அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் அனல் பிரசாரம் ஓய்ந்தது

Updated : ஏப் 16, 2019 | Added : ஏப் 16, 2019 | கருத்துகள் (9)
Share
Advertisement
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லோக்சபா தேர்தலுக்கான பிரசாரம் இன்று (ஏப்., 16) மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. இறுதி நாளான இன்று முதல்வர் இ.பி.எஸ்., திமுக தலைவர் ஸ்டாலின், தேமுதிக சார்பில் பிரேமலதா , அமமுக சார்பில் தினகரன், இடது சாரி மூத்த நிர்வாகிகளும் ஓட்டு வேட்டையில் ஈடுபட்டனர். ஓட்டுப்பதிவு நாளை மறுநாள் (18 ம் தேதி ) நடக்கிறது.தமிழகத்தில், 39 லோக்சபா தொகுதி, 18 சட்டசபை

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லோக்சபா தேர்தலுக்கான பிரசாரம் இன்று (ஏப்., 16) மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. இறுதி நாளான இன்று முதல்வர் இ.பி.எஸ்., திமுக தலைவர் ஸ்டாலின், தேமுதிக சார்பில் பிரேமலதா , அமமுக சார்பில் தினகரன், இடது சாரி மூத்த நிர்வாகிகளும் ஓட்டு வேட்டையில் ஈடுபட்டனர். ஓட்டுப்பதிவு நாளை மறுநாள் (18 ம் தேதி ) நடக்கிறது.



latest tamil news


2-ம் கட்ட லோக்சபா தேர்தல் தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 18ம்தேதி நடக்கிறது. அதேநாளில் தமிழகத்தில் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடக்கிறது.



தமிழகத்தில், 39 லோக்சபா தொகுதி, 18 சட்டசபை தொகுதிகளுக்கும், புதுச்சேரியில், ஒரு லோக்சபா தொகுதி, ஒரு சட்டசபை தொகுதிக்கும், வரும், 18ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. 39 லோக்சபா தொகுதிகளில், 781 ஆண்கள், 63 பெண்கள், ஒரு திருநங்கை உட்பட, 845 வேட்பாளர்களும், சட்டசபை இடைத்தேர்தலில் 242 ஆண்கள், 27 பெண்கள் என, மொத்தம், 269 வேட்பாளர்கள், களத்தில் உள்ளனர். கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சி தலைவர்கள், மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும், சுயேச்சை வேட்பாளர்களும், கடந்த ஒரு மாதமாக, தொகுதி முழுவதும், பிரசாரம் செய்தனர்.

தேர்தல் விதிமுறைகளின்படி, ஓட்டுப்பதிவு நிறைவடைவதற்கு, 48 மணி நேரத்திற்கு முன், பிரசாரம் நிறுத்தப்பட வேண்டும். அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று மாலை, 6:00 மணியுடன், பிரசாரம் ஒய்ந்தது. இதனை முன்னிட்டு கடைசி கட்டத்தில் தலைவர்கள் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

சேலத்தில் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து முதல்வர் பழனிசாமி வீதி வீதியாக நடந்து சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி ஓட்டு சேகரித்தார்.

நாகை, திருவாரூரில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் செல்வராஜ், பூண்டி கலைவாணன் ஆகியோரை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பல இடங்களில் பிரசாரம் செய்தார்.

சென்னையில் அமமுக கட்சியின் தினகரன் , மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் சென்னையில் பல இடங்களில் பிரசாரம் செய்தனர். வேட்பாளர்களும், தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் வீதி வீதியாக சென்று கடைசி கட்ட ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர்.


கரூரில் லேசான மோதல்


கரூர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் அதிமுகவினரும், காங்கிரசாரும் ஒரே நேரத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அப்போது இரு கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். தேர்தல் அறிவித்த நாள் முதல் இதுவரை தமிழகத்தில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய வன்முறை ஏதுமில்லை. போலீசார் நடத்திய வாகன சோதனையில் இதுவரை 135 கோடி ரூபாய் உரிய ஆவணங்கள் இல்லாமல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


latest tamil news




ஆட்சி மாற்றம் வரும்: ஸ்டாலின்


திருவாரூரில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: சர்வாதிகார எண்ணத்துடன் செயல்படும் நபர் பிரதமர் மோடி , 1000 , 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என திடீரென அறிவித்ததால் மக்கள் பெரும்பாடுபட்டனர். கறுப்பு பணத்தை ஒழிக்க செல்லாது என அறிவித்தேன் என்றார். ஆனால் கறுப்பு பணம் ஒழிக்கப்பட்டதா ? ஒரு திருடனை கண்டுபிடிக்க ஊர் மக்கள் அனைவரையும் பிடித்து செல்லலாமா ? நீட் தேர்வு கொண்டு வந்ததால் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டனர். விவசாயிகள் , தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளாயினர்.
சர்வாதிகாரி தயவில் தமிழகத்தில் உதவாக்கரை ஆட்சி நடக்கிறது. திமுக 5 முறை ஆட்சியில் இருந்தபோது நாங்கள் செய்த சாதனைகளை கூறியும், இன்னும் செய்ய வேண்டியதை சொல்லி ஓட்டுக்கள் கேட்டு வருகிறோம். மோடியும், எடப்பாடியும் தங்களின் சாதனைகளை சொல்ல முடியாது. ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது. இதனை முதலில் ஓ.பி.எஸ்,தானே சொன்னார். நான் எதிர்கட்சி தலைவராக இருந்து சந்தேகங்களை எழுப்பினேன். ஜெயலலிதா ஒரு முதல்வராக இருந்ததால் நான் கேள்வி எழுப்புகிறேன். கோட நாட்டில் என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். பொள்ளாச்சியில் நடந்த பலாத்காரம் இந்தியாவிலேயே நடக்காத சம்பவம். 7 ஆண்டுகளாக போலீசார் என்ன செய்தார்கள் ? நாளை மறுநாள் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஓட்டளியுங்கள். மத்தியிலும் , மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் வரும். ஆட்சிக்கு வந்ததும், முழு விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை சிறையில் அடைப்பதே எனது முதல் வேலை. ஸ்டெர்லைட், அரசுஊழியர், விவசாயிகள், மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டனர். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

சென்னையில் தினகரன் பேசுகையில்: தமிழ்நாட்டு நலன்காத்திட, வேலைவாய்ப்பு பெருகிட, நெசவாளர்கள், மீனவர்கள், தச்சு தொழிலாளர்கள் உரிமையை காத்திட, வறுமையை போக்கிட எங்களின் கட்சிக்கு ஓட்டளிக்க வேண்டும் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரத்தினம் - Muscat,ஓமன்
17-ஏப்-201908:43:37 IST Report Abuse
ரத்தினம் கொள்ளைக்காரர்களிடமிருந்தும், ஏமாற்றுக்காரர்களிடமிருந்தும், ரவுடிகளிடமிருந்தும், அயல்நாட்டு மதமாற்று கும்பல்களிடமிருந்தும் நாட்டை காப்பாற்றிக்கொள்ள மக்களுக்கு நல்ல வாய்ப்பு.
Rate this:
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
17-ஏப்-201908:25:53 IST Report Abuse
Srinivasan Kannaiya ரத்தம் வழிந்த காதுகளில் மருந்திடலாம்
Rate this:
Cancel
Gopalakrishnan - Kuzhumani,இந்தியா
16-ஏப்-201919:34:50 IST Report Abuse
Gopalakrishnan தற்போது கிடைத்த செய்தி .... ...வேலூர் ...வேலூர் வேலூர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X