பொது செய்தி

தமிழ்நாடு

புறக்கணிப்பு நோட்டீஸ் வழங்கிய விவகாரம்: ஓட்டு போடுவதாக கடம்பூர் மக்கள் உறுதி

Added : ஏப் 17, 2019
Advertisement

சத்தியமங்கலம்: தேர்தல் புறகணிப்பு நோட்டீஸ் அச்சடித்து வழங்கிய விவகாரத்தில், ஓட்டு போடுவதாக, அதிகாரிகளிடம் மக்கள் தெரிவித்தனர்.
கடம்பூர் மலை, கல் கடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன், 52; மல்லியம்மன் துர்க்கம் மலைப்பகுதி மக்கள், லோக்சபா தேர்தலை, புறக்கணிப்பதால், ஓட்டு போட மாட்டார்கள் என்ற வாசகம் அடங்கிய நோட்டீஸை அச்சடித்து வினியோகித்தார். இதுகுறித்து குத்தியாலத்தூர் வி.ஏ.ஓ., கடம்பூர் போலீசில் புகார் செய்தார். இதை தொடர்ந்து, சுப்பிரமணியன், அவருக்கு நோட்டீஸ் அச்சடித்து தந்த, ஹீரி, 55, ஆகியோரின் மீது, வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் மல்லியம்மன் துர்க்கம் மலைப்பகுதியை சேர்ந்த, 10க்கும் மேற்பட்ட மக்கள், சத்தியமங்கலம் தாசில்தார் அலுவலகத்துக்கு, நேற்று சென்றனர். தேர்தல் நடத்தும் அலுவலர் விஜய் சங்கர், தாசில்தார் கார்த்திக் ஆகியோர் முன்னிலையில், 'நோட்டீசுக்கும், தங்களுக்கும் சம்பந்தமில்லை. அது தனிப்பட்ட நபர்களின் கருத்து. மொத்தமுள்ள, 435 வாக்காளர்களும், தவறாமல் வாக்களிப்போம்' என உறுதிமொழி அளித்தனர். அதிகப்படியான மக்கள் கடம்பூரில் வசிப்பதால், அடுத்து நடக்கும் தேர்தலுக்கு, கடம்பூரிலேயே ஓட்டுச்சாவடி அமைத்து தரவேண்டும் என்று, வேண்டுகோள் விடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X