பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கும் பாதுகாப்பு அறைக்கு 'சீக்ரெட் சீல்'

Added : ஏப் 17, 2019
Advertisement

ஈரோடு: ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில், தேர்தல் ஆணையத்தால் 'சீக்ரெட் சீல்' முத்திரை, ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கான அறைக்கும் வழங்கப்பட்டுள்ளது. நாளை காலை, 7:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரையிலும், ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. ஓட்டுப்பதிவு முடிந்ததும், ஓட்டு எண்ணும் மையத்துக்கு, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு கருவி, வி.வி.பேட் கொண்டு சேர்க்கப்படும். சட்டசபை தொகுதி வாரியாக, அனைத்து பெட்டிகளும் சரியாக பூட்டி, சீலிடப்பட்டுள்ளதா என்பதை வீடியோ பதிவு செய்யப்பட்டு, உள்ளே அனுமதிக்கப்படும். உள்ளே வைக்கப்படும் பெட்டிகளின் விபரங்கள், தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்படும். வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில், சட்டசபை தொகுதி வாரியாக பூட்டி, சீல் வைக்கப்படும்.இது வழக்கமானதாக இல்லாமல், தேர்தல் ஆணையத்தால், பல்வேறு நுட்பங்களுடன் அனுப்பப்பட்டுள்ளது. 'சீக்ரெட் சீல்' எனப்படும், இந்த சீல், ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் மாறுபடும். ஓட்டு எண்ணும் நாள் அன்று, ஒவ்வொரு அறையின் சீலும் ஸ்கேன் செய்யப்பட்டு, தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றமாகும். அறைக்கு வைக்கப்பட்ட சீலில் மாற்றம் இருந்தால், தேர்தல் ஆணையம் அதை தெரிவிக்கும். தவிர, ஓட்டுப்பதிவின்போது, ரகசியம் காக்கப்படும் வகையில், ஓட்டுச்சாவடி வளாகத்துக்குள் தலைமை ஓட்டுப்பதிவு அலுவலர் தவிர மற்றவர்கள் செல்போன் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அவருக்கும், பி.எஸ்.என்.எல்., சிம் கார்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த சிம் கார்டு மூலம், மாவட்ட தேர்தல் அலுவலர், உதவி தேர்தல் அலுவலர், மண்டல அலுவலர் போன்றோரை மட்டுமே தொடர்பு கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X