அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஓட்டுகளை பெற்றுத்தருமா
மோடியின் வசீகர பேச்சு?

தமிழகத்தில், லோக்சபா தேர்தலில் உச்சகட்ட மாக, காங்., தலைவர் ராகுலும், பிரதமர் மோடியும், தென் மாவட்டங்களில், பிரசாரம் செய்தனர்.

ஓட்டுகளை, பெற்றுத்தருமா ,மோடியின், வசீகர, பேச்சு?

கடந்த, 12ம் தேதி, சேலம், கிருஷ்ணகிரி, தேனி, மதுரையில், ஹெலிகாப்டரில் சென்று ராகுல், காங்., கூட்டணியினருக்கு ஆதரவு திரட்டினார். மறுநாள், 13ம் தேதி, தேனி ஆண்டிப்பட்டி, ராமநாதபுரத்தில் ஹெலிகாப்டரில் சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார், பிரதமர் மோடி.

குறிப்பாக, இருவரும் பிரசாரம் செய்யும் அளவிற்கு, தேனி லோக்சபா தொகுதி, இந்த தேர்தலில், அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. தேனி அன்னஞ்சி விலக்கு அருகே நடந்த, பிரமாண்ட பொதுக்கூட்டத்தில், ராகுல் பங்கேற்றார். உள்ளூர், தி.மு.க.,வினர் வராத நிலையில், வெளியூர்களைச் சேர்ந்த, காங்., தொண்டர்கள் திரளாகபங்கேற்றனர்.

முதல் நாள் மேடை சரிந்து விழுந்ததால்,

அவசரம் அவசரமாக மேடையை காங்கிரசார், ஏனோ தானோ என, அமைத்திருந்தனர். மேடையின் பின்னணியில், கூட்டணி கட்சி தலைவர்களின் படங்கள், சிறிய அளவில் இடம் பெற்றிருந்தன. ஒரே ஒரு, காங்., கொடி மட்டும் கட்டப்பட்டிருந்தது. தேனி லோக்சபா தொகுதி வேட்பாளர், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் இடைத்தேர்தல் நடக்கும், பெரியகுளம், ஆண்டிப் பட்டி சட்டசபை தொகுதி களின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக, ராகுல் பிரசாரம் செய்தார்.

அரை மணி நேரத்திற்கும் மேலாக, இங்கு பேசிய ராகுல், தேர்தல் அறிக்கையை, விலாவாரியாக விவரித்தார். மோடியை அவர் தாக்கி பேசும் போது, கூட்டத்தினர் ஆரவாரம் செய்தனரே ஒழிய, ராகுல் பேச்சு, எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த வில்லை.

அவர் பேசிச் சென்ற மறுநாள், ஆண்டிப்பட்டி, எஸ்.எஸ்.புரத்தில், பார்லிமென்ட் வளாகம் போன்று அமைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான பொதுக்கூட்ட மேடையில், பிரதமர் மோடி பேசினார். அப்போது, மூன்று முறை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயர் களை, அவர் குறிப்பிட்டது, பார்வையாளர்களிடம் பெரிய வரவேற்பைபெற்றது.
'எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்து கிறேன். இருவரும் சிறப்பாக ஆட்சி செய்து, புகழ் பெற்றனர். இருவரும், ஏழைகளின் நலனுக்காக வாழ்ந்தனர். அவர்கள் கொண்டு வந்த திட்டங் களால், வறுமையில் இருந்து ஏழைகள் மீண்டனர்' எனவும், 'இது, எம்.ஜி.ஆர்., மண், ஜெயலலிதா மண்' என்றும் குறிப்பிட்டார்.காங்., - தி.மு.க.,வின் குடும்ப

Advertisement

வாரிசு, ஊழல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் கேட்டு கொண்டார்.


அத்துடன் பேச்சை முடிக்கும் நிலையில், தேனியில் நிறைவேற்றப்படும் அகல ரயில் பாதை, தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம், எய்ம்ஸ் மருத்துவமனை, ஜவுளி பூங்காவால், தேனி எப்படி பயன்பெறும் என்பதையும் தொட்டு பேசியது, பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.


மேடையில் பேசிய, முதல்வர், இ.பி.எஸ்., துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர் உதயகுமார் போன்றோர், பா.ஜ.,வினரோ என எண்ணுமளவிற்கு, மோடியை புகழ்ந்து தள்ளினர். மோடியின் இந்த வசீகர பேச்சு, தேர்தலில் ஓட்டுகளை அள்ளித் தருமா என்பது, மே, 23ல் தெரிந்துவிடும்.


Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
17-ஏப்-201917:27:07 IST Report Abuse

Endrum Indian"ஓட்டுகளை பெற்றுத்தருமா மோடியின் வசீகர பேச்சு?" இல்லவே இல்லை பணம், பணம், பணம், ஒன்று தான் டாஸ்மாக் நாட்டில் ஒட்டு பெற்றுத்தரும் காயகல்பம்/சஞ்சீவினி.

Rate this:
Naam thamilar - perth,ஆஸ்திரேலியா
17-ஏப்-201914:44:14 IST Report Abuse

Naam thamilarமோடி எல்லாம் ஒரு மனுஷன்.

Rate this:
Manithan - Chennai,இந்தியா
17-ஏப்-201910:45:41 IST Report Abuse

Manithanஅடி பலமா இருக்கு, என்ன முக்கு முக்கினாலும் கஷ்டம்தான்.

Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X