ஓட்டின் பலமே சர்ஜிக்கல் தாக்குதல்| Dinamalar

ஓட்டின் பலமே சர்ஜிக்கல் தாக்குதல்

Updated : ஏப் 16, 2019 | Added : ஏப் 16, 2019 | கருத்துகள் (13)
Share
ராய்ப்பூர்:சத்தீஸ்கரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: மக்கள் அளித்த ஒரு ஓட்டின் பலம் காரணமாக தான், எல்லை தாண்டி சர்ஜிக்கல், விமான தாக்குதல் நடத்த முடிகிறது. விண்வெளியில் செயற்கைகோள் சுட்டு வீழ்த்த முடிகிறது. மோடி என பெயர் வைத்தவர்கள் திருடர்கள் என காங். கட்சியினர் விமர்சிக்கின்றனர். பின்தங்கியவர்களை விமர்சிப்பதும், அடிமைகளாக

ராய்ப்பூர்:சத்தீஸ்கரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: மக்கள் அளித்த ஒரு ஓட்டின் பலம் காரணமாக தான், எல்லை தாண்டி சர்ஜிக்கல், விமான தாக்குதல் நடத்த முடிகிறது. விண்வெளியில் செயற்கைகோள் சுட்டு வீழ்த்த முடிகிறது.



latest tamil news



மோடி என பெயர் வைத்தவர்கள் திருடர்கள் என காங். கட்சியினர் விமர்சிக்கின்றனர். பின்தங்கியவர்களை விமர்சிப்பதும், அடிமைகளாக நினைப்பதும் சுல்தான்களின் மனநிலையை காட்டுகிறது.. கைதட்டல் வாங்க வேண்டும் என்பதற்காக ஒரு ஒட்டுமொத்த சமுதாயத்தையே திருடர்களாக சித்தரிக்கின்றனர். இது உங்கள் சேவகருக்கு நேர்ந்த அவமானம். தற்போது நாடு முழுவதும் பா.ஜ., ஆதரவு அலை வீசுவதால், காங்கிரஸ், மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.


latest tamil news





இது என்னவகையான அரசியல்?


பா.ஜ. ஆதரவு அலையால் காங்கிரசுக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் இரவில் தூக்கம் வரவில்லை. அவர்கள் என்னை மோசமாக விமர்சிக்கின்றனர். அவமானபடுத்துகின்றனர்.வாக்காளர்கள் இதை பார்த்து கொண்டிருக்கின்றனர்.
ராகுல் குடும்பத்தினர், நாளிதழுக்கு இடம் ஒதுக்கியதில், முறைகேடு செய்தனர். தற்போது ஜாமினில் உள்ளனர். தேசிய பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்களில் அவர்கள் கமிஷன் கேட்டனர். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X