பதிவு செய்த நாள் :
வேலூர்,லோக்சபா,தொகுதி,தேர்தல்,ரத்து,கட்டுக்கட்டாக,பணம்,சிக்கியதால்,நடவடிக்கை

சென்னை: துரைமுருகன் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் கோடிக்கணக்கான ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து வேலுார் லோக்சபா தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதற்கான அறிவிப்பை ஜனாதிபதி ஒப்புதலுடன் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. ஆனால் இந்த லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட ஆம்பூர், குடியாத்தம் தொகுதி சட்டசபை இடைத்தேர்தல் ரத்து செய்யப்படவில்லை.
வேலுார் தொகுதியில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் தி.மு.க. சார்பில் போட்டியிட்டார். அ.தி.மு.க. சார்பில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் களமிறங்கினார். துரைமுருகன் வீட்டில் தேர்தலுக்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மார்ச் 30ல் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.
சோதனையில் கதிர்ஆனந்த் தன் வேட்புமனுவில் குறிப்பிட்டிருந்ததை விட கூடுதலாக வைத்திருந்த 10.50 லட்சம்

ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். இதன் தொடர்ச்சியாக துரைமுருகனுக்கு நெருக்கமான சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான சிமென்ட் கிடங்கில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது மூட்டைகளில் இருந்த 11.53 கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர். புத்தம்புது ரூபாய் நோட்டுகளாக கட்டி வைத்திருந்தனர். கட்டின் மீதிருந்த காகிதத்தில் வார்டு எண்கள் எழுதப்பட்டிருந்தன. வாக்காளர்களுக்கு வினியோகிப்பதற்காக அந்தப் பணம் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது.

இது தொடர்பாக உதவி தேர்தல்நடத்தும் அலுவலர் காட்பாடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் கதிர் ஆனந்த் உட்பட மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் மாவட்ட தேர்தல் அலுவலர் வருமான வரித்துறையினர் அளித்த அறிக்கை அடிப்படையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பினார்.
இந்த அறிக்கையை பரிசீலித்த தேர்தல் ஆணையம் வேலுார் தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய முடிவு செய்து ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பியது. அதற்கு ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து வேலுார் லோக்சபா தொகுதி தேர்தல்

ரத்து செய்யப்பட்டதாக நேற்று முறைப்படி தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதேநேரம் வேலுார் மாவட்டத்திற்கு உட்பட்ட ஆம்பூர், குடியாத்தம் சட்டசபை தொகுதிகளுக்கு திட்டமிட்டபடி நாளை இடைத்தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறியதாவது:
பணம் பறிமுதல் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் அறிக்கை அளித்தனர். வேட்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. வேலுாருக்கு மீண்டும் எப்போது தேர்தல் என்பதை தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும்.இவ்வாறு அவர் கூறினார்.
துரைமுருகன் கூறுகையில் ''தேர்தலை ரத்து செய்தது ஜனநாயக படுகொலை '' என தெரிவித்துள்ளார்.அமைச்சர் ஜெயகுமார் கூறுகையில் ''தேர்தல் ஆணையம் முறையாக விசாரித்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது '' என்றார்.


Advertisement

வாசகர் கருத்து (41+ 119)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mohan - chennai,இந்தியா
17-ஏப்-201918:36:48 IST Report Abuse

mohanதமிழ் நாட்டில் ஒரு தொண்டன் தேர்தல் பிரச்சாரத்திற்காக, ஒரு பெண்ணை கேவலமாக பேசக்கூடாது....

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
17-ஏப்-201917:08:54 IST Report Abuse

Endrum Indianஇது மிகவும் தவறான நடவடிக்கை. யாரிடமிருந்து பணம் சிக்கியதோ அந்த நபரையும் , அவர் ரத்த உறவுகளையும் 50 வருடம் வரை தேர்தலில் நிற்கக்கூடாது என்ற தீர்ப்பை அளித்து விட்டு அங்கு தேர்தல் நடத்தவேண்டும், ரெண்டு மூணு தடவை இப்படி செய்தாலே போதும் , அவன் அவன் கொஞ்சம் நல்ல விதமாக இருப்பான்.

Rate this:
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
17-ஏப்-201916:38:32 IST Report Abuse

M.COM.N.K.K.உண்மையான தேர்தல் ரத்து என்பது வேலூர் தொகுதிக்கு உட்பட்ட தமிழக சட்டசபை தொகுதிகளான ஆம்பூர் மற்றும் குடியாத்தம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலையும் ரத்து செய்திருக்க வேண்டும். அதுதான் உண்மையான ரத்தாக கருதப்படும்

Rate this:
மேலும் 38 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X