அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
வாங்கியாச்சு நோட்டு... யாருக்கு ஓட்டு!
வந்ததை வரவில் வைத்த வாக்காளர்கள்
குழப்பத்தில் தவிக்கும் வேட்பாளர்கள்

தமிழகத்தில், தேர்தலில் போட்டியிடும், முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள், வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இரைத்துள்ளதால், தேர்தல் முடிவு எப்படி அமையும் என்பதை, கணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 வாங்கியாச்சு,நோட்டு,யாருக்கு,ஓட்டு!

பணம் கொடுத்த அனைவரிடமும், பொதுமக்கள் வாங்கிக் கொண்டதால், அவர் கள், யாருக்கு ஓட்டளிப்பர் என்பது தெரியாமல்,கட்சிகளும், களத்தில் நிற்கும் வேட்பாளர்களும், குழப்பத்தில் தவிக்கின்றனர். தமிழகத்தில், 39 லோக்சபா தொகுதிகளுக்கும், 18 சட்டசபை தொகுதிகளுக்கும், நாளை தேர்தல் நடக்க உள்ளது.

நேரடிப் போட்டி



அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., தலைமையில், இரு கூட்டணிகளும், அ.ம.மு.க., - எஸ்.டி.பி.ஐ., கூட்டணியும், களத்தில் உள்ளன. மக்கள் நீதி மையம், நாம் தமிழர் கட்சி போன்றவை, தனித்து போட்டியிடுகின்றன. ஒவ்வொரு தொகுதியிலும், பல வேட்பாளர்கள் போட்டி யிட்டாலும், பெரும்பாலான தொகுதிகளில், அ.தி.மு.க., - தி.மு.க., கூட்டணி வேட்பாளர்கள் இடையே தான், நேரடி போட்டி நிலவுகிறது.

அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, முதல்வர், இ.பி.எஸ்., துணை முதல்வர் பன்னீர்செல்வம், தே.மு.தி.க., பொருளாளர் பிரேமலதா ஆகியோர், மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்தனர். பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், இளைஞர் அணித்

தலைவர் அன்புமணி ஆகியோர், குறிப்பிட்ட தொகுதிகளில் மட்டும், பிரசாரம்செய்தனர்.


தனியே பிரசாரம்



பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களும், சில தொகுதிகளில், பிரசாரம் செய்தனர்.தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஆகியோர், சூறாவளி பிரசாரம் செய்தனர். காங்., தலைவர் ராகுல், கம்யூனிஸ்ட் தலைவர்கள், சில தொகுதிகளில், பிரசாரம் செய்தனர்.

மக்கள் நீதி மையம் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, நடிகர் கமல்; அ.ம.மு.க., வேட்பாளர் களை ஆதரித்து, தினகரன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, சீமான் ஆகியோரும், தீவிர பிரசாரம் செய்தனர். சுயேச்சை வேட்பாளர்கள், தனியே பிரசாரம் செய்தனர்.

பொதுவாக தேர்தலில், கூட்டணி, வேட்பாளர் தேர்வு, தேர்தல் அறிக்கை, பிரசாரம் ஆகியவை, வெற்றியை தீர்மானிக்கும். அதிலும், அரசியல் கட்சி தலைவர்களின் பிரசாரம், மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி, திருப்புமுனையை ஏற்படுத்துவது உண்டு.

'டிபாசிட்' பயம்



ஆனால், இந்த தேர்தலில், தலைவர்கள் பிரசாரம் பெரிதாக எடுபடவில்லை. வேட்பாளர்கள் மற்றும் கட்சியினர் பிரசாரமும் மந்தமாக இருந்தது. குறிப்பிட்ட கட்சி வெற்றி பெற வாய்ப்புள்ளதாக, கருத்து கணிப்பு வெளியானது. அதை,மற்ற கட்சிகள் கண்டுகொள்ளவில்லை. ஏனெனில், கடைசி நேர பட்டுவாடா, அனைத்து கணிப்புகளையும் தவிடு பொடியாக்கும் என்று நம்பின.


அதை உண்மையாக்க, தேர்தல் பிரசாரம் நிறை வடைந்த நிலையில், வாக்காளர்களை கவர, பணப்

Advertisement

பட்டுவாடாவை அரசியல் கட்சியினர் துவக் கினர். ஒரு கட்சி கொடுக்கும் போது, நாம் அமைதியாக இருந்தால், 'டிபாசிட்' பறிபோய் விடும் என்ற பயத்தில், முக்கிய கட்சிகள் எல்லாம், பணப் பட்டுவாடாவில் இறங்கி விட்டன.அ.தி.மு.க., சார்பில், லோக்சபா தொகுதியில், ஓட்டுக்கு, 300 ரூபாய் முதல், 500 ரூபாய்; சட்டசபை இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில், 2,000 ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது.தி.மு.க., சார்பில், லோக்சபா தொகுதி யில், ஓட்டுக்கு, 300; சட்டசபை தொகுதியில், 1,000 ரூபாய்; அ.ம.மு.க., சார்பில், 200 முதல், 300 ரூபாய் வரை வழங்கப்பட்டுள்ளது.

முடியலையே!



சில தொகுதிகளில், அனைவருக்கும் பாரபட்ச மின்றி, பணம் வழங்கி உள்ளனர். சில தொகுதி களில், ஏழை குடும்பத்தினர், சொந்த கட்சியினர் என, 60 சதவீதம் பேருக்கு மட்டும், பணம் வழங்கி உள்ளனர்.மூன்று கட்சிகளும், பணம் வழங்கிய நிலையில், வீட்டில் உள்ள ஒவ்வொருவரும், ஒரு கட்சிக்கு ஓட்டளிக்க முடிவு செய்துள்ளனர்.

மூன்று கட்சிகளும் போட்டி போட்டு, பணம் வழங்கி உள்ளதால், பணம் பெற்றவர்கள், யாருக்கு ஓட்டளிப்பர் என்பதை, கணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வேட்பாளர்கள், கட்சி நிர்வாகிகள் என, அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்.


Advertisement

வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
19-ஏப்-201919:23:53 IST Report Abuse

Rajagopalஇப்படித் தான் அரசியல்வாந்திகள் மக்களுக்கு வரிப் பணத்தைத் திரும்ப செலுத்துகிறார்கள்.

Rate this:
K. Shanmugasundararaj - Tirunelveli,இந்தியா
17-ஏப்-201919:39:36 IST Report Abuse

K.   Shanmugasundararajஅ தி மு க , பா ஜ க கூட்டணி பணம் கொடுத்தாங்களா . ஆச்க்காரியமாக உள்ளதே.

Rate this:
Manian - Chennai,இந்தியா
20-ஏப்-201905:56:21 IST Report Abuse

Manianஇதெல்லா ஆச்சரியம். அதிமுக இல்லை என்றால் பார்லியமெண்டில் மெஜாரிட்டி வேண்டாமா? அதனை, இதை தேவையான குற்றம் (necesarry crime ) என்று சொல்லிகொள்வார்கள். ...

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
17-ஏப்-201917:37:02 IST Report Abuse

Endrum Indianரொம்ப நேர்மையானவங்களாச்சே, யாருகிட்ட காசு வாங்கினார்களோ அவங்களுக்குத்தானே ஒட்டு போடுவாங்க , ஓஹோ ரெண்டு மூணு பேர்கிட்டே வாங்கிட்டாங்களா???அப்போ ரெண்டு மூணு பேருக்கும் வோட்டு போட்டுட்டு அவங்களுக்குத்தான் ஒட்டு போட்டேன் என்று சொல்லிவிடுங்களேன் .

Rate this:
மேலும் 26 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X