மசூதியில் பெண்கள் நுழைய அனுமதி கேட்டு வழக்கு

Updated : ஏப் 16, 2019 | Added : ஏப் 16, 2019 | கருத்துகள் (71)
Share
Advertisement
மசூதி, பெண்கள், சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி: மசூதிக்குள் முஸ்லிம் பெண்கள் நுழைய அனுமதி கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த தம்பதியினர் வழக்கு தொடர்ந்தனர். இது குறித்து பதிலளிக்க, மத்திய அரசு, வக்பு வாரியத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த யாஷ்மீஜ் மற்றும் ஜூபைர் அகமது பீர்ஜாதே என்ற தம்பதி மசூதிகளில், எந்த வித கட்டுப்பாடும் இல்லாமல் முஸ்லிம் பெண்கள் நுழைய அனுமதி வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். சபரிமலை தீர்ப்பினால் ஈர்க்கப்பட்டு மசூதியில் உள்ள பாலின வேறுபாட்டை எதிர்த்து மனு போட்டதாகவும், மசூதியில் பெண்களுக்கு அனுமதி மறுப்பது சட்ட விரோதம், அரசியல் சாசனத்திற்கு எதிரானது. அரசியல் சட்டப்பிரிவு 14, 15, 21, 25,29 பிரிவுகளுக்கு எதிரானது எனவும் மனுவில் கூறினர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாப்தே தலைமையிலான அமர்வு, சபரிமலை தீர்ப்பு காரணமாக இந்த வழக்கை விசாரணை நடத்துகிறோம் எனக்கூறி, இந்த மனு குறித்து பதில் அளிக்க மத்திய அரசு, மத்திய வக்பு வாரியம் மற்றும் அகில இந்திய முஸ்லிம் தனி நபர் வாரியத்திற்கு உத்தரவிட்டதுடன், மசூதியில் தொழுகை நடத்த சென்ற போது தடுத்தார்களா என அந்த தம்பதியிடம் கேள்வி எழுப்பியது. இந்த மனுவை விசாரிக்க மேலும் சில கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
வழக்கை தொடர்ந்த ஷூபைர் அகமது பீர்ஜாதே கூறுகையில், மசூதியில் தொழுகை நடத்த விரும்பும் பெண்களுக்கு உதவ வேண்டும் என போலீசாரிடம் கோரிக்கை அளித்தோம். ஆனால், ஜமாத் நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், வேறு வழியின்றி வழக்கு தொடர்ந்தோம் எனக்கூறினர்.


latest tamil news


Advertisement
வாசகர் கருத்து (71)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
17-ஏப்-201908:19:37 IST Report Abuse
S.Baliah Seer இதற்கு ஆதரவு தருபவர்கள் ஐயப்பன் கோவில் விஷயத்தில் மட்டும் வேறுபடுவானேன்.உங்கள் முதுகில் உள்ள அழுக்கை கழுவியபின் அடுத்தவன் முதுகை பற்றி பேசுங்கள்.
Rate this:
Cancel
Ansarmohamed Rafi - fujairah,ஐக்கிய அரபு நாடுகள்
17-ஏப்-201907:23:59 IST Report Abuse
Ansarmohamed Rafi இந்த லூசுங்கள என்ன என்று சொல்வது . நாட்ல எவ்வளவோ பிரச்சினை இருக்கு ஏன் இதுங்க இதை பிடிச்சு தொங்கிட்டு இருக்கு தான் தெரியல. யாரும் போக வேண்டாம் என்று சொல்லவில்லையே. இன்று வரை துபாயில் எல்லா பெரிய பள்ளிகளிலும் பெண்களுக்கு என்று தொழுகை தனி வசதி உருவாக்கப்பட்டு இருக்கிறது பெண்கள் குழந்தைகள் எல்லோரும் பள்ளிக்கு போவதை நான் பார்த்திருக்கிறேன். ஆம்பள எந்த வேலை என்றாலும் தூக்கி போட்டு விட்டு உடனே பள்ளிக்கு போய் விடுவார்கள். பெண்களால் அது முடியுமா. என் கூட வேலை செய்பவர்கள் முதலாளி அந்த அந்த நேரத்தில் சரியாக பள்ளிக்கு போகிறார்கள். இதே பெண்களால் போக முடியுமா. சில பேர் வீட்டு வேலையில் இருப்பார்கள் , சில பேர் அப்போது தான் சமைத்துக்கொண்டு இருப்பார்கள் சமையலை விட்டு போக பெண்களால் முடியுமா? முக்கால்வாசி பேர் டிவி சீரியல் பார்த்துக்கொண்டு இருப்பீர்கள். சீரியல் பார்க்கும்போது புருஷன் கூப்பிட்டாவே உங்களுக்கு காது கேட்காது. இதில் ஆண்டவன் கூப்பிட்டா உங்கள் காது கேட்க போகிறது. சும்மா மீடியால பேமஸ் ஆகம்=ணும்னு இதை மாதிரி டம்மி கேஸ் போட்டு உங்களுக்கு நீங்களே கெட்ட பேர் வாங்கிக்க வேண்டாம். பக்கத்துல ஒருத்தன் உட்கார்ந்து இருக்கார் பாருங்க அவன் ஐந்து நேரமும் இந்த பெண்மணியை பள்ளிக்கு கொண்டு போக முடியுமா. சில வீட்டில் பால் குடிக்கும் குழந்தை இருக்கும். வயதான பெரியவர்கள் இருப்பார்கள். நோய் உள்ளவர்கள் இருப்பார்கள் . இதை எல்லாம் நினைத்து தான் எல்லா மதமும் பெண்களுக்கு சில விதிவிலக்கு கொடுத்துள்ளது. அதை விட்டு விட்டு ஒரு சில பேர் செய்யும் வேண்டாத காரியங்களால் எவ்வளவு பிரச்சினை.
Rate this:
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
17-ஏப்-201907:15:06 IST Report Abuse
mindum vasantham ஓசி சோறு மணியின் கருத்து என்ன இங்கே
Rate this:
mindum vasantham - madurai,இந்தியா
17-ஏப்-201907:55:59 IST Report Abuse
mindum vasanthamபதிவிட்டிருக்கலாம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X