பொது செய்தி

தமிழ்நாடு

8 வழிச்சாலை திட்டம்: அன்புமணி நம்பிக்கை

Added : ஏப் 17, 2019
Advertisement

பாலக்கோடு: ''நிதின்கட்கரியிடம் பேசி, எட்டு வழிச்சாலை திட்டத்தை கைவிட செய்வோம்,'' என, அன்புமணி கூறினார்.
இதுகுறித்து பாலக்கோட்டில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தி.மு.க., தலைவர் ஸ்டாலின், தினமும், தமிழக அரசை பற்றி பொய்யான தகவல்களை பேசி வருகிறார். எட்டு வழிச்சாலை திட்டம் தொடர்பாக பேச, அவருக்கு எந்த அருகதையும் இல்லை. தி.மு.க., இந்த திட்டத்துக்கு ஆதரவாக செயல்பட்டது. தற்போது ஸ்டாலின் முதலை கண்ணீர் வடிக்கிறார். எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக, நீதிமன்றம் சென்று, நாங்கள் தான், தடை உத்தரவை பெற்றோம். நீதி மன்றத்தில், இந்த உத்தரவை மதிப்பதாக, முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். விரைவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து, எட்டு வழிச்சாலை திட்டம் பற்றி பேசி, அதை நிறுத்த உள்ளோம். 'நீட்' தேர்வை கொண்டு வந்தது, காங்., மற்றும் தி.மு.க., தான். அனிதா இறப்புக்கு காரணம் ஸ்டாலின் தான். 'நீட்' தேர்வு தொடர்பாக, தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை, குடியரசு தலைவர் பார்வைக்கு அனுப்பி, தமிழகத்துக்கு விலக்கு பெற்று, அதை சட்டமாக்குவோம். இவ்வாறு கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X