பொது செய்தி

தமிழ்நாடு

'ஹிந்து விரோதிகள் வர வேண்டாம்' : ராஜபாளையத்தில் கடும் எதிர்ப்பு

Updated : ஏப் 17, 2019 | Added : ஏப் 16, 2019 | கருத்துகள் (358)
Advertisement
ஹிந்து விரோதி, ராஜபாளையம், கடும் எதிர்ப்பு

ராஜபாளையம்: 'ஹிந்து மதத்தை இழிவுபடுத்தும், எந்த கட்சியும், ஓட்டு கேட்டு வர வேண்டாம்' என, விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில், 200க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள், எச்சரிக்கை அட்டையை வீடுகளில் தொங்க விட்டுள்ளனர்.

ஹிந்து கடவுள்கள் மற்றும் வழக்கங்களை கீழ்த்தரமாக விமர்சனம் செய்யும் தி.க., தலைவர் வீரமணி சமீபத்தில் 'பொள்ளாச்சி பாலியல் சம்பவத்துக்கு முன்னோடி, கிருஷ்ணர் தான்' என, கொச்சைப்படுத்தி பேசியதற்கு, கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. 'இது குறித்து, வீரமணியை, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கண்டிக்கவில்லை எனில், தேர்தலில் தக்க பாடம் கற்பிப்போம்' என, பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ராஜபாளையம், ஐ.என்.டி.யு.சி.,நகரில், 200க்கும் மேற்பட்ட வீடுகளில், 'ஹிந்து மதத்தை இழிவுபடுத்தும் எந்த கட்சியும், ஓட்டு கேட்டு வர வேண்டாம்' என, எச்சரிக்கை அறிவிப்பு தொங்க விடப்பட்டுள்ளது.


இந்த முறை தக்க பதில்


ஒவ்வொரு முறையும், ஹிந்து மதத்தின் மீது இவர்கள் வீசி செல்லும் அமிலம் போன்ற வார்த்தைகளை கேட்டு சகிக்க முடியாமல் இருந்தோம். இந்த முறை தக்க பதில் அளிப்போம்
ஆர்.பி.மகேஸ்வரன்,
பூஜாரி,
ராஜபாளையம்பழிப்பதா?


இவர்களின் பகுத்தறிவு, ஹிந்து மதத்திற்கு எதிராக மட்டுமே தொடர்கிறது. ஓட்டுகளுக்காக கோடிக்கணக்கான மக்களின் மத நம்பிக்கையை பழிக்கின்றனர். எங்களிடம் ஓட்டு கேட்க வர வேண்டாம்.
ஆர்.பிரசன்னா,
குடும்பத் தலைவிமுடிவு கட்டுவோம்


வீரமணி பேசி வருவதற்கு வக்காலத்து வாங்கி வரும், தி.மு.க., தொடர்ந்து இதே வேலையை செய்து வருகிறது. இந்த இழி நிலைக்கு முடிவு கட்டுவோம்
பி.பிரேமா,
குடும்பத் தலைவி
Advertisement
வாசகர் கருத்து (358)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Joseph - Tirunelveli,இந்தியா
19-ஏப்-201909:18:29 IST Report Abuse
Joseph once i went to collect my certificates from Annamalai University. One of the employee misguided me and purposefully delayed my process and finally take 2200 rupees all that i had from my purse and promised me it will reach by next week after collecting my address. Finally he told me visit Chidambaram Nataraja temple and receive his blessings and went to the temple spend 2hours and catch my train and reached home. The certificate never reached me. He is a pucca fraud.Service to humanity is service to God. Dont cheat people in the name of God.
Rate this:
Share this comment
Cancel
ரத்தினம் - Muscat,ஓமன்
18-ஏப்-201908:37:28 IST Report Abuse
ரத்தினம் நம்ம ஊரு இந்தியாவா இருக்கணுமா இல்ல பாகிஸ்தானா, சோமாலியாவா மாறணுமா? மக்கள் சிந்திக்கவும்.
Rate this:
Share this comment
Cancel
ரத்தினம் - Muscat,ஓமன்
18-ஏப்-201908:33:20 IST Report Abuse
ரத்தினம் நம்ம ஊர் மக்களுக்கு வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X