கு மருந்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், உடல் ஊனமுற்றோர் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். பிறகு, கரூர் மாவட்டத்தில், ஹீமோபிலியா நோயால் பாதிக்கப்பட்ட, 40 குழந்தைகளுக்கு, அடையாள அட்டை வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X