அரசியல் செய்தி

தமிழ்நாடு

தூத்துக்குடியில் கனிமொழி வீட்டில் வருமான வரித்துறை சோதனை

Updated : ஏப் 16, 2019 | Added : ஏப் 16, 2019 | கருத்துகள் (74)
Advertisement

துாத்துக்குடி: துாத்துக்குடி குறிஞ்சி நகரில் திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருக்கும் வீட்டில் 10 பேர் கொண்ட வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.







தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க.,சார்பில் போட்டியிடும் கனிமொழி குறிஞ்சி நகர் பகுதியில் தங்கியிருந்து பிரசாரம் செய்து வருகிறார். இவரை எதிர்த்து பா.ஜ., மாநில தலைவர் தமிழிசை போட்டியிடுகிறார்.





கடந்த சில நாட்களாக தேர்தல் பிரசாரம் சூடு பிடித்து வந்த நிலையில் இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது. நாளை மறுநாள் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது.






இந்நிலையில் 10 பேர் கொண்ட வருமானவரித்துறையினர் கனிமொழி தற்போது தங்கி உள்ள வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். வீடு, அலுவலகத்தில் உள்ளே, வெளியே செல்ல யாரையும் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. ரெய்டு நடக்கும் இடத்தில் திமுக மூத்த நிர்வாகிகள் உள்பட பலர் குவிந்துள்ளனர்.


வருமானவரித்துறை விளக்கம்


மாவட்ட கலெக்டரின் தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தி வருவதாக வருவாய்துறையினர் கூறினர்.






தமிழிசை வீட்டில் ரெய்து நடத்துவார்களா ?


ரெய்டு குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கூறியதாவது: கனிமொழி வீட்டில் ரெய்டு நடத்த புகார் அளித்தது யார் ? தேனியில் ஓ.பி.எஸ். மகன் வீடு, வீடாக பணம் பட்டுவாடா செய்துள்ளார். அங்கு ரெய்டு நடத்தாதது ஏன் ? தூத்துக்குடியில் பா.ஜ., தலைவர் தமிழிசை வீட்டில் கோடி,கோடியாக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. அங்கு சென்று ரெய்டு நடத்த வேண்டியதுதானே ? இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.




Advertisement




வாசகர் கருத்து (74)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
17-ஏப்-201911:13:04 IST Report Abuse
Natarajan Ramanathan ஏகப்பட்ட .... சாதனங்கள் சிக்கியதாக தகவல்.
Rate this:
Share this comment
Cancel
சீனு, கூடுவாஞ்சேரி உங்களுக்கு தெரியுமா. அமலாக்கத்துறையால் ஜெயலலிதா ஊழல் செய்ததை நிருபிக்க முடியவில்லை. அதனால் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கை போட்டு சிக்க வைத்துவிட்டனர். இந்த வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கை யவர் மீது வேண்டுமானாலும் தொடுக்கலாம். மிகவும் சுலபம். ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் அவர் உச்சநீதிமன்றம் மன்றத்தில் வழக்கை தள்ளுபடி செய்திருப்பார். அவர் இறந்த பிறகு தான் அவர் குற்றவாளி என்று தீர்ப்பு வந்தது.
Rate this:
Share this comment
Cancel
17-ஏப்-201906:02:22 IST Report Abuse
ஸாயிப்ரியா கனிமொழி துரைமுருகன் போல் அஜாக்ரதை ஆனவரா? தகவல் சரிதானா என்று யோசித்து தேடவும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X