பதிவு செய்த நாள் :
புதிய பிரசார, 'வீடியோ'வை வெளியிட்ட ராகுல்

தேர்தல் பிரசாரத்திற்கான, பாடல் அடங்கிய, 'வீடியோ' நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் பிரபலமாகிவிட்டதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல், பெருமிதம் தெரிவித்துள்ளார்.

 புதிய பிரசார, 'வீடியோ'வை, வெளியிட்ட, ராகுல்

கடந்த லோக்சபா தேர்தலில், சமூக வலைதளங்களை, வெகு திறமையாக, பா.ஜ., கையாண்டு, அதில் வெற்றியும் ஈட்டியது. அதுபோல, தற்போதைய தேர்தலில், சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்துவதில், காங்கிரஸ் ஆர்வம் காட்டி வருகிறது.

இந்த தேர்தலில், 'நியாய்' என்ற பெயரில், மிக முக்கியமான தேர்தல் வாக்குறுதியை, காங்கிரஸ் அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் படி, 'ஏழைகளுக்கு, ஆண்டுதோறும், 72 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்' என, அந்த கட்சி அறிவித்துள்ளது.தங்களது நட்சத்திர வாக்குறுதி யாக இதை கருதும் காங்கிரஸ், இதையே மையமாக வைத்து, 'இப்போது நியாயம்

கிடைக்கப்போகிறது' என்ற முழக்கத்துடன், தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக, பிரசார பாடல் ஒன்றும் உருவாக்கப்பட்டு உள்ளது.இரண்டு வாரங்களுக்கு முன், பாடல் வெளியிடப்பட்டது. அதில் வரிகளுக்கு ஏற்றபடி காட்சியளிக்கும் கதாபாத்திரங்கள், பிரச்னைகளை விவரித்து, சற்றே சோகத்துடன் இருந்தனர்.

இதில் இடம்பெற்றிருந்த வரிகள் சில வற்றுக்கு, தேர்தல் ஆணையம் எதிர்ப்பு தெரிவித்து, சர்ச்சையும் ஆனது. மேலும், சில திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டுமென, கட்சிக்குள்ளும் கோரிக்கைகள் எழுந்ததாக கூறப்படுகிறது. இதை யடுத்து, நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல், புதிய வீடியோவை, சமூக வலைதளமான, 'டுவிட்டர்' பக்கத்தில் வெளியிட்டார்.'

நான் தான் இந்தியன்' என்ற வரிகளை, கதா பாத்திரங்கள் அடிக்கடி கூறும் வகையில் இடம் பெற்றுள்ள அந்த பாடலில், கதாபத்திரங்களின் முகங்கள் உற்சாகத்திலும், காங்கிரஸ் கொடி, சின்னம் போன்றவற்றின் பின்னணியும் தெரியும் படிஉள்ளன.

''அனைவரையும் கவரும் வகையில் அமைந்து உள்ள இந்த பாடல், நாடு முழுவதும் ஏற்கனவே, பெரிய அளவில் பிரபலம் ஆகிவிட்டது. இந்த புதிய வீடியோ, 'நியாய்' திட்டத்தின், கருப்பொருளை,

Advertisement

நன்கு விளக்குகிறது,'' என, ராகுல் குறிப்பிட்டு உள்ளார்.'மக்களாட்சி வேண்டும்'கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் நடந்த பிரசார கூட்டத்தில், காங்., வேட்பாளரை ஆதரித்து, அந்த கட்சி தலைவர் ராகுல்பேசிய தாவது: இந்தியாவை, மக்கள் தான் ஆட்சி செய்ய வேண்டும். ஒரு தனிநபரின் சிந்தனைப் படி, ஆட்சி நடக்கக் கூடாது. நாட்டில், இப்போது, ஜனநாயகத்துக்கு, பா.ஜ., மற்றும் ஆர்.எஸ். எஸ்., அமைப்பால், ஆபத்து ஏற்பட்டுள்ளது.

தங்கள் கொள்கை, நம்பிக்கையின்படி, நாட்டில் ஆட்சி நடக்க வேண்டும் என, இவர்கள் விரும்புகின்றனர். தங்கள் கொள்கையை ஏற்காதவர்களை அழிக்க வேண்டும் என, அவர்கள் கருதுகின்றனர்.இவ்வாறு, அவர் பேசினார். - நமது டில்லி நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
17-ஏப்-201915:37:40 IST Report Abuse

அசோக்ராஜ் புலி யைப்பாத்து பூனை கோடு போட்டுக்கொண்டது. அழித்து விட்டு மீண்டும் போட்டது. அழித்து விட்டு மீண்டும் போட்டது. புது மாதிரியான விலங்கு ஆகிவிட்டது.

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
17-ஏப்-201908:45:39 IST Report Abuse

Srinivasan Kannaiyaஒரு தனிநபரின் சிந்தனைப் படி, ஆட்சி நடக்கக் கூடாது..ஐந்தாண்டுகளாக அப்படிதானே நடக்கிறது

Rate this:
Darmavan - Chennai,இந்தியா
17-ஏப்-201907:15:29 IST Report Abuse

Darmavanஅந்நிய நாட்டுக்காரி ஒருவர் இந்திய மக்களின் தலை எழுத்தை தீர்மானிப்பதை விட இந்தியன் தீர்மானிப்பது மேல்.....அவன் உன்னை போல் கொள்ளைக்காரன் இல்லை....நாட்டு பற்றுடையவன் .திருடி விட்டு நீ மாட்டும் சமயம் வந்தால் இத்தாலிக்கு ஓடிவிடுவாய். ...ஆனால் மோடி எப்போதுமே எங்களுடன் இருப்பார்..

Rate this:
Mohamed Ilyas - Karaikal,இந்தியா
17-ஏப்-201910:04:00 IST Report Abuse

Mohamed Ilyasமோடி யின் பெயர் கெட்டு கொஞ்சம் காலமாகிவிட்டது தூங்காதீர்கள் அடுத்த ஆட்சி வந்தால் அவரின் முகம் வெளிப்பட்டுவிடும் ...

Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X