அரசியல் செய்தி

தமிழ்நாடு

வேலூர் லோக்சபா தேர்தல் ரத்து; ஜனாதிபதி அதிரடி உத்தரவு

Updated : ஏப் 16, 2019 | Added : ஏப் 16, 2019 | கருத்துகள் (42)
Advertisement

புதுடில்லி : வேலூர் தொகுதியில் லோக்சபா தேர்தலை ரத்து செய்ய ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். காலையில் உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை என தேர்தல் கமிஷன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இது ஜனநாயக படுகொலை என்று துரைமுருகனும், இது சரியான நடவடிக்கை என மாநில அமைச்சர் ஜெயக்குமாரும் கூறி உள்ளனர். தேர்தல் ரத்தாகும் என நேற்றிரவே தினமலர் இணைய தளத்தில் செய்தி வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.






வேலூரில் அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிகட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், திமுக சார்பில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் அமமுக சார்பில் பாண்டுரங்கன் , மக்கள் நீதி மையம் சார்பில் சுரேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.





வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக அந்த தொகுதியில் தேர்தலை ரத்து செய்வது குறித்து தேர்தல் கமிஷன் ஆலோசித்து வருவதாக நேற்று இரவு மீடியாக்களில் செய்தி பரவியது. மேலும் தேர்தல் கமிஷன் சார்பில் ஜனாதிபதிக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இது தொடர்பாக தேர்தல் கமிஷன் இன்று காலை (ஏப்.,16) அளித்த விளக்கத்தில் இதுவரை அப்படி எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என விளக்கம் அளித்தார்.


குடோனில் பணம் பதுக்கல்


வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் காட்பாடியில் 11.53 கோடி பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக கடந்த மாதம் வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் பணம் கைப்பற்றப்பட்டது. கதிர் ஆனந்திற்கு சொந்தமான இன்ஜினியரிங் கல்லூரியிலும் சோதனை செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த தொகுதியில் தேர்தல் ரத்தாக வாய்ப்புள்ளதாக நேற்று இரவு முதல் தகவல் பரவியது.
இந்நிலையில் இன்று ( 16 ம் தேதி) இரவு தேர்தலை ரத்து செய்ய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.


சட்டசபை தேர்தல் நடக்கும்


இதற்கிடையில் வேலூர் தொகுதியில் ஆம்பூர், குடியாத்தத்தில் சட்டசபை இடைத்தேர்தல் நடக்கும் என தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

துரைமுருகன் கூறியதாவது: வேலுார் லோக்சபா தொகுதி தேர்தல் ரத்து செய்திருப்பது மிகப்பெரிய ஜனநாயக படுகொலை. எதிர்கட்சிகளை அச்சுறுத்தும் நடவடிக்கை. மோடி ஆட்சியை வீழ்த்தும் தேர்தலாக இத்தேர்தல் அமைய வேண்டும் என தி.மு.க பொருளாளர் துரைமுருகன் கூறினார்.

அமைச்சர் ஜெயக்குமார்:வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். தேர்தலை ரத்து செய்யப்பட்டிருப்பதன் மூலம் தேர்தல் ஆணையம் நல்ல பாடத்தை கற்று தந்துள்ளது. தேர்தல் ஆணையம் அவசரப்படாமல் விசாரணை நடத்தி முடிவுக்கு வந்துள்ளது. இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்



ஸ்டாலின் கருத்து


தேர்தல் ரத்து குறித்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறியதாவது; தி..மு.க.வை களங்கபடுத்தவே தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது ஜனநாயக படுகொலை. எங்களை களங்கப்படுத்த தேர்தல் ஆணையத்தை பிரதமர் மோடி பயன்படுத்தியுள்ளார் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pannadai Pandian - wuxi,சீனா
17-ஏப்-201906:00:17 IST Report Abuse
Pannadai Pandian சுத்தமா நூறு கொடிய காலி பண்ணிட்டேன்களே, ஐயோ…...இனி திமுக ஆட்சிக்கு வரப்போவதில்லை…..எப்படி இந்த நூறு கொடிய திரும்ப சம்பாதிக்கறது ???
Rate this:
Share this comment
Cancel
oce - tokyo,ஜப்பான்
17-ஏப்-201905:58:29 IST Report Abuse
oce துரை முருகனது தெனாவெட்டுக்கு கிடைத்த சரியான சம்மட்டி அடி.
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
17-ஏப்-201905:35:31 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> வெரி குட் மக்களுக்கு வெந்து உருகும் வெய்யில்லே அவஸ்தைவேண்டாம் என்ஜாய் மாட்டிண்டான் கட்டுகளுடன் (பலகோடிகள்) இந்த ஆளுக்குப்பார்வையே கோணல்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X