அரசியல் செய்தி

தமிழ்நாடு

வாழைப்பழத்திற்கு பணம் கொடுத்தேன்: வீடியோ புகாருக்கு இ.பி.எஸ். மறுப்பு

Added : ஏப் 16, 2019 | கருத்துகள் (11)
Advertisement
வாழைப்பழம், பணம், கொடுத்தேன், வீடியோ, புகாருக்கு இ.பி.எஸ்., மறுப்பு

சேலம்: சேலத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் முதல்வர் இ.பி.எஸ். பெண் வாக்காளருக்கு பணம் கொடுத்ததாக புகார் எழுந்தது. வாழைப்பழம் வாங்கி கொணடு அதற்கு பணம் கொடுத்தேன் என முதல்வர் இ.பி.எஸ். மறுப்பு தெரிவித்துள்ளார்.
சேலத்தில் இன்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் சேலம் நகரில் முக்கிய வீதிகளில் உள்ள காய்கறி கடைகள், பழக்கடைகள், மளிகைக்கடைகள், பாத்திரக்கடைகள், டீக்கடைகள் என ஒவ்வொரு கடையிலும் ஏறி இறங்கி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து முதல்வர் இ.பி.எஸ்.. நடந்தே சென்று ஓட்டு சேகரித்தார். அப்போது கடைஒன்றில் வாழைப்பழம் வியாபாரம் செய்து வந்த பெண்ணிடம் தேர்தல் பிரசார நோட்டீசுடன் பணத்தை மறைத்து வைத்து கொடுத்ததாக வீடியோ காட்சி டி.வி. சேனல் ஒன்றில் வெளியானது. வாக்காளர்களுக்கு முதல்வேர பணம் கொடுத்ததாக இ.பி.எஸ். மீது புகார் எழுந்தது.
இந்த வீடியோ காட்சிக்கு மறுப்பு தெரிவித்த இ.பி.எஸ். கூறியது, பணம் எதுவும் கொடுக்கவில்லை. அந்த பெண்ணிடம் வாழைப்பழம் வாங்கிவிட்டு அதற்கு விலையாக பணம் கொடுத்தேன். எந்த பொருள் வாங்கினாலும் அதற்கு விலையாக பணம் கொடுப்பது வழக்கம். நான் வாழைப்பழம் வாங்கியதை எடிட் செய்துவிட்டு பணம் கொடுத்ததை மட்டும் டி.வி.யில் ஒளிபரப்பியுள்ளது. இது இட்டுகட்டிய கதை என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VELAN S - Chennai,இந்தியா
20-ஏப்-201919:18:51 IST Report Abuse
VELAN S தேர்தல் கமிஷன் செய்ய வேண்டியதுதானே .
Rate this:
Share this comment
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
19-ஏப்-201916:22:19 IST Report Abuse
r.sundaram சூப்பர் பதில், எங்க முதல்வரை அசைக்க முடியாது, தெரிந்து கொள்ளுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
PANDA PANDI - Aththipatti,இந்தியா
19-ஏப்-201905:20:03 IST Report Abuse
PANDA PANDI பழம் தந்தார் வாங்கினேன். காசு கொடுத்து. தமிழக மக்கள் இலவசமாக கொடுக்கலாம்னு என்று தீர்மானித்துவிட்டார்கள் என்ற டவுட். MAY23 அன்று உங்க்ளுக்கு FREE FREE FREEEEE.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X