பொது செய்தி

தமிழ்நாடு

உயிருக்கு ஆபத்து: திமுக, காங்., மீது கரூர் கலெக்டர் புகார்

Updated : ஏப் 16, 2019 | Added : ஏப் 16, 2019 | கருத்துகள் (81)
Advertisement
கரூர், கலெக்டர், அன்பழகன், செந்தில்பாலாஜி, ஜோதிமணி

கரூர்: எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கரூர் கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான அன்பழகன் திமுக மற்றும் காங்., மீது புகார் கூறியுள்ளார்.


இது தொடர்பாக நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது: அரவக்குறிச்சி தொகுதி வேட்பாளர் செந்தில்பாலாஜி, கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி சார்பில் வழக்கறிஞர் செந்தில்நாதன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு எனது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். எனக்கு மிரட்டல் விடுத்தனர்.

திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் செந்தில்நாதன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் நள்ளிரவில் எனது வீட்டை முற்றுகையிட்டு கொலைமிரட்டல் விடுத்தனர். எனக்கும் எனது குடும்பத்துக்கும் ஆபத்து உள்ளது என்று கரூர் மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான அன்பழகன் புகார் கூறியுள்ளார். அரவக்குறிச்சி தொகுதி வேட்பாளர் செந்தில்பாலாஜி, கரூர் லோக்சபா தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தூண்டுதலின்படியே இது நடந்தது. அவர்களை போனில் தொடர்புகொண்டு பேசியபோதும் மிரட்டும் தொணியில் பேசினர் என்றார். கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே, இறுதி கட்ட பிரச்சாரம் செய்ய கோட்டாட்சியர் அலுவலகத்தில், செந்தில் பாலாஜியும், ஜோதிமணியும் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி தேர்தல் அலுவலர்களை நிர்பந்தித்து அனுமதி பெற்றனர். ஆனால், அதிமுக தரப்பில் ஏற்கனவே ஆன்லைன்மூலம் பிரச்சாரத்திற்கு அனுமதி பெறப்பட்டுள்ளதால், ஒரே நேரத்தில் இரண்டு பேருக்கும் அனுமதி கொடுத்ததை பரிசீலிக்கும்படி, அமைச்சர் விஜயபாஸ்கர் மனு அளித்தார். அந்த மனுவை ஏற்று, தேர்தல் ஆணையத்திற்கு தகவல் அளித்ததால், திமுக - காங்கிரஸ் தரப்பில் இருந்து எனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது என்றும் கலெக்டர் அன்பழகன் கூறினார்.

இது குறித்து செந்தில்பாலாஜி, ஜோதிமணியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய போது, மிரட்டும் தொணியில் பேசினர். இறுதி கட்ட பிரசாரத்திற்காக கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே பிரசாரம் செய்ய, செந்தில் பாலாஜியும், ஜோதிமணியும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியும் மிரட்டல் விடுத்தும் அனுமதி வாங்கியுள்ளனர்.





அங்கு பிரசாரம் செய்ய போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளோம் எனக்கூறி, மனு அளித்துள்ளார். இது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு தகவல் அளித்துள்ளோம். இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு உள்ளது. 1 மணி நேரம் போராட்டம் நடந்த நிலையில், போலீஸ் எஸ்.பி.,க்கு தகவல் தெரிவித்தேன். அவர் வந்து என்னை மீட்டார். எனது உயிருக்கும், குடும்பத்தினருக்கும் ஆபத்து உள்ளது. ஜனநாயகத்தில், நேர்மையாக பணி செய்ய விட மறுக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (81)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram - ottawa,கனடா
22-ஏப்-201915:11:58 IST Report Abuse
Ram திருடர்கள் முன்னேற்ற கழகம் வெற்றிபெற்றால் இதைவிட கொடுமையெல்லாம் நடக்கும் பாருங்கள்
Rate this:
Share this comment
Cancel
Girija - Chennai,இந்தியா
22-ஏப்-201914:12:03 IST Report Abuse
Girija அசப்புல பார்க்க அந்த அமைச்சர் போல இருக்கிறார்
Rate this:
Share this comment
Cancel
Annamalai Nagappa - CHENNAI,இந்தியா
22-ஏப்-201914:06:53 IST Report Abuse
Annamalai Nagappa இப்படி பேசுகிறவரை எல்லாம் ஆட்சியராக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது போலீசே திருடனுக்கு பயப்படுவது போல உள்ளது. இவர் சொல்வது உண்மையாக இருந்தாலும் ஆட்சியர் என்ற வகையில் இவரிடம் உள்ள அதிகாரங்களை பயன்படுத்தி நிலைமையை சரியாக கையாளவேண்டும். இது ஒரு நாடகம் என்றே நினைக்க தோன்றுகிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X