பொது செய்தி

தமிழ்நாடு

சேதமான பால தடுப்புச் சுவர்: அச்சத்தில் வாகன ஓட்டிகள்

Added : ஏப் 17, 2019
Advertisement

அரூர்: கோபிநாதம்பட்டி கட்ரோடு வாணியாறு பாலத்தின் தடுப்புச் சுவர் சேதமடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர். அரூர் - சேலம் சாலையில், கோபிநாதம்பட்டி கூட்ரோட்டில், வாணியாற்றின் குறுக்கே பாலம் உள்ளது. இதன் வழியாக, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, வேலூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு தினமும் லாரி, பஸ் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், அடையாளம் தெரியாத வாகனம் மோதி, பாலத்தின் இருபுறமும், தடுப்புச் சுவர் இடிந்தது. பால தடுப்புச் சுவர் சீரமைக்கப்படாமல், ஆபத்தான நிலையில் உள்ளது. பாலம் வழியாக, சென்று வரும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இடிந்து விழுந்த தடுப்புச் சுவரை சீரமைக்க, நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X