பொது செய்தி

தமிழ்நாடு

ஜெ., உத்தரவால் 248 குக்கிராமங்களுக்கு கிடைத்த குடிநீர்; எம்.எல்.ஏ., பெருமிதம்

Added : ஏப் 17, 2019
Advertisement

பெருந்துறை: சட்டசபை மதிப்பீட்டு குழுத் தலைவரும், பெருந்துறை எம்.எல்.ஏ.,வுமான தோப்பு வெங்கடாச்சலம், பெருந்துறை தொகுதியில் மேற்கொண்ட, வளர்ச்சி பணிகளை பட்டியலிட்டு, ஊத்துக்குளியில் ஓட்டு சேகரித்தார்.
பிரசாரத்தில் அவர் பேசியதாவது: பெருந்துறை தொகுதிக்கு உட்பட்ட, ஊத்துக்குளி மற்றும் குன்னத்தூருக்கு உட்பட்ட, 37 ஊராட்சிகள் முழுவதும் குடிநீர் வழங்க, 247 கோடி ரூபாய் மதிப்பில், கொடிவேரி அணையிலிருந்து, புதிய கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டம், 15 மாத காலத்தில் செயல்பாட்டுக்கு வரும். ஊத்துக்குளியை தாலுகாவாக அறிவித்து, 2.25 கோடி ரூபாய் மதிப்பில், தாலுகா அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. ஊத்துக்குளியில், 8.5 கோடி ரூபாய் மதிப்பில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் விரைவில் நடுவர் நீதிமன்றம் அமைத்து தரப்படும். செங்கப்பள்ளியில், 33 லட்சம் ரூபாய் மதிப்பில், நெடுஞ்சாலைத்துறை பயணியர் மாளிகை கட்டடம்; ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம், மொரட்டுப்பாளையத்தில், 1.20 கோடி மதிப்பில் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சிக் கூடம்; ஊத்துக்குளியில், 54 படுக்கை வசதி கொண்ட அரசு மருத்துவமனை, நவீன மருத்துவ வசதிகளுடன் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

ஊத்துக்குளியில், 2012ம் ஆண்டு நிலவரப்படி, 248 கூக்கிராமங்களுக்கு காவேரி குடிநீர் கிடைக்க, ஜெயலலிதா ஒரே உத்தரவு மூலம், 48 கோடி ரூபாய் மதிப்பீட்டு செலவில், புதிய திருப்பூர் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் காவேரி குடிநீர் வழங்கினார். ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய பகுதிகள், பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம், சென்னிமலை பேரூராட்சிகளுக்கு, கூட்டுக்குடிநீர் திட்டத்தில், நாள்தோறும் தினமும், 1 கோடியே, 30 லட்சம் லிட்டர் தண்ணீர் கூடுதலாக, காவிரி குடிநீர் வழங்கப்படுகிறது. குன்னத்தூர் பேரூராட்சியில், 50 லட்சம் ரூபாய் மதிப்பில், 1.5 லட்சம் லிட்டர் கொள்ளளவு மேல்நிலை தொட்டி அமைத்து சீரான குடிநீர் வழங்கப்படுகிறது. ஊத்துக்குளி நஞ்சராயன் குளம், 8 கோடி ரூபாய் மதிப்பில், புதிய பொலிவுடன் சீரமைக்கப்பட்டுள்ளது. பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம், சென்னிமலை பேரூராட்சிகள், விஜயமங்கலம் ஊராட்சிக்கு, புது மின் மோட்டார்கள் மூலமாக, 24 மணி நேரமும் தடையில்லா மும்முனை மின்சாரம் மூலம், ஒரு கோடியே, 30 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது. பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம், விஜயமங்கலம் ஊராட்சிகளுக்கு குடிநீர் வழங்க, தடையில்லா மின் வசதி செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் கல்வித் திட்டம், நபார்டு திட்டங்களின் மூலம், 15 கோடி ரூபாய் மதிப்பில், பள்ளிக் கட்டிடங்கள், கழிப்பிடங்கள், குடிநீர் வசதி, சுற்றுச்சுவர் உள்ளிட்ட அடிப்படை வசதி செய்து தரப்பட்டுள்ளது. பெருந்துறை தொகுதி முழுவதும், 150 கோடி ரூபாய் மதிப்பில், சாலை வசதி, வடிகால் வசதி, கழிப்பிடங்கள், பள்ளிக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. பல்லகவுண்டன்பாளையம், சரவணபுரம் மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி மற்றும் மடிக்கணினிகளை அரசு வழங்கி வருகிறது. பொங்கலுக்கு, அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும், 1,000 ரூபாய் மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு பின், தகுதியிலுள்ள ஏழை எளியோருக்கு, 2,000 ரூபாய் வழங்கப்படும். ஊத்துக்குக்குளி ரயில் நிலையத்தில், திருச்சி-பாலக்காடு பயணிகள் ரயில் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பிரசாரத்தில் பேசினார். அவருடன், கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர் திரளாக சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X