கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கனிமொழி,கதிர் ஆனந்த் போட்டியிட தகுதி நீக்க மனு தள்ளுபடி

Added : ஏப் 16, 2019 | கருத்துகள் (8)
Advertisement
கனிமொழி,கதிர் ஆனந்த், போட்டியிட, தகுதி நீக்க, மனு, தள்ளுபடி

மதுரை:பெட்டிப் பெட்டியாக பணம் பறிமுதல் மற்றும் ஆரத்திக்கு பணம் தந்தது ஆகியவற்றால் கதிர் ஆனந்த், கனிமொழியை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனுவை சென்னை ஐகோர்ட் மதுரை கிளை தள்ளுபடி செய்தது.
ராமநாதபுரம் கீழச்சிறுபோது கிராமத்தைச் சேர்ந்த அப்துல்லா சேட், சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தமிழகத்தில் வருகிற 18-ந்தேதி லோக்சபா தேர்தல் நடக்க இருக்கிறது. தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார்.கடந்த மாதம் 27-ந்தேதி வேப்பலோடை கிராமத்தில் கனிமொழிக்கு ஆரத்தி எடுத்த வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டது. இது தொடர்பாக கனிமொழி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், வேலூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் சார்பிலும் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்யப்படுகிறது. கதிர் ஆனந்த் வீடு, அவரது ஆதரவாளர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கோடிக்கணக்கான ரூபாய் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக கதிர் ஆனந்த், அவரது ஆதரவாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
எனவே, அவர்களை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதியிழப்பு செய்யக்கோரி தேர்தல் கமிஷனுக்கு கடந்த 5-ந்தேதி மனு அனுப்பினேன். அந்த மனுவின் அடிப்படையில் கனிமொழி, கதிர் ஆனந்த் ஆகியோரை தகுதியிழப்பு செய்ய இந்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை ஐகோர்ட் மதுரை கிளையின் தேர்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அமர்வு இம்மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்து விட்டது.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay - Bangalore,இந்தியா
17-ஏப்-201907:44:49 IST Report Abuse
Vijay காசு கொடுப்பது நிரூபிக்க பட்டால் அந்த கட்சி வேட்பாளர் க்கு வாழ் நாள் தடை விதிக்க வேண்டும் .. எந்த கட்சியாக இருந்தாலும் சரி .. ஒரு கட்சி கொடுப்பதால் தான் இன்னோரு கட்சி குடுக்க வேண்டி உள்ளது ... இதை ஆரமிப்பித்தது திமுக தான் ....
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
16-ஏப்-201921:17:50 IST Report Abuse
A.George Alphonse Morning Vazhakku Thallu Padi.Afterwards IT raid.This is politics.
Rate this:
Share this comment
Cancel
Balaji Pad - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
16-ஏப்-201920:08:32 IST Report Abuse
Balaji Pad வர வர நீதிபதிகளும் லஞ்சம் வாங்க ஆரம்பித்து விட்டார்கள் போல என்ன கொடும சரவணன்
Rate this:
Share this comment
Giridharan S - Kancheepuram,இந்தியா
17-ஏப்-201906:38:39 IST Report Abuse
Giridharan Sஇது போன்ற பதிவுகள் வேண்டாம் நன்பா. அது உனக்கு நல்லது இல்லை. நீதிமன்றத்தை இப்படி கேவலப்படுத்துவது உனக்கு அழகு இல்லை....
Rate this:
Share this comment
Rao - ,
17-ஏப்-201908:28:23 IST Report Abuse
Raoviolation done by DMK and opposition parties ,...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X