அரசியல் செய்தி

தமிழ்நாடு

கணவர் சொல்லும் வேட்பாளருக்கா ஓட்டு? நிஜ, 'சக்தி' காட்டுங்க பெண்களே!

Updated : ஏப் 17, 2019 | Added : ஏப் 17, 2019 | கருத்துகள் (24)
Share
Advertisement
சுதந்திர இந்தியாவில், பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை, எட்டு கோடியாக இருந்தது. 1948ல், நாட்டில், வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி துவங்கிய போது, பல பெண்கள், தங்கள் பெயரைச் சொல்வதற்கு பதில், கணவர், தந்தை, மகன், பிரபலமான உறவினர் பெயரை சொல்லி, அவர்களது உறவுமுறைகளை குறிப்பிடுவர்.தற்போது, தேர்தல்களில் ஓட்டளிக்க அதிகமான பெண்கள் முன்வருகின்றனர்; நிலைமை மாறிவிட்டது. ஆண்

சுதந்திர இந்தியாவில், பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை, எட்டு கோடியாக இருந்தது. 1948ல், நாட்டில், வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி துவங்கிய போது, பல பெண்கள், தங்கள் பெயரைச் சொல்வதற்கு பதில், கணவர், தந்தை, மகன், பிரபலமான உறவினர் பெயரை சொல்லி, அவர்களது உறவுமுறைகளை குறிப்பிடுவர்.latest tamil newsதற்போது, தேர்தல்களில் ஓட்டளிக்க அதிகமான பெண்கள் முன்வருகின்றனர்; நிலைமை மாறிவிட்டது. ஆண் வாக்காளர்களை காட்டிலும், பெண் வாக்காளர்களே அதிகம். இருந்தபோதும், வாக்காளர் பட்டியலில், பெண் வாக்காளர்கள் பலரது பெயர்கள், அதிகளவில் விடுபட்டுள்ளது.


விடுபட்ட பெயர்கள்:

நாட்டில், 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களின் எண்ணிக்கை, 45.1 கோடி. தற்போது வாக்காளர் பட்டியலில், 43 கோடி பெண்களின் பெயர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. மீதமுள்ள, 2.1 கோடி பேரின் பெயர்கள் விடுபட்டுள்ளன. ஒவ்வொரு லோக்சபா தொகுதியிலும் சராசரியாக, 30 ஆயிரம் பெண்களின் பெயர்கள், விடுபட்டிருப்பதாகக் கூறுகின்றனர்.

கடந்த, 2017ம் ஆண்டு வெளியிடப்பட்ட, ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்றின்படி, 190 நாடுகளில், பெண், எம்.பி.,க்கள் எண்ணிக்கையில் இந்தியா, 148வது இடத்தில் தான், இருக்கிறது. 542 உறுப்பினர்கள் உடைய லோக்சபாவில், 64 பெண்கள் மட்டுமே உறுப்பினர்கள். பெண்களின் பங்களிப்பு, அரசியலில் இன்னும் அதிகம் தேவை என்பதை, இது எடுத்துக்காட்டுகிறது.

நாடு முழுவதும் உள்ள, 4,030 சட்டசபை தொகுதிகளில், 311 இடங்கள் மட்டுமே, பெண்களால் நிரப்பப்பட்டுள்ளன. பார்லி., மற்றும் சட்டசபைகளில், பெண்களுக்கு, 33 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்யும் மசோதாவை, உடனடியாக நிறைவேற்றுவதன் அவசியத்தை உணர, இந்தத் தகவலே போதும்.


latest tamil news
புரிந்து கொள்ளுங்கள்:

கடந்த, 2005-ல், 35 சதவீதமாக இருந்த, பெண்களின் வேலைவாய்ப்பு, 2018-ல், 26 சதவீதமாகக் குறைந்துள்ளது. பெண் வாக்காளர்கள் பலர் இருந்தபோதும், அவர்கள் தங்கள் ஓட்டுரிமையை முறையாகப் பயன்படுத்து கின்றனரா என்பது சந்தேகமே. பெற்றோர், கணவர், மகன்/மகள், உறவினர்கள் சொல்வதற்காக எல்லாம் ஓட்டு போடுகின்றனர். இதில், படித்த பெண்களும் விதிவிலக்கில்லை. இந்தத் தேர்தலில், பெண்கள் தாங்களே சுயமாகச் சிந்தித்து, ஓட்டளிக்க வேண்டும்.

பெண் வாக்காளர்கள் நினைத்தால், ஆட்சியை மாற்றியும் காட்டலாம்; நிலைபெறவும் வைக்கலாம். ஆனால், அவர்களது சக்தியை, அவர்கள் புரிந்துகொள்ள வேண்டுமே!

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vetri Vel - chennai,இந்தியா
18-ஏப்-201906:45:40 IST Report Abuse
Vetri Vel கையில் இருந்த பையில் இருந்த பணம் செல்லாமல் போயி.. வரிசையில் நிக்க வைத்த அடக்குமுறையாளர்களை. விரட்டிட ஓட்டளியுங்கள் மக்களே...
Rate this:
Sangeedamo - Karaikal,இந்தியா
22-ஏப்-201910:55:55 IST Report Abuse
Sangeedamoஏயப்பா கையிலும், பையிலும் வைத்திருந்ததே அவ்வளவு என்றால், மீதம் எங்கே வைத்திருந்தீர்.... எவ்வளவு வைத்திருந்தீர் உங்கள் புலப்பலை பார்த்தால் நிறைய வைத்திருந்தது போல தெரிகிறதே... நியாயமாய் சம்பாதித்த யாரும் இப்படி புலம்பல, இத்திருந்தே தெரியல மோடி வச்ச குறி தப்பலனு... ஆப்பு ரொம்ப சக்தி வாய்ந்த ஆப்பு......
Rate this:
Cancel
17-ஏப்-201917:16:49 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் ஒரு குடும்பம் என்றால் விதிதான் முடிவெடுப்பார்கள் , அதன் பிறகு யாருக்கு ஓட்டுபோடுகிறோம் என்பது அவரவர் விருப்பம் , எப்படியும் தனி ஒருவர் தான் ஓட்டளிக்க போகிறார். எங்கள் குடும்பம் தெளிவாக உள்ளோம் , அனைவரும் பிஜேபிக்கு தான் ஒட்டு போடப்போகிறோம், சொந்த பந்தங்களுக்கும் விளக்கி விட்டோம் என்ன காரணம் என்று .
Rate this:
Cancel
Rajathiraja - Coimbatore,இந்தியா
17-ஏப்-201916:51:24 IST Report Abuse
Rajathiraja 2014 தேர்தலில் என் விருப்படி தான் என் குடும்ப பெண்கள் ஓட்டளித்தனர். தப்பான கட்சிக்கு சிபாரிசு செய்தால் கடந்த 5 வருடங்களளாக அவர்கள் பட்ட கழ்டங்களால் என்னை வறுத்தெடுத்துவிட்டனர். இனியும் இந்த தப்பை செய்யக்கூடாது என்பதால் அவரவர் விருப்பத்திற்கு ஓட்டளியுங்கள் என கூறிவிட்டேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X