அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தமிழகத்தில் மோடி ஆட்சி நடக்குது:
சொல்கிறார் சந்திரபாபு நாயுடு

சென்னை, ''தமிழகத்திலும், மோடியின் ஆட்சி தான் நடக்கிறது,'' என, ஆந்திர முதல்வர், சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

 தமிழகத்தில், மோடி, ஆட்சி, நடக்குது:  சொல்கிறார், சந்திரபாபு நாயுடு


ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தி.மு.க., தலைமையகமான, சென்னை அறிவாலயத்திற்கு, நேற்று வந்தார். கட்சியினர், அமைப்புச் செயலர், ஆர்.எஸ்.பாரதி, ராஜ்யசபா, எம்.பி., - டி.கே.எஸ்.இளங்கோவன், தி.மு.க., வேட்பாளர்கள், கலாநிதி, தயாநிதி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோருடன், ஆலோசனை நடத்தினார்.

பின், சந்திரபாபு நாயுடு அளித்த பேட்டி: தமிழகத்தில் உள்ள தெலுங்கு பேசும் மக்களும், மற்றவர்களும், தி.மு.க., வேட்பாளர்களுக்கு ஓட்டளிக்க வேண்டும். தெலுங்கு மக்கள், தமிழ்

மக்கள் உறவு,அண்ணன், தம்பி உறவு போன்றது. தமிழகத்தில், அ.தி.மு.க., ஆட்சி நடக்கவில்லை; மோடி ஆட்சி தான் நடக்கிறது.

அ.தி.மு.க.,வுக்கு ஒரு ஓட்டு போட்டாலும், அது, மோடிக்குத் தான் செல்லும். தமிழக விவசாயிகள், டில்லியில்போராடிய போது, அவர்களை, மோடி கண்டு கொள்ளவில்லை. மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தில், மோசடி செய்ய முடியும் என, நிபுணர்கள் நிரூபித்துள்ளனர். எனவே, மீண்டும் ஓட்டுச் சீட்டு முறை வேண்டும் என, நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ள, 'விவிபாட் மிஷின்' வாயிலாக, யாருக்கு ஓட்டு அளித்தோம் என்பதை உறுதிப்படுத்தும் ஒப்புகைச் சீட்டு வரும்.ஓட்டுச் சீட்டு முறையில், தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படாத தால், 50 சதவீத ஒப்புகை சீட்டுகளை எண்ணி முடித்த பின், தேர்தல்முடிவுகளை அறிவிக்க வேண்டும் என, 23 அரசியல் கட்சிகள், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

ஆனால், '50 சதவீத ஒப்புகை சீட்டுகளை எண்ணினால்,முடிவுகளை அறிவிக்க, ஆறு நாட்களாகும். எனவே, ஒரு தொகுதிக்கு,

Advertisement

இரு ஓட்டுச்சாவடியில் மட்டும், ஒப்புகை சீட்டுகள் எண்ணப்படும்' என, தேர்தல் ஆணையம் வாதிட்டது. ஆனால், உச்ச நீதிமன்றம், ஐந்து ஓட்டுச் சாவடிகளில் ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும் என, தீர்ப்பு அளித்துள்ளது.

எங்களைப் பொறுத்தவரை, 50 சதவீத ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும் என்பதில் உறுதி யாக இருக்கிறோம். இதற்காக, உச்ச நீதிமன்றத் தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்வோம். தமிழகத்தில் ஆளும், அ.தி.மு.க., - மோடி அ.தி. மு.க., வாக மாறிவிட்டது. தேர்தலுக்கு பின், தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்பது நிச்சயம்.இவ்வாறு, அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
narayanan iyer - chennai,இந்தியா
23-ஏப்-201915:25:23 IST Report Abuse

narayanan iyerஇப்படித்தான் எல்லாரும் சொல்லி கொண்டு இருக்கிறார்கள் நாயுடு சார் .அப்படி இருந்தால் இவர்கள் புயலால் பாதிக்கப்பட்ட சமயத்தில் வாரிவழங்கி இருக்கமாட்டாரா மோடி அந்த புயலால் சீரழிந்த இடங்களை பார்வையிட்டு இருக்கமாட்டாரா .இவர்களும் இங்கேயிருந்தே நிதி பங்கீடை பெற்று இருக்க முடியுமே .பி ஜி பி இப்போ இணைந்து செயல்படுவது அவர்கள் கால்களை ஊன்றிக்கொள்ள மட்டுமே .

Rate this:
18-ஏப்-201900:10:24 IST Report Abuse

அருண் பிரகாஷ்தடுப்பணை கட்டியும்,20 பேரை சுட்டு கொன்ற உங்களுக்கு திமுக ஓட்டுக்காக சிகப்பு கம்பளம் விரிக்கும் என்பதில் ஆச்சர்யம் இல்லை.இவர்களுக்கு உண்மையில் மக்கள் நலன் பற்றி பேச எந்த தகுதியும் இல்லை

Rate this:
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
18-ஏப்-201917:43:36 IST Report Abuse

 nicolethomsonஉங்களின் கேள்வி நியாயமானது ...

Rate this:
bal - chennai,இந்தியா
17-ஏப்-201921:21:01 IST Report Abuse

balதிருப்பதி திருடன்.

Rate this:
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
18-ஏப்-201917:44:04 IST Report Abuse

 nicolethomson ...

Rate this:
மேலும் 29 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X