பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - தர்மபுரி

Added : ஏப் 17, 2019
Advertisement

காட்சிப் பொருளான அங்கன்வாடி கட்டடம்: அரூர் அடுத்த பேதாதம்பட்டி பஞ்., கூக்கடப்பட்டியில், செயல்பட்டு வந்த அங்கன்வாடி மையக்கட்டடம் சேதமடைந்த நிலையில் இருந்தது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், 8.50 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிதாக அங்கன்வாடி மையக்கட்டடம் கட்டப்பட்டது. பணி முடிவடைந்து, ஒரு ஆண்டுக்கு மேலாகியும், திறக்கப்படாமல் பூட்டியுள்ளது. எனவே, அங்கன்வாடி மைய கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜல்லி பெயர்ந்த சாலையால் அவதி: தர்மபுரி அடுத்த, நார்த்தம்பட்டி பஞ்., தம்மனம்பட்டியில், 150க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கிருந்து தம்மனம்பட்டி வழியாக, முக்கல்நாயக்கன்பட்டி வரை உள்ள தார்ச்சாலையில், பல இடங்களில் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள், கடும் அவதியடைந்து வருகின்றனர். இவர்களின் நலன்கருதி, இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X