பா.ஜ.,வுக்கு ஓட்டு போடாவிட்டால்...குஜராத் எம்.எல்.ஏ., மிரட்டலால் சர்ச்சை

Updated : ஏப் 17, 2019 | Added : ஏப் 17, 2019 | கருத்துகள் (12)
Advertisement
 பா.ஜ.,வுக்கு ஓட்டு போடாவிட்டால்...குஜராத் எம்.எல்.ஏ., மிரட்டலால் சர்ச்சை

ஆமதாபாத் :''பிரதமர் மோடி, ஒவ்வொரு ஓட்டுச் சாவடியிலும், கேமரா பொருத்தி கண்காணித்து வருகிறார். பா.ஜ.,வுக்கு ஓட்டுப் போடாதவர்களுக்கு, எந்த உதவியும் கிடைக்காது,'' என, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த, பா.ஜ., - எம்.எல்.ஏ., ரமேஷ் கடாரா பேசியது, சர்ச்சையைஏற்படுத்தி உள்ளது.குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இங்குள்ள பதேபூர் தொகுதியைச் சேர்ந்த, பா.ஜ., - எம்.எல்.ஏ., ரமேஷ் கடாரா, லோக்சபா தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசியதாவது:இந்த முறை, யாரும் ஏமாற்ற முடியாது. ஒவ்வொரு ஓட்டுச் சாவடியிலும், கேமரா பொருத்தி, பிரதமர் மோடிகண்காணித்து வருகிறார். பா.ஜ.,வுக்கு ஓட்டளித்தது யார், காங்கிரசுக்கு ஓட்டளித்தது யார் என்பது தெரிந்து விடும், பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்காதவர்களுக்கு, வேலை வாய்ப்பு உள்ளிட்ட எந்த உதவியும்




கிடைக்காது.பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்காதவர்களுக்கு, நலத் திட்டங்களும் பெரிய அளவில் செயல்படுத்தப்பட மாட்டாது. எனவே, வாக்காளர்கள், சிந்தித்து ஓட்டளிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.இது, சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, அவருக்கு, தேர்தல் ஆணையம், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
17-ஏப்-201913:00:53 IST Report Abuse
ஆரூர் ரங் 39இல் ஒரே ஒரு எம்பி மட்டுமே கொடுத்த தமிழகத்துக்குத்தான் மோதி ஆட்சியில் அதிக பேருக்கு முத்ரா கடன் கிடைத்துளளது .புதிய இன்சூரன்ஸ் திட்டத்திலும் பயிர்காப்பீட்டு இன்சூரன்ஸிலும்கூட தமிழர்கள்தான் அதிக பலன் பெற்றனர் .இந்தாண்டு முதுகலை மருத்துவ நீட் தேர்வில் தமிழர்கள்தான் அதிகம் தேர்வாகியுள்ளனர் பிரதமர் மலிவுவிலை செலவு வீடு கட்டும் திட்டத்தில் அதிகபட்ச வீடுகள் கட்டப்பட்டது தமிழ்நாட்டில்தான். எனவே இவர் விஷயம்தெரியாமல் பேசியுள்ளார்
Rate this:
Share this comment
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
24-ஏப்-201914:26:56 IST Report Abuse
Malick Rajaஆரூர் ராங் விஷ விஷமமா சொல்லியதும் அறிவுடைமைக்கு எடுத்துக்காடுதானோ...
Rate this:
Share this comment
Cancel
Mohamed Ilyas - Karaikal,இந்தியா
17-ஏப்-201910:01:28 IST Report Abuse
Mohamed Ilyas இதற்கு பெயர் தான் பாசிசம் , அவர்களுக்கு காலம் காலமாக RSS ஊட்டி வளர்த்தது இது தான் அதிகாரத்துக்கு இவர்கள் வந்த பிறகு தான் இவர்களின் முகம் வெளிப்படும் , இந்த அதிகாரம் கூடும்போது மக்கள் அடிமைகளாக மாற்ற படுவர் அதை எதிர்ப்பவர்கள் கட்டம் கட்டி வீழ்த்தப்படுவார்கள் அதன் ஒரு சாம்பிள் தான் ஆண்ட்டி இந்தியன்
Rate this:
Share this comment
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
17-ஏப்-201909:59:35 IST Report Abuse
pattikkaattaan சபாஷ் இப்படித்தான் பேசணும் .. இப்படியே எல்லாரும் எல்லா தலைவர்களும் பேசுங்க .. மக்கள் உங்கள் அடிமைகள்தானே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X