பதிவு செய்த நாள் :
'காங்.,கின் அடையாளம் என்ன தெரியுமா?'
பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு

கோர்பா, ''ஒரு குடும்பத்துக்கு அடிமையாக இருப்பது தான், காங்கிரசின் அடையாளமாக மாறிவிட்டது,'' என, பிரதமர் மோடிகுற்றம் சாட்டினார்.

 'காங்.,கின்,அடையாளம்,என்ன,தெரியுமா?' ,பிரதமர்,மோடி பரபரப்பு,பேச்சு

சத்தீஸ்கரில், முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, கோர்பா மாவட்டத்தில், நடந்த, பா.ஜ., தேர்தல் பிரசார கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது:என்னை கடுமையாக விமர்சிப்பது மட்டும் தான், காங்., தலைவருக்கு இப்போதுள்ள நோக்கமாகி விட்டது. அதனால், 'மோடிகள் அனைவரும் திருடர்கள்' என, அவர்கூறி உள்ளார்.

சத்தீஸ்கரில் உள்ள, 'சாஹு' இனத்தவர்கள்

தான், குஜராத்தில், 'மோடி' என, அழைக்கப்படு கின்றனர். அப்போது, சாஹுக்கள் அனைவரை யும் திருடர்கள் என, காங்., தலைவர் கூறுகிறாரா... தரக் குறைவான விமர்சனம் தான்,வாரிசுகளின்,'பேஷன்' ஆகி விட்டது. சத்தீஸ்கரில், காங்., ஆட்சிஅமைந்த பின், நக்சல்கள் வன்முறை, மீண்டும் தலை துாக்கிவிட்டது. இந்த வன்முறைக்கு, பா.ஜ., - எம்.எல்.ஏ., ஒருவர், சமீபத்தில் பலியாகிவிட்டார்.

நக்சலுக்கு ஆதரவாக, காங்., செயல்படுகிறது. காங்., தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதை பார்த்து, தீவிரவாதிகளும், பயங்கரவாதிகளும் தான், மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மக்களை ஏமாற்றுவ தில், காங்கிரசுக்கு டாக்டர் பட்டம் வழங்கலாம். ஒரு குடும்பத்துக்கு அடிமையாக இருப்பதே, காங்.,கின் அடையாளமாக மாறிவிட்டது.இவ்வாறு, அவர்பேசினார்.

இதைத் தொடர்ந்து, ஒடிசா மாநிலம், சம்பல்பூரில் நடந்த பிரசாரகூட்டத்தில், மோடி பேசியதாவது :மத்தியில்,காங்., தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்தபோது,1 ரூபாயில், 15 பைசா மட்டுமே, ஏழைகளை சென்றடைந்தது; மீதியை,

Advertisement

ஊழல்வாதிகள் சுரண்டிவிட்டனர். ஆனால், தற்போது, அரசின் நலத் திட்டங்களின் பலன் கள், ஏழை மக்களை முழுமையாக சென்றடை யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.


தரகர்கள் தலையீடு தடுக்கப்பட்டுள்ளது. மத்தியில், காங்., தலைமையில் இருந்த கூட்டணி அரசு மீது, தினமும் ஒரு ஊழல் புகார் கூறப்பட்டது. ஆனால், கடந்த ஐந்து ஆண்டு களில், பா.ஜ., அரசுக்கு எதிராக, எந்த ஊழல் புகாரும் இல்லை.இவ்வாறு, அவர் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
17-ஏப்-201919:43:16 IST Report Abuse

sankaseshanதேசிய கட்சிகள் வேண்டாம் என்பவர்கள் தேசத்தை விட்டு வெளியே றலாம்

Rate this:
Rajavelu E. - Gummidipoondi,இந்தியா
17-ஏப்-201916:15:38 IST Report Abuse

Rajavelu E.ஆமாம் நாங்கள் நேரு, இந்திரா, ராஜிவ் குடும்பத்தின் அடிமைகள்தான். ஆனால் மதவெறி பிடித்த மத அடிமைகள் கிடையாது.

Rate this:
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
17-ஏப்-201915:30:32 IST Report Abuse

அசோக்ராஜ் பணக்காரங்க தண்ணியடிக்க ஆலன் ஒக்டவியன் ஹ்யும் என்ற வெள்ளைக்காரர் துவங்கிய கிளப்தான் காங்கிரஸ் என்பது. விக்கியில் போட்டிருக்கிறார். பரிணாம வேறுபாடு அடைந்து இப்போது ஒரு இத்தாலி மாபியாவிடம் அடைக்கலம் ஆகியிருக்கிறது.

Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X