சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆசனூர் வனப்பகுதியில் காட்டுத் தீ

Added : ஏப் 17, 2019
Share
Advertisement
சத்தியமங்கலம்: ஆசனூர் வனத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயை, இரண்டு மணி நேரம் போராடி, வனத்துறையினர் அணைத்தனர். தாளவாடி மலைப்பகுதியில், வறட்சியின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் வனப்பகுதிகளில், திடீர், திடீரென காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. ஆசனூரை அடுத்த அரேப்பாளையம் பிரிவு அருகே, தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய வனப்பகுதியில், நேற்று மதியம், 1:00 மணியளவில் திடீரென காட்டுத்தீ

சத்தியமங்கலம்: ஆசனூர் வனத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயை, இரண்டு மணி நேரம் போராடி, வனத்துறையினர் அணைத்தனர். தாளவாடி மலைப்பகுதியில், வறட்சியின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் வனப்பகுதிகளில், திடீர், திடீரென காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. ஆசனூரை அடுத்த அரேப்பாளையம் பிரிவு அருகே, தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய வனப்பகுதியில், நேற்று மதியம், 1:00 மணியளவில் திடீரென காட்டுத்தீ பற்றியது. மளமளவென பரவி, கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதை கண்ட வாகன ஓட்டிகள், தீயணைப்பு மற்றும் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வனத் துறையினர், தீயணைப்புதுறையினருடன் இணைந்து, 2 மணி நேரம் போராடி, 3:00 மணியளவில் தீயை அணைத்தனர். பெரிய அளவில் பாதிப்பில்லை என்று தெரிவித்தனர். அதேசமயம், வாகன ஓட்டிகள் பீடி மற்றும் சிகரெட் குடிக்காமல், வனப்பகுதியில் வாகனம் ஓட்ட, வேண்டுகோள் விடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X