பொது செய்தி

தமிழ்நாடு

இறுதிக்கட்ட ஓட்டு சேகரிப்பில் ஈரோடு கணேசமூர்த்தி உருக்கம்

Added : ஏப் 17, 2019
Advertisement

ஈரோடு: ஈரோடு, லோக்சபா தொகுதி, தி.மு.க., தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் கணேசமூர்த்தி, ஈரோட்டில் நேற்று, இறுதிக்கட்ட ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பிரசாரத்தில் அவர் பேசியதாவது: மத்தியில் ஆளும் மோடி அரசு, தமிழகத்தை ஐந்து ஆண்டுகளாக, பல்வேறு நிலைகளில் வஞ்சித்து வந்துள்ளது. இதை தட்டிக்கேட்க வேண்டிய மாநில அரசு, ஊதுகுழலாக இருந்து வருகிறது. இதனால் தமிழகத்தின் நலன் பறிபோய் விட்டது. தற்போதைய பாசிச ஆட்சி தொடர்ந்தால், சமூகநீதி குழி தோண்டி புதைக்கப்படும். மத்தியில், மாநிலத்தில் ஆட்சி மாற்றம் தேவை. இதை உணர்ந்து ஓட்டளியுங்கள். நான் ஏற்கனவே எம்.பி.,யாக இருந்தபோது, தொகுதி வளர்ச்சிக்கு, பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளேன். கட்சி பாகுபாடின்றி பொதுவான நபராக இருந்து, சேவையாற்றி உள்ளேன். கடைசி வரை நேர்மையாக இருப்பேன். உங்களில் ஒருவனாக நினைத்து என்னை வெற்றி பெற செய்யுங்கள். இவ்வாறு கணேசமூர்த்தி பேசினார். இறுதிக்கட்ட பிரசாரத்தில், ஈரோடு பெரியார் நகரில் இருந்து, தி.மு.க., ம.தி.மு.க., காங்., கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், கொ.ம.தே.க., முஸ்லீம் லீக் உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சியினர், மாநகர் முழுவதும் டூவீலர் பிரசாரத்தில் ஈடுபட்டனர். பன்னீர்செல்வம் பார்க்கில், ஈ.வே.ரா., அண்ணாதுரை சிலைகள் முன், பிரசாரத்தை நிறைவு செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X